333. ஆவி காப்பது


ராகம் : ஆரபி அங்கதாளம் 1½ + 2 + 2 (5½)
ஆவி காப்பது மேற்பத மாத லாற்புரு டார்த்தமி
தாமெ னாப்பர மார்த்தமதுணராதே
ஆனை மேற்பரி மேற்பல சேனை போற்றிட வீட்டொட
நேக நாட்டொடு காட்டொடுதடுமாறிப்
பூவை மார்க்குரு காப்புதி தான கூத்தொடு பாட்டொடு
பூவி னாற்றம றாத்தனகிரிதோயும்
போக போக்யக லாத்தொடு வாழ்ப ராக்கொடி ராப்பகல்
போது போக்கியெ னாக்கையைவிடலாமோ
தேவி பார்ப்பதி சேர்ப்பர பாவ னார்க்கொரு சாக்ரஅ
தீத தீக்ஷைப ரீக்ஷைகளறவோதுந்
தேவ பாற்கர நாற்கவி பாடு லாக்ஷண மோக்ஷதி
யாக ராத்திகழ் கார்த்திகைபெறுவாழ்வே
மேவி னார்க்கருள் தேக்குது வாத சாக்ஷ ஷடாக்ஷர
மேரு வீழ்த்தப ராக்ரம வடிவேலா
வீர ராக்கத ரார்ப்பெழ வேத தாக்ஷக னாக்கெட
வேலை கூப்பிட வீக்கியபெருமாளே.

Learn The Song


Know Ragam Arabhi (Janyam of 29th mela Shankarabaranam)

Arohanam: S R2 M1 P D2 S    Avarohanam: S N3 D2 P M1 G3 R2 S

Paraphrase

From Wikipedia : Puruṣārtha literally means an "object of human pursuit". It refers to the four goals or aims of a human life. The four puruṣārthas are Dharma (righteousness, moral values), Artha (prosperity, economic values), Kama (pleasure, love, psychological values) and Moksha (liberation, spiritual values).

All four Purusarthas are important, but in cases of conflict, Dharma is considered more important than Artha or Kama in Hindu philosophy. Moksha is considered the ultimate ideal of human life. Saint Arunagirinathar regrets that he pursued Artha and Kama, without realizing the importance of righteousness and Salvation.

ஆவி காப்பது மேற்பதம் ஆதலால் ( Avi kAppadhu mERpadham Adhalal) : As safeguarding the soul in this life is the most worthwhile thing to do, உயிரைக் காத்து உய்விப்பது மேலான செயலாதலால்;

புருடார்த்தம் இதாம் என பரமார்த்தமது உணராதே (purudArththam idhAm enAp paramArththamadhu uNarAdhE ) : I ought to have known the fundamental tenets; without knowing them as the most important principle in life, உயிர்க்கு உறுதியைத் தருகின்ற உறுதிப் பொருள்கள் அறம்,பொருள், இன்பம் வீடு என்னும் நான்கே புருஷார்த்தங்கள் என்று உணர்ந்து, மேலான உண்மைப் பொருளைத் தெரிந்து கொள்ளாமல், புருடா(ஷா)ர்த்தம்( purushaarththam ) : மனிதனின் நோக்கம்/ இலக்குகள்; புருஷன் என்றால் ஆன்மா; objects to be aimed at by a man, (namely, righteousness, material things, pleasure and liberation); பரமார்த்தம் = மேலான பொருள், உண்மைப் பொருள், வீடுபேறு;

ஆனை மேற் பரி மேற் பல சேனை போற்றிட (Anai mER pari mER pala sEnai pOtrida) : I enjoyed rides on elephants and horses, much to the admiration of many soldiers,

வீட்டொடு அநேக நாட்டொடு காட்டொடு தடுமாறி (veettodu anEga nAttodu kAttodu thadumARi) : and roamed around aimlessly away from my home in many countries and forests;

பூவைமார்க்கு உருகாப் புதிதான கூத்தொடு பாட்டொடு (pUvaimArkku urugAp pudhidhAna kUththodu pAttodu) : I indulged lavishly in women, and came up with new songs and dances,

பூவின் நாற்றம் அறாத் தன கிரி தோயும் (pUvin nAtram aRAth thana giri thOyum) : immersing myself in their mountain-like bosoms where flowery fragrance lingered.

