324. அடியார் மனம்


ராகம் : சாமாஅங்கதாளம் 2½ + 1½ + 1½ (5½)
அடியார்ம னஞ்சலிக்க எவராகி லும்ப ழிக்க
அபராதம் வந்து கெட்ட பிணிமூடி
அனைவோரும் வந்து சிச்சி யெனநால்வ ருஞ்சி ரிக்க
அனலோட ழன்று செத்துவிடுமாபோற்
கடையேன்ம லங்கள் முற்று மிருநோயு டன்பி டித்த
கலியோடி றந்து சுத்தவெளியாகிக்
களிகூர என்ற னுக்கு மயிலேறி வந்து முத்தி
கதியேற அன்பு வைத்துனருள்தாராய்
சடைமீது கங்கை வைத்து விடையேறு மெந்தை சுத்த
தழல்மேனி யன்சி ரித்தொர்புரமூணும்
தவிடாக வந்தெ திர்த்த மதனாக முஞ்சி தைத்த
தழல்பார்வை யன்ற ளித்தகுருநாதா
மிடிதீர அண்ட ருக்கு மயிலேறி வஞ்சர் கொட்டம்
வெளியாக வந்து நிர்த்தமருள்வோனே
மினநூல்ம ருங்குல் பொற்பு முலைமாதி ளங்கு றத்தி
மிகுமாலொ டன்பு வைத்த பெருமாளே.




Raga Sama (Janyam of 28th mela Hari Kambhoji)

Arohanam: S R2 M1 P D2 S    Avarohanam: S D2 P M1 G3 R2 S


Paraphrase

அடியார் மனஞ் சலிக்க எவராகிலும் பழிக்க (adiyAr manam salikka evarAgilum pazhikka) : If anyone abuses Your devotees making them disheartened,

அபராதம் வந்து கெட்ட பிணி மூடி (aparAdham vandhu ketta piNimUdi) : that offence will affect that abuser causing severe ailment;

அனைவோரும் வந்து சிச்சி என நால்வருஞ் சிரிக்க (aNaivOrum vandhu chichiyena nAlvarun sirikka) : all the people will gather around ridiculing that person who will become a laughing-stock;

அனலோடு அழன்று செத்து விடுமா போல் (analOdu azhandru seththu vidumA pOR) : and at the end, the person will be dead and consumed by fire. Similarly,

கடையேன் மலங்கள் முற்றும் இரு நோயுடன் (kadaiyEn malangaL mutrum iru nOyudan ) : all the three slags of the worthless me (namely, arrogance, karma and delusion), along with my two diseases (namely, good and bad deeds)

பிடித்த கலியோடு இறந்து ( pidiththa kaliyOdu iRandhu) : and the poverty that has stuck to me should all perish, என்னைப் பிடித்துள்ள தரித்திரத்தோடும் யாவுமாக அழிபட்டு, கலி (kali) : வறுமை;

சுத்த வெளியாகி களி கூர (sudhdha veLiyAgi kaLi kUra) : and, to my great delight, the cosmos of pure knowledge should be perceivable. சுத்த வெளியாகி (sudhdha veLiyAgi) : ஞான பரிசுத்த பரவெளி எனக்குப் புலப்பட்டதாகி

என்றனுக்கு மயிலேறி வந்து (endranukku mayilEri vandhu) : For that to happen, You must appear for my sake, mounted on Your peacock,

முத்தி கதியேற அன்பு வைத்து உன் அருள்தாராய் (muththigathi ERa anbu vaiththun aruLthArAy ) : and kindly bless me to reach the ultimate goal of Liberation!

சடை மீது கங்கை வைத்து விடையேறும் எந்தை சுத்த தழல் மேனியன் ( sadai meedhu gangai vaiththu vidai Erum endhai sudhdha thazhal mEniyan ) : He holds River Ganga on His tresses; He mounts the bull, Nandi; He is our Father, with the hue of pure fire;

சிரித்து ஒர் புர மூணும் தவிடாக (siriththu Or pura mUNum thavidAga) : by His mere smile, He burnt down the three mounts of Thiripuram into powder;

வந்து எதிர்த்த மதன் ஆகமும் சிதைத்த (vandhu edhirththa madhan Agamun sidhaiththa) : when Manmathan (God of Love) accosted Him, He, Lord SivA, destroyed his body

தழல் பார்வை அன்று அளித்த குருநாதா (thazhal pArvai andru aLiththa gurunAthA) : by the fiery eye (in His forehead); and, one day, from the sparks emanating from SivA's fiery eye, You were born, Oh Master!

மிடி தீர அண்டருக்கு மயிலேறி(miditheera aNdarukku mayil ERi) : To alleviate the agony suffered by the celestials, You mounted Your peacock and

வஞ்சர் கொட்டம் வெளியாக வந்து நிர்த்தம் அருள்வோனே (vanjar kottam veLiyAga vandhu nirththam aruLvOnE) : subdued the arrogance and atrocities of the wicked demons; then You came out performing Your victory dance!

மின நூல் மருங்குல் பொற்பு முலை மாது இளங் குறத்தி (mina nUl marungul poRpu mulai mAdhu iLam kuRaththi) : Her waist is as slender as the lightning or a thread, and she has lovely bosoms; She is VaLLi, the young damsel of the KuRavAs;

மிகு மாலொடு அன்பு வைத்த பெருமாளே. (migu mAlodu anbu vaiththa perumALE.) : and You love her immensely, Oh Great One!

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே