263. மருமல்லியார்
ராகம் : ஷண்முகப்ரியா அங்கதாளம் 1 + 1½ + 1½ + 1 + 3 (8) மருமல்லி யார்குழலின் மடமாதர் மருளுள்ளி நாயடிய னலையாமல் இருநல்ல வாகுமுன தடிபேண இனவல்ல மானமன தருளாயோ கருநெல்லி மேனியரி மருகோனே கனவள்ளி யார்கணவ முருகேசா திருவல்லி தாயமதி லுறைவோனே திகழ்வல்ல மாதவர்கள் பெருமாளே.