336. இத்தரணி மீதில்


ராகம்: அசாவேரி ஆதி (எடுப்பு 3/4 இடம்)
இத்தரணி மீதிற்பிறவாதே
எத்தரொடு கூடிக் கலவாதே
முத்தமிழை யோதித்தளராதே
முத்தியடி யேனுக்கருள்வாயே
தத்துவமெய்ஞ் ஞானக்குருநாதா
சத்தசொரு பாபுத் தமுதோனே
நித்தியக்ரு தாநற்பெருவாழ்வே
நிர்த்தஜெக ஜோதிப்பெருமாளே.

Learn The Song



Raga Asaveri (Janyam of 8th mela Hanumatodi)

Arohanam: S R1 M1 P D1 S    Avarohanam: S N2 S P D1 P M1 G2 R1 S

Paraphrase

Until one receives God's grace, we wander through life leading wanton lives. Studying religious literatures can be tiresome and may not lead to true divine knowledge.

இத்தரணி மீதில் பிறவாதே (iththaraNi meedhiR piRavAdhE) : In order that I don't take birth again in this world,

எத்தரொடு கூடிக் கலவாதே (eththarodu kUdik kalavAdhE) : mingle with cheats,

முத்தமிழை ஓதித் தளராதே (muththamizhai Odhi thaLarAdhE) : and tire of studying extensively the three branches of Tamil, namely literature, music and drama,

முத்தி அடியேனுக்கு அருள்வாயே (muththi adiyEnukku aruLvAyE) : kindly bless me so that I get Salvation.

தத்துவ மெய்ஞ் ஞானக் குருநாதா (thaththuva mey nyAna gurunAthA) : You are the Great Master who can teach me that true knowledge.

சத்த சொருபா (saththa sorUpa) : You have taken the form of Cosmic Sound!

புத்த அமுதோனே (puththa amudhOnE) : You are fresh as Divine Nectar! புதிய அமிர்தம் போன்றவனே,

நித்திய க்ருதா (niththiya kruthA) : You are are the grantor of emancipation or You are the doer of good deeds everyday; நித்தியவாழ்வை / மோக்ஷத்தைத் தருபவனே (அல்லது நாள்தோறும் நற்செய்கை செய்பவனே!),

நற் பெருவாழ்வே (naR peruvAzhvE) : You are the great Treasure of my life.

நிர்த்த ஜெக ஜோதிப் பெருமாளே. (nirththa jegajOthip perumALE.) : You are the Cosmic Dancer and Light of the whole world, Oh Great One! ஆடல் வல்லோனும், அகில உலகிற்கும் பேரொளியாய் விளங்குவோனுமான பெருமாளே.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே