345. எட்டுடன் ஒரு
ராகம் : த்விஜாவந்தி தாளம் : ஆதி 2 களை எட்டுட னொருதொளை வாயா யதுபசு மட்கல மிருவினை தோயா மிகுபிணி யிட்டிடை செயவொரு போதா கிலுமுயிர் நிலையாக எப்படி யுயர்கதி நாமே றுவதென எட்பகி ரினுமிது வோரார் தமதம திச்சையி னிடருறு பேரா சைகொள்கட லதிலேவீழ் முட்டர்க ணெறியினில் வீழா தடலொடு முப்பதி னறுபதின் மேலா மறுவரு முற்றுத லறிவரு ஞானோ தயவொளி வெளியாக முக்குண மதுகெட நானா வெனவரு முத்திரை யழிதர ஆரா வமுதன முத்தமிழ் தெரிகனி வாயா லருளுவ தொருநாளே