448. இமராஜன் நிலா

ராகம்: சரஸ்வதி தாளம்: மிஸ்ரஜம்பை
இமராஜனி லாவதெ றிக்குங் கனலாலே
இளவாடையு மூருமொ றுக்கும்படியாலே
சமராகிய மாரனெ டுக்குங் கணையாலே
தனிமானுயிர் சோரும தற்கொன் றருள்வாயே
குமராமுரு காசடி லத்தன்குருநாதா
குறமாமக ளாசைத ணிக்குந்திருமார்பா
அமராவதி வாழ்வம ரர்க்கன் றருள்வோனே
அருணாபுரி வீதியி னிற்கும்பெருமாளே.

Learn The Song

Music File Hosting - Upload Audio -

Paraphrase

This song has been written in the Nayaka-Nayaki BhAva portraying the pangs of separation of the heroine from Lord Murugan. The sea, the moon, Love God, the flowery arrows, the gentle southerly breeze and the scandal-mongering women are some of the sources which aggravate the pain of separation from the Lord.

இமராஜன் நிலா அது எறிக்கும் கனலாலே (imarAja nilA athu eRikkum kanalAlE): The moon, who is known as the King of Ice, is spewing rays of fire; பனிக்கு அரசனாகிய சந்திரன் வீசுகின்ற நெருப்புக் கதிர்களாலே,

இள வாடையும் ஊரும் ஒறுக்கும் படியாலே (iLa vAdaiyum Urum oRukkum padiyAlE): the so-called gentle southerly breeze and the gossip-mongering women of the town have both conspired to cause pain to this young girl; மெல்லிய தென்றல் காற்றும், ஊர்ப் பெண்களின் ஏச்சும் வருத்துகின்ற தன்மையாலே,

சமராகிய மாரன் எடுக்கும் கணையாலே (samarAgiya mAran edukkum kaNaiyAlE ): Manmathan (Love God) is bent upon waging a war by throwing his arrows of flowers to arouse passion in her; காமப்போருக்கு என்றே மன்மதன் தொடுக்கும் மலர்ப் பாணங்களாலே,

தனி மான் உயிர் சோரும் அதற்கு ஒன்று அருள்வாயே (thani mAn uyir sOrum adhaRku ondru aruLvAyE): and this lonely deer-like damsel is suffering from separation from You. Would You care to suggest some remedy to save her life? உன்னைப் பிரிந்து தனியே தவிக்கும் மான் போன்ற இப்பெண் உயிர் சோர்ந்து போகாமல் இருக்க ஏதேனும் ஒரு வழி கூறி அருள்வாயாக.

குமரா முருகா சடிலத்தன் குருநாதா (kumAra murugA jatilaththan gurunAthA ): Oh KumarA, Oh MurugA, You are the Master of the Lord with Tresses, SivA. குமரா, முருகா, சடைமுடிப் பெருமான் சிவனுடைய குருநாதனே,

குற மாமகள் ஆசை தணிக்கும் திரு மார்பா (kuRa mAmagaL Asai thaNikkum thiru mArbA): You with Your large chest were able to quench the passion of VaLLi by embracing that damsel of the KuRavAs! குறமகள் வள்ளியின் ஆசையை அணைத்துத் தணிக்கும் திருமார்பா,

அமராவதி வாழ்வு அமரர்க்கு அன்று அருள்வோனே (amarAvathi vAzhv amararkkandr aruLvOnE): You redeemed the Kingdom of DEvEndrA and gave it to all the DEvAs! தேவலோக வாழ்க்கையை அன்று அமரர்களுக்கு அருளியவனே,

அருணாபுரி வீதியி னிற்கும் பெருமாளே.(aruNApuri veedhiyi niRkum perumALE.): You grace the streets of ThiruvaNNAmalai with Your presence, Oh Great One! திருவண்ணாமலை வீதியில் வீற்றிருக்கும் பெருமாளே.

Comments