465. பரியகைப் பாசம்

ராகம்: ஸாரமதி தாளம்: கண்டசாபு
பரியகைப் பாசம்விட் டெறியுமக் காலனுட்
பயனுயிர்ப் போயகப் படமோகப்
படியிலுற் றாரெனப் பலர்கள்பற் றாவடற்
படரெரிக் கூடுவிட்டலைநீரிற்
பிரியுமிப் பாதகப் பிறவியுற் றேமிகப்
பிணிகளுக் கேயிளைத்துழல்நாயேன்
பிழைபொறுத் தாயெனப் பழுதறுத் தாளெனப்
பிரியமுற் றோதிடப்பெறுவேனோ
கரியமெய்க் கோலமுற் றரியினற் றாமரைக்
கமைவபற் றாசையக்கழலோர்முன்
கலைவகுத் தோதிவெற் பதுதொளைத் தோனியற்
கடவுள்செச் சேவல்கைக் கொடியோனென்
றரியநற் பாடலைத் தெரியுமுற் றோற்கிளைக்
கருணையிற் கோபுரத்துறைவோனே
அடவியிற் றோகைபொற் றடமுலைக் காசையுற்
றயருமச் சேவகப் பெருமாளே.

Learn The Song

Listen Music Files - Download Audio -

Paraphrase

பரிய கைப் பாசம் விட்டு எறியும் அக்காலனுள் (pariyakaip pAsam vitteRiyum ak kAlanuL): Yama, the God of Death, wields a thick rope from his hand (to snatch my life); பருத்ததான கைக் கயிறாகிய பாசக் கயிறை விட்டு வீசும் அந்த யமனிடத்தே

பயன் உயிர்ப் போய் அகப்பட மோக (payan uyirp pOy agappada mOga): and I willingly fell prey to that Yama and lodged my useful life with him. இந்தப் பயனுள்ள உயிர் போய் அகப்பட்டுக் கொள்ள ஆசை வைத்து,

படியில் உற்றாரெனப் பலர்கள் பற்றா(padiyil utRAr enap palargaL patRA): The so-called relatives of mine on this earth caught hold of my body firmly; பூமியில் சுற்றத்தார் எனப்படும் பலரும் என் உடலைப் பற்றிக் கொண்டு

அடல் படர் எரிக் கூடு விட்டு(adal padar erik kUdu vittu): and laid it on a funeral pyre burning intensely. பலமாகப் படர்ந்து எரியும் நெருப்பில் இந்த உடலைக் கிடத்திவிட்டு,

அலை நீரிற் பிரியும் இப் பாதகப் பிறவியுற்றே (alai neeriR piriyum ip pAthagap piRavi utRE): Later they all departed after taking a dip in the wavy water. I took such a sinful birth! தாங்கள் அலை வீசும் நீரில் குளித்துவிட்டுப் பிரிந்து போகும், பாவத்துக்கு இடம் தருகின்ற இந்தப் பிறவியை அடைந்தே,

மிகப் பிணிகளுக்கே இளைத்து உழல் நாயேன் (migap piNikaLukkE iLaiththu uzhal nAyEn): I, the lowly dog, was debilitated with many diseases and roamed about aimlessly.மிகுந்த நோய்களால் இளைத்துத் திரிகின்ற நாயினும் கீழான எனது

பிழை பொறுத்தாயெனப் பழுதறுத்து ஆளென (pizhai poRuththAy enap pazhuthu aRuththu AL ena): Saying "Please forgive my sins and protect by severing me from all defects!" குற்றங்களைப் பொறுத்தவனே என்றும், என் பிழைகளைக் களைந்து ஆண்டருள்வாய் என்றும்,

பிரியமுற்று ஓதிடப் பெறுவேனோ (piriyamutRu Othidap peRuvEnO): will I have the fortune of chanting Your glory with love? அன்பு கொண்டு நான் உன்னை ஓதிப் புகழும் பாக்கியத்தைப் பெறுவேனோ?

கரிய மெய்க் கோலமுற்ற அரியின் (kariya meyk kOlamutRa ariyin): "Vishnu, who has the complexion of dark cloud, கரிய உடலின் நிறம் கொண்ட திருமாலின்

நல் தாமரைக்கு அமைவ பற்றாசை அக் கழலோர் முன் (nal thAmaraikku amaiva patRAsai ak kazhalOr mun): offered His lotus eye* which was desired by Lord SivA wearing the anklets; நல்ல தாமரையை ஒத்த கண்ணையே மலராகக் கொள்வதற்கு ஆசை கொண்ட அந்தத் திருவடியை உடையவராம் சிவபிரானின் முன்பு

கலை வகுத்து ஓதி (kalai vaguththu Othi): to that SivA, You preached the essence of all arts, namely, the PraNava ManthrA; கலைகளின் சாரமாம் பிரணவப் பொருளை எடுத்து உபதேசித்தவன்,

வெற்பது தொளைத்தோன் (veRpathu thoLaiththOn): You pierced (with Your spear) Mount Krouncha; கிரெளஞ்ச மலையைத் தொளை செய்தவன்,

இயற் கடவுள் செச் சேவல் கைக் கொடியோன் என்று (iyaR kadavuL chech chEval kaik kodiyOn enRu): and You are the real Almighty holding the staff with the reddish Rooster!" - with these words, தகுதி வாய்ந்த கடவுள், சிவந்த சேவற் கொடியைக் கையிலே கொண்டவன் என்றெல்லாம்

அரிய நற் பாடலைத் தெரியும் உற்றோற் கிளைக்கு (ariya naR pAdalaith theriyum utROR kiLaikku): Your devotees sing Your glory in rare poems; for them and for the sake of their entire families, அருமையான நல்ல பாடல்களைத் தெரிந்து கூறும் அடியார்களின் கூட்டத்துக்காக

அருணையிற் கோபுரத்து உறைவோனே (aruNaiyiR kOburaththu uRaivOnE): You shower Your blessings seated at the temple towers of ThiruvaNNAmalai! திருவண்ணாமலையில் கோபுரத்தில் வீற்றிருப்பவனே,

அடவியில் தோகை பொற் தடமுலைக்கு ஆசையுற்று அயரும்(adaviyil thogai poR thada mulaikku Asai utRu ayarum): You lovingly embrace the bosoms of VaLLi, the peacock-like damsel of the jungle, to the point of fatigue! காட்டில் வசித்த மயில் போன்ற வள்ளியின் பெரு மார்பைத் தழுவ ஆசை கொண்டு,

அச் சேவகப் பெருமாளே. (ach sEvakap perumALE.): You are the most valorous, Oh Great One! தளர்ச்சி அடைந்த அந்தப் பராக்ரமப் பெருமாளே.

No comments:

Post a Comment

சீசி முப்புரக் காடு — JR கருத்துரை

By Smt Janaki Ramanan, Pune To read the meaning of the song cheechi muppura ( சீசி முப்புர ) in English, click the underlined hyperlink....

Popular Posts