Posts

Showing posts from 2021

விடுங்கை பதவுரை

By Mrs Devaki Iyer, Pune For a translation of this song in English, click the link vidungai விடும் கைக்கு ஒத்த உயிர்களைச் சற்றும் இரக்கம் இன்றி விட்டுப் பறிக்கின்ற (அல்லது தன்னைச் செலுத்துகின்ற) கையைப் போன்ற வலிமையானதும் கருத்ததும் ஆன) கடா உடையோனிடம் அடங்கி  எருமைக் கடாவைத் தன் வாகனமாக உடைய எமனிடத்து அகப்பட்டு, கைச்சிறையான அநேகமும்     கை வசப்பட்ட பலவித செல்வங்களும்  விழுங்கப்பட்டு அறவே முற்றிலுமாக உணவு முதலியவற்றில் செலவழிந்து/ அல்லது பொது மகளிரால் கவரப்பட்டு அறல் ஓதியர் விழியாலே ஆற்றுப் படுகையில் காணப்படும் கரிய நெளிந்த கோடுகள் போல உள்ள கூந்தலை உடைய பெண்களின் கண்களால் (ஈர்க்கப்பட்டு) விரும்பத்தக்கன போகமும் மோகமும் விரும்பியவாறு அனுபவித்த இந்திரிய சுகங்களும்    விளம்பத்தக்கன பெருமையாகச் சொல்லிக் கொள்ளக்கூடிய ஞானமும் மானமும் கல்வி, கேள்வியினால் அடைந்த அறிவும் குடிப்பிறப்பு முதலான பல பெருமைகளும், தலை நிமிர்ந்து நடக்கக்கூடிய பெருமிதமும் எல்லாம்

பிறவியலை — பதவுரை

By Mrs Devaki Iyer, Pune For a translation of this song in English, click the link piraviyalai பிறவி பிறவிகள் நடைபெறுகின்ற அலை அலைகள் நிரம்பிய, அலை எப்படி மேலும் கீழுமாக அசைகிறதோ அதுபோல் இன்பம் துன்பம் மாறி மாறி ஏற்படுகின்ற ஆற்றினில் (நதிநீர் கடலில் கலந்தாலும் அதே நீர் ஆவியாகி மேகமாய் மழையாய்ப்பொழிந்து ஓய்வில்லாது ஓடிக்கொண்டே இருப்பது போல் திரும்பத் திரும்ப அதே சுழற்சியில் மறுபடி சேருகின்ற) நதியாகிய உலகத்தில் புகுதாதே மறுபடியும் வந்து சேராத வண்ணம் பிரகிருதி ஆசைகளைத் துறந்து, நிவ்ருத்தி மார்கம் எனப்படும் ஞானமார்கத்தைக் கடைப்பிடிக்காமல்,  ஆசைவாய்ப்பட்டு மீண்டும் மீண்டும் பல செயல்கள் புரிந்து மேலும் கர்மாவைச் சேர்த்துக் கொள்வதைத் தவிர்ப்பதை விட்டு, மாந்தர் இயற்கையான ப்ரவ்ருத்தி மார்கம் உற்று எனும் உலகாயத வழியைப் பின்பற்றி அழியாதே முக்திக்கு எதிரான திசையில் சென்று மனிதப்பிறவி வீணாகி விடாமல் உறுதி குரு வாக்கிய நிச்சயமான (முக்தி தரவல்ல) (நல்ல) குருவின் உபதேச வாக்கின் (மந்திரம் என்றும் கொள்ளலாம்)

பருத்த பல் — பதவுரை

By Mrs Devaki Iyer, Pune For a translation of this song in English, click the link paruththa pal பருத்த பெரிய (சிரத்தில் மூளை இருப்பதால் பெருமைக்குரிய - எண் சாண் உடம்புக்கு பிரதானம் என்று கூறப்படும்- என்றும் கொள்ளலாம். ) பல் பல் (முதலிய அவயங்கள் கொண்ட) சிரத்தினை தலையையும் குரு கனத்த, பெரிய திறல் கரத்தினை வலிமை உடைய கைகளையும் பரித்த அப் பதத்தினை இவற்றோடு கூடிய உடலைத் தாங்குகின்ற அந்தக் கால்களையும் பரிவோடே படைத்த பொய்க்குடத்தினை அன்போடு பெற்றிருக்கின்ற ஓட்டைக்குடம் போன்ற (கணத்துக்குக்கணம் மரணத்தை நெருங்கிக்கொண்டிருக்கும்) பழிப்பு அவத்து இடத்தினை பழிக்கும் (இகழ்ச்சிக்கும்) பாபங்களுக்கும் உறைவிடமான பசிக்குடல் கடத்தினை பசி நோய்க்குக்காரணமான குடலும் உணவை விழுங்கிச் சேர்க்கும் பானையுமான பய(ம்) மேவும் எப்போது மரணம் நேருமோ அல்லது வேறு துன்பம் தாக்குமோ என்ற அச்சத்திற்கு இடமானதும் பெருத்த பித்து உரு(த்) தனை கவலையால் பித்தம் அதிகம் சுரக்கின்ற இந்த உடலை

புவிக்கு உன் பாதம்— பதவுரை

By Mrs Devaki Iyer, Pune For a translation of this song in English, click the link buvikkun patham புவிக்கு இந்த பூமிக்கு உள்ளே இருந்தாலும் (மானுடராக) உன் பாதம் அதை நினைபவர்க்கும் உன் திருப்பாதங்களை இடையறாது தியானம் செய்பவர்களுக்கும் கூட (தேவர்களை, ரிஷிகளைப்போல) கால தரிசனை இறந்த நிகழ் வரும் என மூன்று கால நிகழ்வுகளும் புலக்கண்கூடும் கண்கூடாகப் புலப்படும் ( தெரியும்) அது தனை அறியாதே என்பது தெரியாமல் (அவர்கள் காட்டிய நல் வழிகளை விட்டு விட்டு) புரட்டும் பாத சமயிகள் பொய்யை மெய் போல நாவன்மையால் காட்டும் பாவத்தில் சேர்க்கும் மார்கங்களைக் கடைப்பிடிப்பவர் நெறிக்கண் பூது படிறரை கூறும் வழிகளில் சேரும் வஞ்சகர்களை புழுக்கண் பாவம் புழுக்கள் நிறைந்த நரகம் சேர்வதற்கான பாபம் அது கொளல் பிழையாதே வந்து சேர்வது தவிர்க்க முடியாதது

நரையொடு— பதவுரை

By Mrs Devaki Iyer, Pune For a translation of this song in English, click the link naraiyodu நரையொடு பல் கழன்று வயோதிகத்தால் முடிகள் வெளுத்தும், பற்களும் விழுந்து, தோல் வற்றி தோலும் எண்ணெயின்றி வற்றிச் சுருக்கம் எடுத்து நடை அற மெத்த நொந்து கால் எய்த்து நடக்கமுடியாது முடங்கிப் போய் கால்கள் வலி மிகுந்துக களைத்து விட நயனம் இருட்டி நின்று கண்கள் ஒள் இழந்து பார்வை போய் கோல் உற்று நடை தோயா கையில் கம்பு ஒன்று துணையாகி, (பழைய கம்பீர) நடை தொய்ந்து/ தளர்ந்து போய்விட நழுவும் விடக்கை நாள் தோறும் நம் கைப்பிடியில் இருந்து தப்பி ஓடும் (நம் கட்டுப்பாட்டுக்கு அப்பால்) இந்த மாமிச உடலை ஒன்று போல் வைத்து அப்படி நேராமல் ஒரேபோல் (இளமையாக) வைக்க முயன்று நமது என மெத்த வாழ்வு உற்று என்னுடையது என்று அபிமானித்த தேகமும் சேர்த்த செல்வங்களுமாக வாழ்ந்து,

திடமிலி சற்குணமிலி—பதவுரை

By Mrs Devaki Iyer, Pune For a translation of this song in English, click the link thidamili saRguNamili திடம் இலி நல்ல மன உறுதி இல்லாதவன்; இருந்தால் அன்றோ வலிமையான புலன்களை அடக்க முடியும்! சத் குணம் இலி நல்ல குணங்கள், பகவத்கீதையில் "தெய்வீ சம்பத்" என்று ஸ்ரீ கிருஷ்ண பகவான் வர்ணிக்கும் பொறுமை, கருணை, ஈகை போன்ற நல்ல பண்புகளில் ஒன்று கூட இல்லாதவன் நல் திறம் இலி வேறு ஏதாவது செயல் திறம், சாமர்த்தியம், கலை என்று ஏதாவது உண்டோ என்றால் "இல்லை" தான் பதில் அற்புதமான செயல் இலி பிறரால் செய்ய முடியாத அரிய காரியம் ஏதாவது செய்து இருக்கிறேனோ என்றால், அதுவும் இல்லை மெய்த்தவம் இலி உண்மையாக மனதை உன்னிடத்தில் செலுத்தித் தவம் செய்திருக்கிறேனோ என்று கேட்டால், அப்படிப் பாசாங்கு வேண்டுமானால் செய்திருக்கிறேன் நல் செபம் இலி மனம் ஒருமித்து உன் திருநாமமோ, வேறு மந்திரச்சொற்களையோ ஜபித்து இருக்கிறேனோ என்று பார்த்தால், இல்லை தான் பதில். சொர்க்கமும் மீதே இடமிலி எனவே, இப்படிப்பட்ட எனக்கு மேலான சொர்க்க லோகத்தில் இடம் ஒதுக்கப்பட வாய்ப்பில்லை.

எட்டுடன் ஒரு — பதவுரை

By Mrs Devaki Iyer, Pune For a translation of this song in English, click the link ettudan எட்டு உடன் ஒரு எட்டும் ஒன்றும் சேர்ந்து ஒன்பது தொளை வாயா துவாரங்கள் வாய்க்கப் பெற்ற அது பசு மண் கலம் நிலை இல்லாத, சுடப்படாத மண்பாண்டத்தைப் போன்ற இருவினை தோயா நல்வினை தீவினை இவை இரண்டால் உண்டான உடல் மிகு பிணி இட்டு இடைசெய பல நோய்கள் வந்து இடையூறு செய்ய ஒருபோதாகிலும் உயிர் நிலையாக இந்த உடலில் உயிர்  சற்று நேரமாவது நிலைக்குமா எப்படி உயர்கதி நாம் பெறுவது என உயர்ந்த முக்தி நிலையை எப்படி முயன்று நாம் அடைவது  என்று எள் பகிரினும் சிறிய எள்ளின் துகள் அளவு கூட இது ஓரார் தம தமது இதைப்பற்றிச் சிந்திக்காதவர் அவரவர்கள் இச்சையின் இடர் உறு  ஆசைகளால் துன்பம் மிகுந்த பேராசை கொள் கடல் பேராசை எனும் கடல் அதிலே வீழ் முட்டர்கள்  அதனுள் விழுகின்ற அறிவில்லாத மூடர்கள் நெறியினில் வீழாது அடலோடு  வழிகளில் விழுந்து விடாது வீரத்தோடு முப்பதின் அறுபதின் மேலாம் அறு வரும் முற்றுதல் அறிவரு இந்தப்ரபஞ்சத்தின், மனித உடலின் மூலக்கூறுகளான (30+60+6 ) 96 தத்துவங்கங்களில் எதனாலும் அறிய முடியாத (இவற்ற...

தேவேந்திர சங்க வகுப்பு — தேவகி அய்யர் உரை

By Mrs Devaki Iyer, Pune For a translation of this song in English, click the link devendira sanga vaguppu தரணியில் அரணிய பூமியில் கோ ட்டைகளுடன் பாதுகாப்பாக இருந்து முரண் இரணியன் தன்னிடம் பகை கொண்டு எதிர்த்த இரண்யகசிபுவின் உடல் தனை நக நுதி கொடு உடலை தன் கூரிய கை நகங்களால் சாடு தாக்கிக் கொன்ற ஓங்கு நெடும் கிரி பெரிய நரசிம்ம அவதாரம் எடுத்தவள் ஓடு ஏந்து பயங்கரி கையில் பிரம்ம கபாலமாகிய மண்டை ஓடு ஏந்திய அச்சமூட்டும் உருவம் உடையவள் தமருக பரிபுர ஒலி கொடு உடுக்கை, கால் சிலம்பு, இவற்றின் ஓசைக்கு ஏற்ப (அதைத்தாளமாகக்கொண்டு) நடநவில் சரணிய இனிமையாக நடனமிடும் திருப்பாதங்கள் உடையவள்;

கட்டி முண்டக

By Mrs Devaki Iyer, Pune For a translation of this song in English, click the link katti mudaka கட்டி சுவாசக்காற்றைத் தன் இச்சையாக ஓட விடாமல் கட்டுப்படுத்தி (தன் வசமாக்கி) வாசி (பிராணவாயுவைக் குதிரையாக உருவகித்து, அதை ஒழுங்குபடுத்தி ஜீவனின்/ மனிதனின் முன்வினைப்பதிவுகளாம் குண்டலினி எனும் மாயையை எழுப்பி மேல்நிலை எனப்படும் புருவ மத்திக்குள் இருக்கும் சதாசிவ அம்சமான ஜீவாத்மாவில் சேர்ப்பது, ராஜ யோகம் அல்லது வாசி யோகம் ஆகும்) யோகப்பயிற்சியால் (ஒன்றுக்கொன்று பின்னியது போல் இட வலப்புறம் ஓடும் இடா, பிங்கலா அல்லது சந்திர சூர்ய நாடிகளில் சாதாரணமாக சஞ்சரிக்கும் ஸ்வாசக் காற்றைக் குறிப்பிட்ட கால அளவையில் உள் இழுத்தல், உள்ளே நிறுத்தி வைத்துப் பின் மெது மெதுவே வெளிவிடுதல் போன்ற பயிற்சிகளால் முதுகுத்தண்டின் நடுவில் நேராக ஓடும் சுஷூம்னா- தமிழில் சுழுமுனை - நாடியில் செலுத்தி, மூலாதாரத்தில் பாம்பு போல் 2 1/2 அங்குலத்திற்குச் சுருண்டு உறங்கும் குண்டலினி என்னும் ஜீவனின் பூர்வ கர்மங்களின் பதிவை எழுப்பி) முண்டக மூலாதாரமாகிய கமலத்தில் அரபாலி சிவபெருமானால் பாதுகாக்கப்படுகின்றன அங்கி...

தத்தனமும்

By Mrs Devaki Iyer, Pune For a translation of this song in English, click the link thathanamum தத்தனமும் தன்னுடைய செல்வங்கள் அடிமை வேலையாட்கள் சுற்றமொடு புதல்வர் உறவினர்கள், பெற்ற பிள்ளைகள் தக்க மனை இனமும் பொருத்தமான மனைவி, அவள் வழி உறவினர்களும் (அல்லது தன் சமூகத்தினரும்) மனை வாழ்வும் குடும்ப வாழ்க்கை இவை எல்லாமும் தப்பும் நிலைமை தன்னை விட்டுப்போகும் சூழ்நிலை (மரணம்) அணுகைக்கு வர நெருங்க நெருங்க விரகு உதைக்கு மறதி மிகுந்து மயல் நினைவு மனக்குழப்பம் குறுகா முன் வந்து அடைவதற்கு முன்பாகவே பக்தியுடன் உருகி பக்தியோடு மனம் உருக நித்தம் உனது அடிகள் எப்போதும் உன் திருவடிகளை பற்றும் அருள் நினைவு தருவாயே பிடித்துக்கொள்ளும் உனது அருளால் கிடைக்கும் நிலை தந்து அருள்வாய்

அரி அயன் — பதவுரை

By Mrs Devaki Iyer, Pune For a translation of this song in English, click the link ari ayan அரி காக்கும் கடவுளும் செல்வம், ஆற்றலுக்கு அதிபதியான ஆன திருமாலும், அயன் அறிவுக்குத்தலைவரான படைப்புக்கடவுள் பிரம்மாவும் ( கூட) அறியாதவர் (முறையே) யாருடைய அடியையும், முடியையும் அதாவது முதலையும் முடிவையும் அறிய முயன்று காண முடியாது திரும்பினரோ அவர், புரம் மூணும் எரி புக மூன்று புரங்களிலும் (எனும் முக்குணங்களில்) தீ மூளும்படி நகை ஏவிய நாதர் தன் சிரிப்பை அம்பு போலச் செலுத்தியவரும் ஆன சிவ பெருமான் அவிர் சடை மிசை தன் அவிழ்த்த சடையின் நடுவில் ஓர் வனிதையர் பதி முடியப்பட்ட கங்கையாகிய மங்கையின் தலைவர் சீறு அழலையும் கோபமுற்றது போல் ஒசையிடும் சுடும் நெருப்பை ஒரு கையிலும்

வதன சரோருக — பதவுரை

By Mrs Devaki Iyer, Pune For a translation of this song in English, click the link vathhana sarOruga வதன சரோருக முகமாகிய தாமரை (யும்) நயன சீலிமுக அதில் உலவும் கண்களாகிய வண்டுகள் (உம்) உடைய வள்ளி புனத்தில் நின்று வள்ளிப் பிராட்டியின் தினைப்புனத்தில் இருந்து வாராய் பதி என்னோடு (என்னுடைய) ஊர் (அதாவது திருத்தணி) வருவாய் காதம் காது அரை ஒன்றரைக்காத தூரம், ஒன்றும் ஊரும் உன் ஊருக்கு அருகாமைதான் வயலும் ஒரே இடை இதே வயலுக்கு இடையில்தான் (உள்ளது) என ஒரு கா இடை என்றெல்லாம் ஒரு சோலையின் நடுவில் இருந்து வல்லபம் அற்று தன்னுடைய வலிமை எல்லாம் இழந்து (மறந்து) மாலாய் மிகுந்த காதல் வயப்பட்டு

பொற்பதத்தினை — பதவுரை

By Mrs Devaki Iyer, Pune For a translation of this song in English, click the link poRpathaththinai பொன் பதத்தினை உன்னுடைய மேலான திருப்பாதங்களை துதித்து போற்றிப் புகழ்ந்து நல் பதத்தில் உற்ற பத்தர் அந்த நலம்தரும் பாதங்களை (அந்த உயர்ந்த பதவி/ நிலையை) அடைந்த பக்தர்களுடைய பொற்பு சிறப்புகளை(மேலான பண்புகளை) உரைத்து எடுத்துச் சொல்லி நெக்கு உருக்க தானும் உருகிக் கேட்பவர்களையும் உருகச்செய்ய அறியாதே தெரிந்து கொள்ளாமல் புத்தகப்பிதற்றை விட்டு புத்தகங்களைமட்டும் படித்து வறட்டு வேதாந்தத்தால் அல்லாமல், வித்தகத்து உனைத் துதிக்க நுண் அறிவால்/ விவேகத்தால் உன்னை ஆராதிக்க புத்தியில் கலக்கம் அற்று நினையாதே அறிவில் எந்தக் குழப்பமும் இல்லாமல் உன்னை நினையாமலும், (குறியாகக் கொள்ளாமல்)

மூளும் வினை — தேவகி ஐயர் உரை

By Mrs Devaki Iyer, Pune For the translation of the song mooLum vinai in English, click the undelined hyperlink. மூளும் அதி விரைவில் பெருகும் ( நெருப்பைப்போல) வினை சேர மனிதப் பிறவி எடுத்த நாம் செய்து சேர்த்துக்கொள்ளும் நல்ல, பெரும்பாலும் தீய வினைகளினால் மேல் கொண்டிடா நின்ற நாம் மேற்கொண்டிருக்கின்ற ஐந்து பூத ஐந்து பூதங்களின் தொகுதியான இவ்வுடலில் வெகுவாய மாயங்கள் பல விதமான கவர்ச்சிகள் தானே வந்து நெஞ்சில் மூடி நம் அறிவை மூடிவிட நெறி நீதி (அதனால்) மனிதனுக்கு வகுக்கப்பட்ட நல்ல வழிகளில் ஏதும் செ(ய்)யா (நல்ல) செயல்கள் ஏதும் செய்யாமல் வஞ்சி அதிபார மோக மிகப் பெரியதான பெண்மயக்கத்தைப் பற்றிய (சிற்றின்பத்தின்) நினைவான நினைவிலே மூழ்கி போகம் செய்வேன் காமக் கேளிக்கைகளில் ஈடுபடுகின்ற நான் அண்டர் தேட அரிதான தேவர்களுக்கும் தேடி அடைய முடியாததான ஞேயங்களாய் நின்ற ஞானத்தால் (ஞானிகளால்) அறியப்படு பொருளான நித்திய வஸ்துவை

நிராமய புராதன பதவுரை

By Mrs Devaki Iyer, Pune For the translation of the song nirAmaya in English, click the undelined hyperlink. நிர் ஆமய (உடல், மன) வியாதிகளே அண்டாத (ஐம்பூதங்களால் உண்டான சரீரங்களுக்கு உரிய - விகாரம் எனப்படும் மாற்றங்களுக்கு அப்பால் பட்ட) புராதன எப்பொழுது தோன்றிற்று என்று கூற முடியாத பழமையான பராபர எல்லாவற்றுக்கும் மேலான வர அம்ருத உயர்ந்ததும் அழிவில்லாததும் ஆன நிராச ஆசைகளை வென்ற/ துறந்த தவ ராசர்கள் தவத்தில் சிறந்தவர்கள் பரவிய (பராவிய என நீட்டல் விகாரமாக வந்தது) போற்றுகின்ற நிராயுத புர அரி ஆயுதங்கள் இன்றியே (தன் புன் சிரிப்பாலேயே) மூன்று புரங்களாகிய அசுரர்களை எரித்து அழித்தவர் (சிவபெருமான்) அச்சுதன் தன்னைச்சேர்ந்தவரை (கை)நழுவ விடாத திருமால் வேதா பிரம்மா சுர ஆலய தேவர் உலகம் தரா தல மண் உலகம் சர அசர பிராணிகள் அசைவனவும் அசையாதவையாகவும் உள்ள உயிரினங்களின் (யாவையும்) சொரூபம் இவர் ஆதியை யாவற்றுள்ளும் உறைகின்ற ஆதிமுதல் பொருளை (பரம் பொருளை) குறியாமே அடைவதைக் குறிக்கோளாகக் கொள்ளாமல் (அடைய முயலாமல்)

சிகரமருந்த — திரு இரவிக்குமார் உரை

To read the meaning and explanation for the Thiruppugazh song, click the link sigaramaruntha இந்தியாவின் ஏழு புனிதமான நகரங்களில் ('சப்த புரி', மோட்ச புரி) ஹரித்வாரும் ஒன்று. மற்றவை அயோத்தி, மதுரா, காசி, காஞ்சி, உஜ்ஜயனி, துவாரகை ஆகும். பண்டை காலங்களில் ஹரித்துவாரை மாயாபுரி என்றே அழைத்தனர். ஹரித்வாரில் 3 சக்தி பீடங்கள் உள்ளன. ஒன்று மானசா தேவி, மற்ற இரண்டும் சண்டி தேவி,மாயா தேவி ஆகியவைகளாகும். சண்டி தேவிக்கு இன்னொரு பெயர் சண்டிகா. சக்தி பீடங்கள் என்பன தக்ஷ யாக குண்டத்தில் விழுந்து உயிரை மாய்த்துக்கொண்ட சிவபத்தினியான சதி தேவியின் துண்டிக்கப்பட்ட அங்கங்கள் விழுந்த இடங்கள் ஆகும். ஹரித்வாரில் தான் மார்பு பகுதிகள் விழுந்ததாக கருதப்படுகிறது. ஈசனை அழைக்காது தக்ஷன் நடத்திய யாகத்தில் அவனது மகளான தாக்ஷாயணி என்ற சதி தேவி கணவனுக்காக நியாயம் கேட்டு வந்தும் அவளை மதியாது இருக்கவே, வெகுண்ட ஸதி அக்னி குண்டத்தில் குதித்து உயிரை விடுகிறாள். இதனை ஈசன் அவள் உடலை சுமந்து ருத்ர தாண்டவம் ஆடி விடுகிறார். அப்பொழுது தேவியின் அங்கங்கள் சிதறி விழுந்த இடங்கள் ஐம்பத்தொன்று சக்தி பீடங்களாக கருதப் படுகி...

அகர முதல — தேவகி ஐயர் உரை

By Mrs Devaki Iyer, Pune For a translation of this song in English, click the link agara muthalena அகர முதல என உரைசெய் 'அ' என்கிற ஒலி, அதன் எழுத்து வடிவில் தொடங்கும் உலகத்தில் எல்லா மொழிகளும் 'அ' என்கிற அக்ஷரத்திலேயே தொடங்கும். ஏனெனில் வாயைத்திறந்த உடன் இயல்பாக எழுகின்ற முதல் ஒலி அதுதான். இந்த 'அ' பரம் பொருளைக் குறிப்பதாக வேதம் சொல்லும். அது (அவர்) தானே அனைத்துக்கும் ஆதி, காரணம், மூலம். 'அ' என்பது படைப்புத் தொழிலையும குறிக்கும் என்பர். படைப்பு ஏற்பட்டதால், அதன் பின்புதானே காத்தல், ஒடுக்குதல் மற்ற எல்லாமே அதனால். ஒருமுறை ஒரு அரசன் யாகம் செய்தான். எல்லா ரிஷி, முனி அறிஞர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர். அரசன் ஓர் ஆயிரம் உயர் ரகப்பசுக்களை தங்கத்தால் நன்கு அலங்கரித்து, உங்களில் யார் சிறந்த அறிஞரோ அவர் எடுதாதுக் கொள்ளலாம் என அறிவித்தார். எந்த ரிஷி தன்னை முதலான அறிஞர் என்பார். இன்னார் முதலாமவர் என்று யார், எப்படித் தீர்மானிப்பது? பேசாது இருந்தார்கள். யாஞ்யவல்க்கியர் தன் ஆயிரம் சிஷ்யர்களுடன் வந்தார். சிஷ்யர்களை விட்டு அந்த ஆயிரம் பசுக்களை ஓட்டி...

பாலோ தேனோ

By Mrs Devaki Iyer, Pune For a translation of this song in English, click the link paalO thenO பாலோ தேனோ இதன் இனிமை பாலை ஒத்ததோ அல்லது தேனையோ பலவு உறு சுளை அது தானோ அல்ல அல்ல பலாப்பழத்தின் சுளையையோ வானோர் அமுதுகொல் இல்லை இல்லை இவ்வுலகத்துப் பொருள்களே அல்ல, தேவர்கள் உண்ணும் அமுதம் தான் ஒக்கும், கழை ரச பாகோ ஒருவேளை கரும்பின் சாற்றிலிருந்து எடுத்த சர்க்கரையின் பாகு எனலாமோ ஊனோடு உருகிய மகன் உண தன் உடல் தசையும் உருகிவிடுகிறாற்போல வருந்தி அழுத திரு ஞான சம்பந்தக் குழந்தைக்குப் பசியாறும்படி அருள் ஞானப் பாலோ உருகி சீர்காழிப்பதியில் அன்று உமை அன்னை கொடுத்தருளிய அவள் தன் திருமுலையில் ஊறிய ஞானப்பாலைக் கூறினாலும் தகுமோ

மயில் வகுப்பு

By Mrs Devaki Iyer, Pune For translation of the mayil vaguppu in English, click the link mayil vaguppu ஆதவனும் அம்புலியும் சூரியனும் சந்திரனும் மாசு உற களங்கம் அடையும்படியாக (கிரஹண காலத்தில் இவை இரண்டுமே நச்சுக்கிரணங்களை வெளியிடும் என அறிவியலும் ஒப்புக்கொள்கிறது; கருநிழலும் அவற்றில் படிப்படியாகப் படிந்து பின் மெதுமெதுவே விலகுகிறது; மேலும் இது அவர்கள் கீர்த்திக்கே பெரும் களங்கமாகிறது) விழுங்கி இவற்றை முறையே ராகுவும் கேதுவும் விழுங்கி உமிழும் பின் வெளிவிடும் ஆல(ம்) மருவும் விஷம் உடைய பணி இரண்டும் அந்த ராஹூ, கேதுக்களாகிய இரு பாம்புகளும்(கூட) அழுதே கலங்கித் துன்பப்பட்டு ஆறுமுகன் ஆறுமுகங்கள் கொண்ட முருகப்பெருமானும் ஐந்து முகன் பஞ்சமுகன் என்னும் சிவ பெருமானும் ஆனைமுகன் யானைமுகம் கொண்ட கணபதியும் எம் கடவுள் ஆம் என மொழிந்து நாங்கள் வணங்கும் கடவுளர்கள் (என்று ஏற்றுக்கொண்டோம், எங்களை விட்டுவிடுவாய்) என்று கூறி அகல அந்த சூர்ய, சந்திரர்களை விட்டு விலகிப் போகவும் (அவர்கள் இருவரும் தம் துன்பம் தீர முருகனை உபாசிக்க அவர் ஏவுதலினால் வாகனமான மயில்...

வேடிச்சி காவலன் வகுப்பு

By Mrs Janaki Ramanan, Pune முன்னுரை விளக்கிட முடியாத தத்துவப் பொருளாக விளங்குபவன் முருகன். அவன் அருளிலே திளைத்து, அவன் உபதேசித்த ஞானத்திலே குளித்து, அவன் மேல் வைத்த பக்தியிலே உருகிய அருணகிரிநாதருக்கு அவனை முருக பக்தர்களுக்கு ஓரளவாவது பரிச்சியம் செய்து விட வேண்டுமென்ற ஆர்வம். ஆயிரமாயிரம் திருப்புகழ்கள் இயற்றியும் ஆர்வம் அடங்கவில்லை. வேல் வகுப்பு என்றும், சீர் பாத வகுப்பு என்றும் வேடிச்சி காவலன் வகுப்பு என்றும், அவன் மகிமைகளைப் பாடிப் பாடித் தெளிவாக்க முனைந்தார். ஒரு வகுப்பு என்று எடுத்துக் கொண்டால், முருகன் பற்றிய ஒரு விஷயத்தைப் பகுத்துப் பகுத்து எடுத்துச் சொல்வது. உதாரணமாக புய வகுப்பில், அவன் புயங்களின் எழிலை, வலிமையை, வீரத்தை, தீரத்தை, அலங்காரத்தை, கருணையை, அழகான கோணங்களில் வரி வரியாய்ப் பாடுவது. வேடிச்சி காவலன் வகுப்பு விளக்குவது என்ன? முருகன் தான் முழு முதற் கடவுளான மெய்ப்பொருளாம் பரம்பொருள் என்பதையும், வேதத்தின் நாதம் என்பதையும், வேடர் குலப் பெண்ணான வள்ளி ஜீவாத்மா என்பதையும், அந்த ஜீவாத்மாவுக்குக் காவலனாய், வேடனாய், வேலைாய், விருத்தனாய் வந்து அவளை ஆட்கொண்ட பரமாத்மாவான ஷண்முக ...

 11. பூவிலியன் வாசவன் 

பூவிலியன் வாசவன் முராரிமுநி வோரமரர் பூசனைசெய்வோர் மகிழவே pUviliyan vaasavan muraarimuni vOramarar pUsanaisey vOrmakizhavE பூதரமும் எழுகடலும் ஆடஅமு தூறஅநு போகபதி னாலுலகமும் pUtharamum ezhukadalum Adaamu thURaanu pOkapathi naalulakamum தாவு புகழ் மீறிட நிசாசரர்கள் மாளவரு தானதவ நூல்தழையவே thaavupugazh meeRida nisaasararkaL maaLavaru thaanathava nUlthazhaiyavE

10. மகரசல நிதி 

மகரசல நிதிசுவற உரகபதி முடிபதற மலைகள்கிடு கிடுகிடெனவே magarasala nithisuvaRa uragapathi mudipathaRa malaigaLgidu gidugidenavE மகுடகுட வடசிகரி முகடுபட படபடென மதகரிகள் உயிர்சிதறவே magudakuda vadasikari mugadupada padapadena mathakarigaL uyirsithaRavE ககனமுதல் அண்டங்கள் கண்டதுண் டப்படக் கர்ச்சித் திரைத்தலறியே gaganamuthal andangaL kandathuN dappadak garchith thiraiththalaRiyE காரையா ழிந்நகரர் மாரைப் பிளந்துசிற கைக்கொட்டி நின்றாடுமாம் kaaraiyaazhinnagarar maaraip piLanthusiRa gaikkotti ninRaadumaam

9. உருவாய் எவர் 

     உருவாய் எவர்க்குநினை வரிதாய் அனைத்துலகும் உளதாய் உயிர்க் குயிரதாய் uruvaay evarkkuninai varithaay anaiththulagum uLathaay uyirk kuyirathaay உணர்வாய் விரிப்பரிய உரைதேர் பரப்பிரம ஒளியாய் அருட்பொருளதாய் uNarvaay virippariya uraithEr parappirama oLiyaay arutporuLathaay வருமீச னைக்களப முகனா தரித்திசையை வலமாய் மதிக்க வருமுன் varumeesa naikkaLaba muganaa thariththisaiyai valamaay mathikka varumun வளர்முருகனைக் கொண்டு தரணிவலம் வந்தான்முன் வைகுமயி லைப்புகழுமாம் vaLarmuruganaik kondu tharaNivalam vanthaanmun vaikumayi laippugazhumaam

8. வந்து ஆர்ப்பரிக்கும்

வந்தார்ப் பரிக்குமம் மிண்டுவகை தண்டதரன் வலியதூ துவர்ப்பில்லி பேய் vanthaarp parikkumam miNduvakai thaNdatharan valiyathU thuvarppilli pEy வஞ்சினாற் பேதுற மகாபூதம் அஞ்சிட வாயினும் காலினாலும் vanjinaaR pEthuRa makaapUtham anjsida vaayinum kaalinaalum பந்தாடி யேமிதித் துக்கொட்டி வடவைசெம் பவளமா கதிகாசமாப் panthaadi yEmithith thukkotti vadavaisem pavaLamaa kathikaasamaap பசுஞ்சிறைத் தலமிசைத் தனியயிற் குமரனைப்  பார்த்தன் புறக்கூவுமாம்

7. வீறான காரிகதி 

  வீறான காரிகதி முன்னோடி பின்னோடி வெங்கட் குறும்புகள் தரும் veeRaana kaarigathi munnOdi pinnOdi vengat kuRumpukaL tharum விடுபேய்க ளேகழுவன் கொலைசாவு கொள்ளிவாய் வெம்பேய் களைத்துரத்திப் vidupEyga LEkazhuvan kolaisaavu koLLivaay vempEy kaLaiththuraththip பேறான .. சரவண பவா .. என்னுமந்திரம் பேசியுச் சாடனத்தாற் pERaana ..saravaNa pavaa .. ennumanthiram pEsiyuch saadanaththaaR பிடர்பிடித் துக்கொத்தி நகநுதியி னாலுறப் பிய்ச்சுக் களித்தாடுமாம் pidarpidith thukkoththi nakanuthiyi naaluRap piychuk kaLiththaadumaam

 6. பங்கமா கியவிட 

   பங்கமா கியவிட புயங்கமா படமது பறித்துச் சிவத்தருந்திப் Bangamaagiya vida buyangamaa padamathu paRiththuch sivaththarunthip பகிரண்ட முழுதும் பறந்துநிர்த் தங்கள்புரி பச்சைக் கலாப மயிலைத் bagiraNda muzhuthum paRanthunirth thangaLpuri pachaik kalaapa mayilaith துங்கமா யன்புற்று வன்புற் றடர்ந்துவரு துடரும் பிரேத பூதத் thungamaa yanbutrru vanpuR Radarnthuvaru thudarum pirEtha bUthath தொகுதிகள் பசாசுகள் நிசாசரர் அடங்கலும் துண்டப் படக் கொத்துமாம் thoguthigaL pasaasugaL nisaasarar adangalum thundap padak koththumaam

5. தானா யிடும்பு 

   தானா யிடும்புசெயு மோகினி இடாகினி தரித்தவே தாளபூதம் thaanaa yidumpuseyu mOkini idaakini thariththavE thaaLapUtham சருவசூ னியமுமங் கிரியினா லுதறித் தடிந்துசந் தோடமுறவே saruvasU niyamumang kiriyinaa luthaRith thadinthusan thOdamuRavE கோனாகி மகவானும் வானாள வானாடர் குலவுசிறை மீளஅட்ட kOnaagi magavaanum vaanaaLa vaanaadar kulavusiRai meeLaatta குலகிரிகள் அசுரர்கிளை பொடியாக வெஞ்சிறைகள் கொட்டியெட் டிக்கூவுமாம் kulakirigaL asurarkiLai potiyaaka venjsiRaikaL kottiyet tikkUvumaam

4. அச்சப்படக்குரல் 

அச்சப்ப டக்குரல் முழக்கிப் பகட்டியல றிக்கொட்ட மிட்டம ரிடும் achappa dakkural muzhakkip pakattiyala Rikkotta mittama ridum அற்பக் குறப்பலிகள் வெட்டுக்கள் பட்டுகடி அறுகுழை களைக்கொத் தியே aRpak kuRappalikaL vettukkaL pattukadi aRukuzhai kaLaikkoth thiyE பிச்சுச் சினத்துதறி எட்டுத்திசைப் பலிகள் இட்டுக் கொதித்து விறலே pichuch sinaththuthaRi ettuththisaip palikaL ittuk kothiththu viRalE பெற்றுச் சுடர்ச்சிறகு தட்டிக் குதித்தியல் பெறக்கொக் கரித்து வருமாம்

3. கரிமுரட்டடிவலை 

கரிமுரட் டடிவலைக் கயிறெடுத் தெயிறுபற் களையிறுக் கியு முறைத்துக் karimurat tadivalaik kayiReduth theyiRupaR kaLaiyiRuk kiyu muRaiththuk கலகமிட் டியமன்முற் கரமுறத் துடருமக் காலத்தில் வேலு மயிலும் kalagamit tiyamanmuR karamuRath thudarumak kaalaththil vEluum குருபரக் குகனுமப் பொழுதில்நட் புடன்வரக் குரலொலித் தடிய ரிடரைக் guruparak kukanumap pozhuthilnat pudanvarak kuralolith thadiya ridaraik குலைத்தலறு மூக்கிற் சினப்பேய்க ளைக்கொத்தி வட்டத்தில் முட்ட வருமாம்

சேவல் விருத்தம் : 2. எரியனையவியன் 

எரியனைய வியனவிரம் உளகழுது பலபிரம ராட்சதர்கள் மிண்டுகள் செயும் eriyanaiya viyanaviram uLakazhuthu palapirama raatsatharkaL mindukaL seyum ஏவற் பசாசுநனி பேயிற் பசாசுகொலை ஈனப் பசாசு களையும் EvaR pasaasunani pEyiR pasaasukolai eenap pasaasu kaLaiyum கரி முருடு பெரியமலை பணையெனவும் முனையின்உயர் ககனமுற நிமிரும் வெங்கட் kari murudu periyamalai paNaiyenavum munaiyinuyar kakanamuRa nimirum vengat கடிகளையும் மடமடென மறுகியல றிடஉகிர்க் கரத்தடர்த் துக்கொத் துமாம்

சேவல் விருத்தம் 1. உலகிலநுதின 

உலகிலநு தினமும்வரும் அடியவர்கள் இடரகல உரியபர கதிதெ ரியவே ulagilanu thinamumvarum adiyavarkaL idarakala uriyapara kathithe riyavE உரகமணி எனவுழலும் இருவினையும் முறைபடவும் இருள்கள்மிடி கெட அருளியே uragamaNi enavuzhalum iruvinaiyum muRaipadavum iruLkaLmidi keda aruLiyE கலகமிடும் அலகைகுறள் மிகுபணிகள் வலிமையொடு கடினமுற வரில் அவைகளைக் kalakamidum alakaikuRaL migupaNikaL valimaiyodu kadinamuRa varil avaikaLaik கண்ணைப் பிடுங்கியுடல் தன்னைப் பிளந்துசிற கைக்கொட்டி நின்றா டுமாம் kaNNaip pidungiyudal thannaip piLanthusiRa kaikkotti ninRaa dumaam

சேவல் விருத்தம் காப்பு : கொந்தார் குழல்

கொந்தார் குழல்வரி வண்டோ லிடுமியல் கொண்டேழ் இசைமருளக் konthaar kuzhalvari vaNdO lidumiyal oNdEzh isaimaruLak குதலை மொழிந்தருள் கவுரி சுதந்தரி குமரன் இதம்பெறுபொற் kuthalai mozhintharuL kavuri suthanthari kumaran ithampeRupoR செந்தா மரைகடம் நந்தா வனமுள செந்தூர் எங்குமுளான் senthaa maraikadam nanthaa vanamuLa senthUr engumuLaan திலக மயிலில்வரு குமரன் வரிசைபெறு சேவல் தனைப்பாட thilaka mayililvaru kumaran varisaipeRu sEval thanaippaada

Tiruvilaiyadal in Thiruppugazh: Part 3

Read Part 1 and Part 2 of the series. Lord Shiva has danced as Nataraja at five temples–five sabhas–Chidhambaram, Maduarai, Thiruvilankadu, Tirunelveli and Kutralam. Chidhambaram Nataraja Temple is known as Gold Sabha or Ponnambalam. It is believed that Lord Shiva danced in the golden hall on a Thiruvathirai nakshatra to fullfill the desire of his devotees Pathanchali and Sage Vyaghra Padar. The song avaguna viraganai describes this cosmic dance:

Thiruvilaiyadal in Thiruppugazh–Part 2

Continuing the part 1 of Thiruvilaiyadal in Thiruppugazh , we discuss a few more divine sports of Shiva as described in the Thiruvilaiyadal Puranam. Shiva defeats Kali in a dance contest . SivA performs Oordhwa ThAndavam to pick up the bejewelled crown that He throws into the sky and picks it up with his toes and makes the fierce and valorous Bhadra Kali bashful with embarrassment (because she could not compete in dance with SivA) From the song vetha verpile காதும் உக்ர வீர பத்ர காளி வெட்க மகுடம் ஆகாசம் முட்ட வீசி விட்ட காலர்

Thiruvilaiyadal in Thiruppugazh–Part 1

The divine plays or Leelas of Shiva are 64 in number. They describe the exploits of Lord Siva who incarnated as Somasundara, Chokkanatha or Sundaresvara — the king of Madurai and husband of Queen Meenakshi. According to the Thiruvilaiyadal Purana, composed by Paranjoti Munivar in the sixteenth century, these sports have taken place in Madurai, Tamil Nadu. Legend has it that Meenakshi and Sundareswarar ruled over the city of Madurai for a long period of time. Sundareswarar also goes by the name Sundara Pandyan. Ugra Pandyan, the son of the divine couple, is believed to be none other than Subramanya. A few of these thiruvilaiyadals find frequent mentions in Thiruppugazh. Let's study them. In his previous incarnation, Sundarar was Alala Sundarar, one of the Shiva ganas. Alala Sundarar was living in the Mount Kailas, when he was enamored of two girls Anindita and Kamalini, the attendants of Goddess Parvathi. They, too, fell in love with Sundarar. Kamalini, the attendant of Parvat...

Krishna Leela

Image
Many references to Krishna's divine plays as mentioned in Thiruppugazh have been discussed in an earlier post. In fact the entire Mahabharatham can be described as Krishna's Leela. In this post, however, we are discussing only the childhood leela s as mentioned in Thiruppugazh. The first Leela is Krishna being tied to the mortar ( உரல் ). This story occurs in many songs and symbolically shows that though the Lord is beyond anybody's grasp, He allows Himself to be bound by His devotees sivanaar manam kuLira நவநீத முந்திருடி உரலோடெ யொன்றுமரி ரகுராமர் சிந்தைமகிழ் மருகோனே

Sivam in Thiruppugazh – Part 3

Please go through Part 1 and         Part 2 Let's continue to enjoy more Thiruppugazh songs in which Sivam is described in detail. Here's how gaganamum anilamum describes the Universal Matter – as the Ultimate and Eternal Object which remains after the cataclysm (pralaya) at the end of the Yugas and which can be perceived by our minds if it directs its attention inwards and beholds the luminous substance. யுகஇறு திகளிலு மிறுதியி லொருபொருள் உள்ளக்க ணோக்கு    மறிவூறி ஒளிதிக ழருவுரு வெனுமறை யிறுதியி லுள்ளத்தை நோக்க    அருள்வாயே More attributes of the Super consciousness follow, with the following example from suruthiyaay . The etrnal and immutable substance is said to be the True Significance of the Great Delusion or Maya ( மிக்க மேலான பொருளான பெரிய மாயையின் உண்மைத் தத்துவம் ) and Saint Arunagiri says that Murugan taught him so that he could speak about it to this world!

Sivam in Thiruppugazh – Part 2

In the previous post on Sivam in Thiruppugazh , we discussed the grandeur of Sivam and tasted the meaning of Sivanubhuti. This post savours a few more samples. In the song aanaatha piruthivi , the saint-poet longs for the day he would be able to achieve union with மாறாத சுகவெளத் தாணு – changeless and a perennial flood of bliss. To achive this union or experience ஏகி பவம் , we must escape the bonds of attachment to earthly possessions and the deep darkness of maya or illusion and shun all thoughts. The saint uses choice words such as ஆகாச பரம, சிற் சோதி, ஆறு ஆறின் அதிகம் - அக்ராயம், பரதுரிய அதீதம், அகளம், எப்போதும் உதயம், அநந்த மோகம், வானாதி சகல விஸ்த்தார விபவரம், லோகாதி முடிவு, மெய்ப் போத, மலர் அயன் மால் ஈசர் எனும் அவற்கு ஏ(ஹே)து, மாளாத தன் நிசமுற்றாயது, அரிய, நிராதாரம், உலைவு இல், சற் சோதி, நிருபம் ஆனாத பிருதிவிப் பாச நிகளமும் மாமாய விருளுமற் றேகி பவமென வாகாச பரமசிற் சோதி பரையைய   டைந்துளாமே ஆறாறி னதிகமக் க்ராய மநுதினம் யோகீச ரெவருமெட் டாத பரதுரி யாதீத மகளமெப...

Sivam in Thiruppugazh–Part 1

What is the goal of Bhakti? The ultimate goal of bhakti is to help the individual soul to merge itself in the Supreme Soul or Paramatman that is Infinite, Omniscient, Omnipotent, and an embodiment of knowledge and bliss. What prevents us from seeing ourselves as we truly are – as Pure Consciousness – are the three malas or cloakings that make us feel separate and different, despite the common unifying spirit in all beings. This experience of differentiation comes from a power called Maya which is a mala that our bodies are subject to. Mala means taint or impurity, a limiting condition that hampers the free expansion of spirit. It is of three forms, anava mala, maya mala, and karma mala. These Malas are part of our existence, part of the fabric of who we are. Anava mala is the root mala, the primal limiting condition which reduces the universal Consciousness to a small, limited entity. It is a cosmic limiting condition over which the individual has no control. It is owi...

Devi in Thiruppugazh

Devi is any goddess, though in Saivism it would mean the consort of Shiva. For Vaishnavas, it would be the goddess Lakshmi. In Thiruppugazh we have the description of both the Devi s. In the song aNisevviyAr , Arunagirinathar describes Parvati Devi as holding Mount Meru as a bow, an attribute usually associated with Shiva – which is quite understandable, because Shiva holds the bow in His left hand, and Parvathi occupies the left half of Shiva. She dances with Shiva in the jungles. குண வில்லதா மக மேரினை அணிசெல்வியாய் அருணாசல குரு .......

Nakkeerar in Thiruppugazh

Please click to read the Story of Nakkeerar , a nineth century Tamil poet who wrote a learned commentary on the well-known work entitled Irayanar Agaporul. Nakkeerar is famous for stubbornly clinging onto his beliefs even in the face of supreme and incontrovertible evidence. Vankya Sudamani Pandyan ( வங்கிய சூடாமணி (சண்பக பாண்டியன்) offers a bundle of gold coins as a prize to any poet who would compose a poem that would clear his doubt whether women could have naturally fragrant hair. Lord Shiva himself composes a poem that answered this query and hands it over to a poor scholar Tharumi. However, Nakkeerar finds fault with a particular line in that poem and even when Siva asserts the correctness of Tharumi's thought and diction, Nakkeerar persistently refutes it. Shiva opens His third eye and Nakkeerar feels as if his body is set ablaze. He undertakes a pilgrimage to Mount Kailasa and on the way he encounters the demoness Karkimukhi who imprisons him in a cave along with 999 othe...

Mahabharatham in Thiruppugazh (Part 2)

Read Mahabharatham in Thiruppugazh (part 1) There are two lesser known events that take place before the war. At the center of both the events is Krishna who makes every effort to ensure victory for the Pandavas. The first event ensures that none of the Pandavas will die in the war. The second event ensures that Vidura stays out of the war. Duryodhana refuses to give the Pandavas their kingdom. Lord Krishna is all set to go to Hastinapura in the last ditch effort to avoid war. Of course, He knows that war is inevitable. But Sahadeva doesn't want war. Krishna tells him that he could try tying Him down and prevent Him from going on a peace mission.

Mahabharatham in Thiruppugazh (Part 1)

In most of the songs in Thiruppugazh, Lord Murugan is referred to as Vishnu's nephew. And Vishnu could be referred to by many of His avatars --- the matsyavatara, the Ramavatara or the Krishnavatara. In Ramayana, the protagonist is Rama, there is no doubt. In Mahabharata, who is the protagonist? The Pandavas? The Kauravas? Bheeshma? No, they are all mere actors. The real sutradhari is the wily Krishna. The stage is His. He has the script. He calls the shots. And He has a purpose! Yato Dharma Tato Krishnah, tato Jayah . And Krishna exemplifies Karma Yoga. For establishing Dharma, he is ready to break the rules, to dispense justice speedily. Right here and now. Not in the next janma . Not just that. He is ready to accept the results of His own Karma. He accepts happily Gandhari's curse. Free will is merely maya, an illusion. We have no control over our birth or death. If we contemplate, we don't choose our offsprings also, let alone plan their lives. The thoughts (that we co...

Ramayana in Thiruppugazh (4)

Read the previous posts: Part 1 Part 2 Part 3 The song vanjam kondum describes in graphic detail the war scene between vanaras and Ravana – how the vanaras hurl uprooted trees and boulders that come down heavily, crushing the enemy and driving the entire clan of the demons to the South, the direction ruled by YamA, and how amidst the relentless onslaught of arrows, Ravana keeps boasting in vain about his valor. வஞ்சங்கொண் டுந்திட ராவண னும்பந்தென் திண்பரி தேர்கரி மஞ்சின்பண் புஞ்சரி யாமென        வெகுசேனை வந்தம்பும் பொங்கிய தாகஎ திர்ந்துந்தன் சம்பிர தாயமும் வம்புந்தும் பும்பல பேசியு             மெதிரேகை மிஞ்சென்றுஞ் சண்டைசெய் போதுகு ரங்குந்துஞ் சுங்கனல் போலவெ குண்டுங்குன் றுங்கர டார்மர         மதும்வீசி

Ramyana in Thiruppugazh (3)

Read the previous posts: Part 1 Part 2 In விடுங்கை , the poet Saint Arunagirinathar describes in great detail not only the Vali vatham but also the slaying of Ravana. கொடுங்கைப் பட்டம ராமர மேழுடன் நடுங்கச் சுக்ரிவ னோடம ராடிய குரங்கைச் செற்றும கோததி தூளெழ நிருதேசன் குலங்கட் பட்டநி சாசரர் கோவென இலங்கைக் குட்டழ லோனெழ நீடிய குமண்டைக் குத்திர ராவண னார்முடி அடியோடே பிடுங்கத் தொட்டச ராதிப னாரதி ப்ரியங் கொட் டக்கநன் மாமரு கா

Ramayana in Thiruppugzh (2)

Read here the first part of the trilogy on Ramayana as described in Thiruppugazh..... The next episodes that find mention in a few of the 503 Thiruppugazh songs taught by Guruji Shri A.S.Raghavan: Rama and Sita, along with Lakshmana, live in the Panchavati hermitage where Surpanakha comes across them and is infatuated with the handsome brothers. Angered by their spurning her love, Surpanakha attacks Sita, and Lakshmana, obeying Rama's orders, chops off Surpanakha's nose. Surpanakha stomps into Ravana's court, and incites Ravana to force Sita to marry him. மூக்கறை மட்டைம காபல காரணி சூர்ப்பந கைப்படு மூளியு தாசனி மூர்க்க குலத்திவி பீஷணர் சோதரி முழுமோடி மூத்தவ ரக்கனி ராவண னோடியல் பேற்றிவி டக்கம லாலய சீதையை மோட்டன் வளைத்தொரு தேர்மிசை யேகொடு முகிலேபோய் மாக்கன சித்திர கோபுர நீள்படை வீட்டிலி ருத்திய நாளவன் வேரற மார்க்கமு டித்தவி லாளிகள் நாயகன் மருகோனே Notice that the poet refers to Surpanakha as the sister of the virtuous Vibhishana rather than the depraved Ravana. Thi...

Ramayana in Thiruppugazh (1)

References to Ramayana have occurred in more than 150 Thiruppugazh songs, but in this post we will cover only a few of them from the 503 songs that Guruji Shri A.S.Raghavan has taught us. The objective of Rama's incarnation was to annihilate asuras and their king, the demon Ravana. Asuras complain to Vishnu about the atrocities committed by Ravana and seek His asylum. Lord Vishnu then decides in what forms various devas should be born on earth and assist Him in this mission. Accordingly, deva s take birth as vanara s in Kishkintha with Surya and Indra as Sugriva and Vali respectively and Rudra as Hanuman; Brahma descends on earth as Jambhavan, the king of bears and Agni as Neela. This is described beautifully in karuvadainthu ( கருவடைந்து )

Vamana Avathaaram in Thiruppugazh

Though his Ishta devata was Lord Murugan, Saint Arunagirinathar showed equal love for Vishnu and Shiva. In his poems he decribes the divine sports of Vishnu and then addresses Murugan as His beloved nephew, just as he sings the glories of Shiva and eulogises Murugan as His son. In this way, he brings about a rapproachment between Vaishnavites and Shaivites. The Vamana Avatar is the first incarnation of Lord Vishnu as a human and the fifth of the Dasavatars. In the Vamana Avatar Lord Vishnu incarnates as Mahabali, the grandson of Prahlada, a great ruler who is loved by his people. Mahabali learns the Vedhas from his grandfather Prahlada and from the great Asura teacher Shukracharya. Mahabali performs severe penance to please Lord Brahma. Lord Brahma grants him invincibility against Indra. Subsequently, Bali defeats Indra and takes over the heavens. However, Bali remains always righteous and is devoted to Lord Vishnu. Indra begs Lord Vishnu to help him. Lord Vishnu incarnates as the ...

வேல்மாறல் பாராயணம்

You may read the Vel Vaguppu post for the meaning in English. Here's the Tamil explanation of the same. வேல் மாறல் மகா மந்திரமாகும். அருணகிரிநாத சுவாமிகள் பாடியருளிய சீர்பாத வகுப்பு, தேவேந்திர சங்க வகுப்பு, வேல் வகுப்பு என்ற திருவகுப்புகள் உடல் நோயையும், உயிர்ப்பிணியையும் நீக்கவல்ல மணி, மந்திர, ஒளஷதம் போன்றதாகும். அவை: 1. சீர்பாத வகுப்பு – மணி வகுப்பு, 2. தேவேந்திர சங்க வகுப்பு - மந்திர வகுப்பு, 3. வேல் வகுப்பு - ஔஷத (மருந்து) வகுப்பு. முருகப் பெருமானுக்கே உரிய ஞானசக்தி- வேலாயுதம். வேல் என்ற சொல்லுக்கு ‘வெல்’ என்பது மூலம். வெல்லும் தன்மையுடையது வேல். இந்த வேல் வெளிப்பகை மற்றும் உட்பகைகளான வினைகளை வேரோடு அழிக்கும். அருணகிரிநாத சுவாமிகள் அருளிச் செய்துள்ள ‘வேல் வகுப்பு’ உடல் நோய், மன நோய், உயிர் நோய் ஆகிய மூவகைப் பிணிகளுக்கும் உற்ற மருந்தாகி, அவற்றை உடனே தீர்த்தருளவல்ல ஆற்றல் படைத்தது’ என்று உறுதி கூறிய வள்ளிமலை ஸ்ரீசச்சிதானந்த சுவாமிகள் வேலுக்கு உகந்த வழிபாடாக வேல்மாறல் பாராயணத்தை தொகுத்துள்ளார். வேல்மாறல் பாராயணம் மன ஒருமைப்பாடு என்ற ஏகாக்ர சித்தத்தை உண்டாக்கும் வல்லம...

The Never-Dry Spring at Thiruvanaikaval

Image
The famous Jambukeswarar Temple is located in Thiruvanaikaval, a suburb of the town of Tiruchirappalli on the northern banks of the Kaveri river that surrounds, along with river kollidam, the Thiruvanaikaval-Srirangam Island. As an appu-sthalam , it is one of the Pancha Bhoota Stalams , and Shiva is venerated here as Jambukeshwara, an embodiment of the element water(appu). The spring underneath the lingam never goes dry even in the driest season. According to the puranas, there was once a forest of jambu trees in the place of modern Tiruvanaikkaval. Lord shiva appeared as a Lingam under one of the trees that came to be called the Jambulingam. Nearby was a tank called Chandratirtha which was filled by water from the river Cauvery. There is a legend that Parvathi worshipped Shiva here and installed the idol in the sanctum. Even today at noon the 'Archakar' dresses like a woman and does Pooja to Jambukeswara and to a special variety of black cow called Karam Pasu.

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே