442. ஓல மறைகள்

ராகம்: ஹம்சானந்தி தாளம்: அங்கதாளம் 1½ + 1½ + 2½ + 2 (7½)
ஓல மறைக ளறைகின்ற வொன்றது
மேலை வெளியி லொளிரும் பரஞ்சுடர்
ஓது சரியை க்ரியையும் புணர்ந்தவரெவராலும்
ஓத வரிய துரியங் கடந்தது
போத அருவ சுருபம் ப்ரபஞ்சமும்
ஊனு முயிரு முழுதுங் கலந்தது சிவஞானம்
சால வுடைய தவர்கண்டு கொண்டது
மூல நிறைவு குறைவின்றி நின்றது
சாதி குலமு மிலதன்றி யன்பர்சொனவியோமஞ்
சாரு மநுப வரமைந்த மைந்தமெய்
வீடு பரம சுகசிந்து இந்த்ரிய
தாப சபல மறவந்து நின்கழல்பெறுவேனோ
வால குமர குககந்த குன்றெறி
வேல மயில எனவந்து கும்பிடு
வான விபுதர் பதியிந்த்ரன் வெந்துயர்களைவோனே
வாச களப வரதுங்க மங்கல
வீர கடக புயசிங்க சுந்தர
வாகை புனையும் ரணரங்க புங்கவவயலூரா
ஞால முதல்வி யிமயம் பயந்தமின்
நீலி கவுரி பரைமங்கை குண்டலி
நாளு மினிய கனியெங்க ளம்பிகைத்ரிபுராயி
நாத வடிவி யகிலம் பரந்தவ
ளாலி னுதர முளபைங் கரும்புவெ
ணாவ லரசு மனைவஞ்சி தந்தருள்பெருமாளே.

Learn The Song

Music podcasts - Podcast Hosting -

Paraphrase

ஓல மறைகள் அறைகின்ற ஒன்று அது (Ola maRaigaL aRaigindra ondru adhu): It is the matchless one proclaimed by the VEdAs that loudly chant the ManthrA "OM". ஓம் என்று ஒலிக்கும் வேதங்களால் பேசப்பெறும் ஒப்பற்ற ஒன்று அது/ஓலமிடும் மறைகளால் ‘ஒப்பற்ற ஒன்று’ என்று உரைக்கப்படும் பரம்பொருள் அது.

மேலை வெளியில் ஒளிரும் பரஞ்சுடர் ( mElai veLiyil oLirum param chudar): It transcends and shines in the cosmos as the pre-eminent light. பிரமரந்திரத்திற்கும் அப்பாலுள்ள மேலைப் பெருவெளியில் ஒளிர்கின்ற அருட்பெருஞ் ஜோதி அது.

With sadhana, yogis can direct Prana, after balancing Ida and Pingala nadis, and make it course through Sushumna nadi, finally bringing it to the Sahasrara chakra at the crown of the head (also known as the thousand-petalled lotus or brahmarandra). This is a state of pure consciousness where they drift in an unbounded eternal space of bright light.

ஓது சரியை க்ரியையும் புணர்ந்தவர் எவராலும் (Odhu sariyai kriyaiyum puNarndhavar evarAlum): Those who have mastered the three methods of worship*, namely sariyai, kiriyai and yOgam, நூல்களில் சொல்லப்படும் சரியை, கிரியை, யோகம் என்ற மூன்று வழிகளை அநுசரித்தவர்களாலும்

ஓத அரிய துரியம் கடந்தது (Odha ariya thuriyam kadandhadhu): cannot even describe as It surpasses all those disciplines. சொல்லுதற்கு அரியதாகிய துரிய நிலையைக் கடந்தது அது.

போத அருவ சுருபம் ( bOdha aruva swarupam): Within the confines of perception, through both formless and idol worship, உணர்வு மயமாகிய அருவம், உருவம் என்ற இரண்டு நிலையிலும்,

ப்ரபஞ்சமும் ஊனுமுயிரு முழுதும் கலந்தது ( prapanchamum Unum uyiru muzhudhum kalandhadhu): It blends fully with the universe, the body and the soul. உலகம், உயிர், உடம்பு இவற்றோடு முழுவதாகக் கலந்தது அது.

சிவஞானம் சாலவுடைய தவர் கண்டு கொண்டது (sivanyAnam sAla vudaiya thavarkaNdu koNdadhu): It is perceived only by those saints blessed with the Supreme Knowledge of SivA. சிவஞானம் மிகுத்த தவசீலர்கள் கண்டுகொண்டது அது.

மூல நிறைவு குறைவின்றி நின்றது (mUla niRaivu kuRaivindri nindradhu): It stands alone as the primal fullness and one without any deficiency. மூலப்பொருளாக நிறைந்துள்ளதாய், குறைவேயின்றி நிற்பது அது.

சாதி குலமும் இலது(jAthi kulamum iladhu): It does not have any caste or creed whatsoever. சாதி, குலம் முதலியன இல்லாதது அது.

அன்றி அன்பர் சொன வியோமம் சாரும் அநுபவர் அமைந்து அமைந்த மெய் (andri anbar sona viyOmam sArum anubavar amaindhu amaindha mey ): Furthermore, It is the cosmic knowledge mentioned by beloved devotees, that is felt by experienced souls in tranquility, மேலும், அன்புள்ள அடியார்கள் கூறும் ஞான ஆகாயத்தைச் சார்ந்துள்ள அனுபவ சீலர்கள் பொறி புலன்கள் அவியப் பெற்று அடங்கிய அனுபவத்தில் காண்கிற உண்மைப் பொருள் ; வியோமம்(viyOmam): விண், வானம், மாகம், பரமாணு, அம்பரம்;

வீடு பரம சுக சிந்து (mey veedu parama suka sindhu): leading to the true joy of liberation, submerging in the sea of bliss. (All these describe the greatness of Your lotus feet, Oh Lord!) உண்மையான மோக்ஷ வீட்டு இன்பமும் பரம ஆனந்தக்கடலும் போன்றது அது. (இத்தனை பெருமை வாய்ந்தது நின் கழல்)

இந்த்ரிய தாப சபலம் அற வந்து (indhriya thApa chapalam aRa vandhu): When will I conquer the lusts, desires and vacillations caused by my sensory organs and ஐந்து இந்திரியங்களினால் ஏற்படுகின்ற தாக ஆசைகள், மெலிவுகள் ஒழிய அருகில் வந்து

நின் கழல் பெறுவேனோ (nin kazhal peRuvEnO): have the honour of attaining Your feet? அத்தகைய கழலினை நான் பெறும் பாக்கியம் உடையவனோ?

வால குமர குக கந்த (vAla kumara guha kandha): "Oh Youthful Kumara! GuhA! Kandha! பால குமாரா, குகனே, கந்தனே,

குன்றெறி வேல மயில (kundreRi vEla mayila ): Your Spear split the Mount Krouncha! Oh Rider of the Peacock!" கிரெளஞ்சமலையைப் பிளந்த வேலாயுதனே, மயில் வாகனனே,

என வந்து கும்பிடு வான விபுதர் பதி இந்த்ரன் வெந்துயர் களைவோனே (ena vandhu kumbidu vAna vibudhar pathiyindran venthuyar kaLaivOnE): So prayed IndrA, the leader of the Celestials, whose sufferings were eradicated by You. என்று சொல்லித் துதித்துக் கொண்டு வந்த வானத்து அமரர்களின் தலைவன் இந்திரனின் கொடும் துயரத்தைப் போக்கியவனே,

வாச களப வர துங்க மங்கல (vAsa kaLaba varathunga mangala): Fragrant sandal paste, auspicious and pure turmeric layer, வாசம் மிகுந்த சந்தனத்தையும், சிறந்த தூய்மையான மங்கலத்தையும்,

வீர கடக புய சிங்க சுந்தர (veera kadaga buyasinga sundhara): and valiant ornamental shields adorn Your shoulders, Oh majestic lion! வீரத்திற்கு அறிகுறியான கடகத்தையும் அணிந்த புயங்களை உடையவனே, சிங்க ஏறு போன்ற அழகியவனே,

வாகை புனையும் ரணரங்க புங்கவ வயலூரா (vAgai punaiyum raNaranga pungava vayalUrA): You wear the garland of victory at the battlefield, Oh great warrior! You belong to the famous place, VayalUr! வெற்றி மாலை சூடும், போர்க்களத்தில் சிறந்த வீர சிகாமணியே, வயலூரில் வாழ்பவனே,

ஞால முதல்வி இமயம் பயந்த மின் (nyAla mudhalvi imayam payandha min): She is the pristine one in the Universe; She is Mount Himavan's daughter, bright as a stroke of lightning; உலகங்களுக்குத் தலைவியும், இமவான் பெற்ற மின்னொளி போன்றவளும்,

நீலி கவுரி (neeli gavuri): She is blue-hued and is also of a golden complexion; நீல நிறமுடையவளும், பொன்னிறமுடன் கெளரி எனப்படுபவளும்

பரை மங்கை குண்டலி (parai mangai kuNdali): She is the Primal woman; She is verily of the Kundalini Power; பராசக்தியும், மங்கைப் பருவத்தாளும், குண்டலினி சக்தியாக விளங்குபவளும்,

நாளும் இனிய கனி எங்கள் அம்பிகை (nALum iniya kani engaL ambikai): She is like the ever-tasty fruit; She is our gracious Mother; என்றும் இனிய கனி போன்றவளும், எங்களுக்கு அருள் புரியும் அன்னையும்,

த்ரிபுராயி நாத வடிவி அகிலம் பரந்தவள் ( thripurAyi nAdha vadivi akilam parandhavaL): She has delivered the three worlds; She is in the form of music; She is omniscient; மூன்று உலகங்களையும் பெற்றெடுத்தவளும், நாத வடிவாக விளங்குபவளும், உலகெங்கும் பரவி நின்றவளும்,

ஆலின் உதரம் உள பைங் கரும்பு (Alin udharam uLa paing karumbu): Her belly is like the banyan leaf; She is as sweet as fresh sugarcane; ஆலிலை போன்று வயிறை உடையவளும், பசிய கரும்பு அனையவளும்,

வெண் நாவல் அரசு மனை வஞ்சி (veN nAvalarasu manai vanji): She is the consort of Lord JambunAthan, who sits under a white jambu tree (naval) in ThiruvAnaikkA; She is slim as a vanji (rattan reed) creeper; வெள்ளை நாவல் மரத்தின் கீழ் வீற்றிருக்கும் அரசன் ஜம்புநாதனின் மனைவியும் ஆன வஞ்சிக்கொடி

தந்தருள் பெருமாளே.(thandharuL perumALE.): and She is UmAdEvi who brought forth You to this world, Oh Great One! போன்ற உமாதேவி பெற்றருளிய பெருமாளே.

Comments