வந்து வந்து வித்தூறி : J R விளக்கவுரை
By Smt Janaki Ramanan, Pune To read the meaning of the song vanthu vanthu ( வந்து வந்து வித்தூறி ) in English, click the underlined hyperlink. முன்னுரை "வந்து வந்து வித்தூறி" என்று தொடங்கும் தில்லைத் திருத்தலப் பாடல். வந்து வந்து பிறக்கிறான் மனிதன். வாழத் தெரியாமல் நொந்து நொந்து வாழ்கிறான். பின் வெந்து வெந்து மடிகிறான். அந்த ஜனன மரண சுழற்சியிலிருந்து தன்னை விடுவிக்கத் தயாளன் முருகன் வர வேண்டும் என அருணகிரியார் ஏங்கிப் பாடும் பாடல். மனித குலமே சம்சார சாகரத்தில் தத்தளித்துக் கொண்டிருப்பதாலே, அருணகிரியார் வேண்டுவது மனித குலம் உய்யத் தான். ஞானிகள், இவ்வாறு, இறைவனுக்கும், மனிதனுக்கும் பாலமாய் அமைந்து நம்மைப் பக்குவப் படுத்தப் பாடு படுகிறார்கள். முருகன் எப்படி தரிசனம் தர வேண்டும் என்பதை வண்ணக் காட்சியாய் நம் முன்னே விரிக்கும் பாடல். கந்தனை வந்தனை செய்து கொண்டு, பாட்டின் பொருள் பார்ப்போமா?