451. இருவர் மயலோ


ராகம் : சாவேரிமிஸ்ரசாபு (3½)
1½ + 2
இருவர் மயலோ அமளி விதமோ
எனென செயலோஅணுகாத
இருடி அயன்மா லமர ரடியா
ரிசையு மொலிதா னிவைகேளா
தொருவ னடியே னலறு மொழிதா
னொருவர் பரிவாய் மொழிவாரோ
உனது பததூள் புவன கிரிதா
னுனது கிருபாகரமேதோ
பரம குருவா யணுவி லசைவாய்
பவன முதலாகியபூதப்
படையு முடையாய் சகல வடிவாய்
பழைய வடிவாகியவேலா
அரியு மயனோ டபய மெனவே
அயிலை யிருள்மேல்விடுவோனே
அடிமை கொடுநோய் பொடிகள் படவே
அருண கிரிவாழ்பெருமாளே.

Learn The Song



Raga Saveri (Janyam of 15th mela Mayamalavagowlai)

Arohanam: S R1 M1 P D1 S    Avarohanam: S N3 D1 P M1 G3 R1 S


Paraphrase

இருவர் மயலோ (iruvar mayalO) : Is it because of the intense love You have for Your two consorts, VaLLi and DEvayAnai? வள்ளி, தேவயானை ஆகிய இரு தேவியர் மீது நீ கொண்ட ஆசையோ?

அமளி விதமோ (amaLi vidhamO) : Or is it due to the din of the festive sounds at all Your temples அல்லது உன் திருக்கோயில்களில் விதவிதமாக நடக்கும் ஆரவாரங்களோ?

எனென செயலோ (enena seyalO): or whatever activities going on around You? வேறு என்னென்ன நிகழ்ச்சிகளோ? (எனக்குத் தெரியாது)

அணுகாத இருடி அயன் மால் அமரர் அடியார் இசையும் ஒலி தான் இவை கேளாது (aNugAdha irudi ayan mAl amarar adiyAr isaiyum oli thAn ivai keLAdhu) : The loud appeals made by sages, BrahmA, Vishnu, DEvAs and all Your devotees who can never access You drown out my feeble voice and make it inaudible, உன்னை அணுக முடியாத முநிவர், பிரமன், மால், தேவர், அடியார் "முருகா முருகா" என்று (கடல் போல ஓலமிட்டு) இரைச்சல் இடுகின்ற பேரொலியால் அடியேன் முறையீடு செய்யும் சிறுகுரல் கேட்கமாட்டாது,

ஒருவன் அடியேன் அலறு மொழி தான் ஒருவர் பரிவாய் மொழிவாரோ (oruvan adiyEn alaRum mozhi thAn oruvar parivAy mozhivArO) : Will someone compassionately inform you about the lonely voice of this poor soul? (I do not know). யான் ஒருவன் மட்டும் தனியாக இங்கே அலறும் மொழிகளைப் பற்றி யாரேனும் ஒருவர் அன்போடு வந்து உன்னிடம் தெரிவிப்பார்களோ?

உனது பத தூள் புவன கிரி தான் (unadhu padhathUL buvana girithAn) : Every speck of dust on Your feet is equal to a mountain on this earth! (தேவரீருக்கு மற்றவர் உணர்த்தித் தான் உணர வேண்டும் என்பது இல்லை. யாண்டும் நீக்கமற நிறைந்த உமக்கு எல்லாம் தெரியும்.) உன் பாதத்தில் உள்ள தூசானது பூமியிலுள்ள மலைகளுக்குச் சமம். உலகங்களும் மலைகளும் தேவரீரது திருவடித் துகளே ஆகும்.

உனது கிருபா கரம் ஏதோ (unadhu kirupA karam EdhO) : Is there any measure for Your infinite compassion and grace? அப்படியென்றால் உன் திருவருள் எவ்வளவு பெரியதோ? (அங்ஙனம் இருந்தும் ஏழை மீது இரங்கி ஏனோ அருள் புரியவில்லை.)

பரம குருவாய் அணுவில் அசைவாய் (parama guruvAy aNuvil asaivAy) : You shine as the Great Master and You cause even the movement within the atom! மேலான குருமூர்த்தியாய், அணுவிலும் அசைவு ஏற்படுத்துபவனாய்,

பவன முதலாகிய பூதப் படையும் உடையாய் (pavana mudhal Agiya bUtha padaiyum udaiyAy) : You have as Your weapons the Five great Elements, starting with the Air (including Fire, Water, Earth and the Sky). காற்று முதலிய ஐம்பெரும் பூதங்களை ஆயுதமாக உடையவனே,

சகல வடிவாய் பழைய வடிவாகிய வேலா (sakala vadivAy pazhaiya vadivAgiya vElA) : You take the oldest form and all the other forms, Oh VElA! எல்லா உருவமாயும், பழமையான உருவத்திலும் அமைந்த வேலனே,

அரியும் அயனோடு அபயம் எனவே (ariyum ayanOd abayam enavE) : When Vishnu and BrahmA surrendered to You seeking Your help (to fight asuras), திருமாலும், பிரம்மனும் உன்னிடம் அடைக்கலம் புக,

அயிலை இருள் மேல் விடுவோனே (ayilai iruLmEl viduvOnE) : You threw Your Spear piercing SUran who disguised himself as darkness! உன் வேலாயுதத்தை இருள் வடிவம் எடுத்த சூரன்மேல் செலுத்தியவனே,

அடிமை கொடு நோய் பொடிகள் படவே (adimai kodu nOy podigaL padavE) : When Your servant, namely myself, suffered from the incurable disease, You reduced the disease into dust particles! இவ்வடியேனுக்கு ஏற்பட்ட (தொழு)நோயைத் தூளாக்கிய

அருண கிரிவாழ் பெருமாளே. (aruNagiri vAzh perumALE.) : You have Your abode at aruNagiri (thiruvaNNAmalai), Oh Great One! திருவண்ணாமலையில் வாழ்கின்ற பெருமாளே.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே