477. எலுப்புத் தோல்

ராகம் : சிந்துபைரவி தாளம்: ஆதி
எலுப்புத் தோல்மயிர் நாடிகு ழாமிடை
இறுக்குச் சீபுழு வோடடை மூளைகள்
இரத்தச் சாகர நீர்மல மேவிய கும்பியோடை
இளைப்புச் சோகைகள் வாதம் விலாவலி
உளைப்புச் சூலையொ டேவலு வாகிய
இரைப்புக் கேவல மூலவி யாதியொடண்டவாதங்
குலைப்புக் காய்கனல் நீரிழி வீளையொ
டளைப்புக் காதடை கூனல்வி சூசிகை
குருட்டுக் கால்முட மூமையு ளூடறுகண்டமாலை
குடிப்புக் கூனமி தேசத மாமென
எடுத்துப் பாழ்வினை யாலுழல் நாயெனு
னிடத்துத் தாள்பெற ஞானச தாசிவ அன்புதாராய்
கெலிக்கப் போர்பொரு சூரர்கு ழாமுமி
ழிரத்தச் சேறெழ தேர்பரி யாளிகள்
கெடுத்திட் டேகடல் சூர்கிரி தூள்படகண்டவேலா
கிளர்ப்பொற் றோளிச ராசர மேவியெ
யசைத்துப் பூசைகொள் ஆயிப ராபரி
கிழப்பொற் காளைமெ லேறுமெ நாயகி பங்கின்மேவும்
வலித்துத் தோள்மலை ராவண னானவன்
எடுத்தப் போதுடல் கீழ்விழ வேசெய்து
மகிழ்ப்பொற் பாதசி வாயந மோஅரசம்புபாலா
மலைக்கொப் பாமுலை யாள்குற மாதினை
அணைத்துச் சீர்புலி யூர்பர மாகிய
வடக்குக் கோபுர வாசலில் மேவியதம்பிரானே.

Learn The Song

Eluppu thol

Paraphrase

எலுப்புத் தோல் மயிர் நாடி குழாம் இடை (elupputh thOl mayir nAdi kuzhAm idai): Bones, skin, hair, clusters of veins and arteries, எலும்பு, தோல், மயிர், நாடிக் குழாய்களின் நெருக்கம்,

இறுக்குச் சீ புழுவோடு அடை மூளைகள் (iRukku chee puzhuvOd adai mULaigaL): the hardened pus, worms and germs, various parts of the brain, உள் அழுந்தியுள்ள சீழ், புழு இவைகளுடன் பொருந்திய மூளைகள்,

இரத்தச் சாகர நீர் மலம் மேவிய கும்பி ஓடை(iraththa sAgara neer mala mEviya kumbiyOdai): sea of blood, water, faeces - these are all filled in this body, a slimy pond; இரத்தக் கடல்நீர், மலம் இவை எல்லாம் நிறைந்த சேற்றுக் குளத்தில், கும்பி (kumbi): mud, mire dirt, சேறு ;

இளைப்புச் சோகைகள் வாதம் விலா வலி (iLaippu sOgaigaL vAtham vilA vali): general weakness, anaemia, rheumatism, paralysis, சோர்வு, இரத்தக் குறைவால் வரும் சோகை, வாயு மிகுதலாகிய பிணி, பக்க வாதம்,

உளைப்புச் சூலையொடே வலுவாகிய இரைப்பு (uLaippu sUlaiyodE valu vAgiya iraippu): stomach ache, chUlai (another kind of stomach pain), extreme breathlessness, வயிற்று உளைவு, சூலை என்னும் நோயோடு, பலத்த மூச்சு வாங்குதல்,

கேவல மூல வியாதியொடு அண்ட வாதம் ( kEvala mUla viyAdhiyodu aNdavAtham): the worst kind of piles, swelling of the testicles, இழிவான மூல நோயுடன் விரைவாதம்,

குலைப்புக் காய் கனல் நீரிழிவு ஈளையொடு அளைப்பு(kulaippuk kAy kanal neerizhiv eeLaiyodu aLaippu): nervous debility, high fever, diabetes, bronchitis causing accumulation of phlegm, நடுக்கு வாதம், காய்கின்ற நெருப்புப் போன்ற சுரம், நீரிழிவு, கபநோயின் காரணமாக கோழையின் கலப்பு,

காது அடை கூனல் விசூசிகை (kAdhadai kUnal visUsigai): deafness, hunched back, cholera, செவிட்டுத் தன்மை, கூன், வாந்தி பேதி,

குருட்டுக் கால் முடம் ஊமை உள் ஊடு அறு கண்டமாலை (kuruttuk kAl mudam UmaiyuL UdaRu kaNta mAlai): blindness, lameness, itchy ring worm around the neck that eats the flesh from inside,- குருட்டுத் தன்மை, கால் முடமாயிருத்தல், பேச வராமை, உள் பக்கத்தே அறுத்துச் செல்லுகின்ற கழுத்தைச் சுற்றி வரும் புண்,

குடிப் புக்கு ஊனம் இதே சதமாம் என எடுத்து (kudippuk kUnam idhE satham Amena eduththu): such diseases have settled inside this miserable body; thinking that this body is everlasting, (இத்தகைய நோய்கள் எல்லாம்) குடி புகுந்த, கேடு செய்கின்ற இந்த உடலே நிலையானது என்று எடுத்துக்கொண்டு,

பாழ் வினையால் உழல் நாயேன் (pAzh vinaiyAl uzhal nAyen): I, the lowly dog, roam about aimlessly afflicted by my bad deeds. பாழ்படுத்தும் கொடிய வினையால் திரிகின்ற நாய் போன்ற அடியேன்,

உன் இடத்துத் தாள் பெற ஞான சதாசிவ அன்பு தாராய் (un idaththu thALpeRa nyAna sadhAsiva anbu thArAy): To enable me to attain Your hallowed feet, kindly grant me the Auspicious and Blissful Knowledge. உனது திருவடிகளைப் பெற, ஞான மயமானதும், எப்போதும் மங்களகரமானதும் ஆகிய அன்பைத் தருவாயாக.

கெலிக்கப் போர் பொரு சூரர் குழாம் உமிழ் இரத்தச் சேறு எழ (kelikkap pOr poru sUrar kuzhAm umizh iraththa sER ezha): They came to the battlefield in order to win; but the blood gushing from the multitude of demons formed a slimy pond; வெற்றி பெறுவதன் பொருட்டுப் போர் செய்த அசுரர்களுடைய கூட்டம் கக்கும் இரத்தச் சேறு பெருக,

தேர் பரி யாளிகள் கெடுத்திட்டே (thEr pari yALigaL keduththittE): their armies of chariots, horses and elephants were all destroyed; தேர்கள், குதிரைகள், யாளிகள் (இப் படைகள் எல்லாம்) அழிபட்டு,

கடல் சூர் கிரி தூள்பட கண்ட வேலா (kadal sUr giri thUL pada kaNda vElA): The seas, Demon SUran and Mount Krouncha, along with the seven hills, were all smashed by Your Spear, Oh Lord! கடலும் சூரனும், கிரெளஞ்ச மலையுடன் எழு மலைகளும் தூள்படும்படி செய்த வேலனே,

கிளர் பொன் தோளி(kiLarp pon thOLi): She has majestic and beautiful shoulders; விளங்குகின்ற அழகிய தோள்களை உடையவள்,

சராசரம் மேவி எய் அசைத்துப் பூசைகொள் ஆயி (charAchara mEviye asaiththup pUjaikoL Ayi): She is the Mother, who mingles with all stationary and moving objects of the Universe and also influences them all and accepts all puja offerings; அசையும் பொருள், அசையாப்பொருள் இவை இரண்டிலும் கலந்தும் அவைகளை ஆட்டுவித்தும் பூஜை பெறுகின்ற எங்கள் அன்னை,

பராபரி (parApari): She is the all-pervasive One; பரம் பொருளானவள்,

கிழப் பொன் காளை மேல் ஏறு எம் நாயகி பங்கின் மேவும் (kizha pon kALai melERum en nAyaki pangin mEvum): She mounts Her favourite Bull, Nandi; She is Our Goddess PArvathi, and He is Her consort by Her side; (தனக்கு) உரிமையான அழகிய எருதின் மேலே ஏறி வருபவளும் எம்முடைய பிராட்டியும் ஆகிய பார்வதியின் பக்கத்தில் இருப்பவரும்,

வலித்துத் தோள் மலை ராவணன் ஆனவன் எடுத்தப் போது (valiththuth thOL malai rAvaNan Anavan eduththap pOdhu): when RAvaNan exerted the strength of his shoulders fully and attempted to lift Mount KailAsh, வன்மையுடன் ஆட்டி அசைத்து, தனது தோளால் (கயிலை) மலையை இராவணன் என்பவன் எடுத்த பொழுது,
When RAvaNan was victoriously travelling all over the world, his plane (Pushpaka) was unable to cross over Mount KailAsh. Enraged RAvaNan decided to uproot the mount using only his hands and began to shake the mount. Lord SivA simply pressed His big toe on the mount, and RAvaNan was crushed underneath. He later sang SAma GAnam in praise of Lord SivA who was pleased and let him off the mount.

உடல் கீழ் விழவே செய்து மகிழ்ப் பொன் பாத (udal keezh vizhavE seydhu magizh poRpAdha): He gleefully made Ravanas's body fall under the Mount by the force of the big toe of His lovely feet; அவனுடைய உடலைக் கீழே விழச் செய்து மகிழும் அழகிய பாதங்களை உடையவரும்,

சிவாய நமோ அர சம்பு பாலா (sivAya namO ara sambu bAlA): and He is the fundamental substance in the five- lettered ManthrA "SivAyanamaha". He is Lord SivA Sambu, and You are His son! சிவாயநம என்னும் ஐந்தெழுத்துக்கு மூலப்பொருளானவருமான சிவசம்புவின் குமாரனே,

மலைக்கு ஒப்பா முலையாள் குற மாதினை அணைத்து(malaik oppA mulaiyAL kuRamAdhinai aNaiththu): You embraced VaLLi, the KuRavAs' damsel, who has mountain-like bosoms! மலை போன்ற மார்பகங்களை உடைய குறப்பெண்ணாகிய வள்ளியைத் தழுவி,

சீர் புலியூர் பரமாகிய வடக்குக் கோபுர வாசலில் மேவிய தம்பிரானே. (seerpuliyUr paramAgiya vadakku gOpura vAsalil mEviya thambirAnE.): In this famous town called PuliyUr (Chidhambaram), You remain the highest principle by the side of the northern temple tower, Oh Unique Lord! பெருமை வாய்ந்த புலியூர் என்னும் சிதம்பரத்தில் மேலான பொருளாய்ச் சிறந்து விளங்கும் வடக்குக் கோபுர வாசலில் வீற்றிருக்கும் தனிப்பெரும் தலைவனே.

No comments:

Post a Comment

சீசி முப்புரக் காடு — JR கருத்துரை

By Smt Janaki Ramanan, Pune To read the meaning of the song cheechi muppura ( சீசி முப்புர ) in English, click the underlined hyperlink....

Popular Posts