போக போக்ய கலாத்தொடு வாழ் பராக்கொடு இராப்பகல் (bOga bOgya kalAththodu vAzh parAkkodu irAppagal) : I spend days and nights with women in lustful enjoyment and playful fights. சுகம் அனுபவிப்பதிலும், ஊடல் செய்வதிலுமான வாழ்க்கையின் விளையாடல்களிலே இரவும் பகலும்வீணாகப் பொழுது போக்கி இருந்து, பராக்கொடு (paraakkodu) : விளையாடல்களில்; போக்யம் (bogyam) : அனுபவிக்கப்படுகின்ற பொருள்கள்; கலாம் (kalaam) : displeasure, anger;

போது போக்கி என் ஆக்கையை விடலாமோ ( pOdhu pOkki en Akkayai vidalAmO) : Wasting time like this, should I just give up my body in vain?

தேவி பார்ப்பதி சேர்ப்பர பாவனார்க்கு (dhEvi pArppathi sErppara pAvanArkku) : He is the consort of DEvi PArvathi; He is the supreme form of purity; பாவனார்க்கு (pAvanaarkku) : பரிசுத்த மூர்த்தியாம் சிவனுக்கு;

ஒரு சாக்ர அதீத தீக்ஷை பரீக்ஷைகள் அறவோதும் தேவ (oru jAgra atheetha dheekshai pareekshaigaL aRavOdhum dhEva) : to that SivA, Oh Lord, You exhaustively preached the significance of PraNava and the truth that is beyond the reach of the 24 tenets of the atma tattva or the impure tattvas that govern the universe and living beings that assist the existence of soul. ஒப்பற்ற ஆத்ம தத்துவங்களுக்கு மேற்பட்டதான உபதேசங்களையும், பிரணவ விளக்கங்களையும் முழுமையாக ஓதின தேவனே ; சாக்ர அதீத (jAgra atheetha ) : ஆன்மா தத்துவங்களுடன் கூடி நிற்கும் நிலைக்கும் மேற்ப்பட்டதான; தீக்ஷை பரீக்ஷைகள் (dheekshai pareekshaigaL) : உபதேசங்களையும், உபதேச விளக்கங்களையும்;

பாற்கர நாற்கவி பாடு லாக்ஷண (bARkara nARkavi pAdu lAkshaNa) : You are the Sun of Wisdom! Oh Handsome One, You came (as ThirugnAna Sambandhar) to sing four different varieties of poetry! பாற்(ஸ்)கர (bARkara) : (ஞான) சூரியன்; நாற்கவி (naaRkavi) : One who sings four varieties of Poetry: Asu (alliteration), Mathuram (sweetness), Chiththiram (artful presentation) and ViththAram (description). (ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் எனப்படும்) நால்வகை கவிகளை பாடும் திறமை படைத்தவர்; லாக்ஷண (lAkshaNa) : handsome;

மோக்ஷ தியாக (mOksha thiyAga) : You are the deliverer of Eternal Bliss! You are the supreme sacrificer!

ராத்திகழ் கார்த்திகை பெறுவாழ்வே (rAththigazh kArththikai peRuvAzhvE) : You are the great treasure brought forth by the six Karthigai Women who appear as stars in the night!

மேவினார்க்கு அருள் தேக்கு துவாதச அக்ஷ (mEvinArkku aruL thEkku dhuvAdhasa aksha) : Upon those devotees who prostrate at Your feet, Your twelve eyes bestow abundant grace!

ஷடாக்ஷர (shadAkshara) : You are the Lord represented by the six holy letters (SaravaNabava)!

மேரு வீழ்த்த பராக்ரம வடிவேலா (mEru veezhththa parAkrama vadivElA) : You hold the sharp spear that shattered Mount Krouncha!

வீர ராக்கதர் ஆர்ப்பெழ (veera rAkkadhar Arppezha) : Oh valorous One! Making the demons scream in fear,

வேத தாக்ஷகன் நாக்கெட (vEdha dhAkshaka nAkkeda) : rendering the Master of VEdAs, BrahmA, speechless (due to His inability to interpret the PraNava ManthrA), வேத தாக்ஷகன் (vetha thAkshagan) : வேதத் தலைவனாம் பிரமன்;

வேலை கூப்பிட வீக்கிய பெருமாளே. ( vElai kUppida veekkiya perumALE.) : and stirring the oceans into a roaring screech, You wielded the spear swiftly, Oh Great One! கடல் அலறும்படி வேலாயுதத்தை விரைந்து விடுத்து அருளிய பெருமையில் மிக்கவரே!

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே