Posts

Showing posts from April, 2016

291. தீராப் பிணிதீர

ராகம் : சாருகேசி தாளம் : ஸங்கீர்ணசாபு 3 + 1½ (4½) தீராப் பிணிதீர சீவாத் துமஞான ஊராட் சியதான ஓர்வாக் கருள்வாயே பாரோர்க் கிறைசேயே பாலாக் கிரிராசே பேராற் பெரியோனே பேரூர்ப் பெருமாளே.

290. தலங்களில் வரும்

ராகம் : ஸாரமதி தாளம் : கண்டசாபு 1 + 1½ தலங்களில் வருங்கன இலங்கொடு மடந்தையர் தழைந்தவு தரந்திகழ் தசமாதஞ் சமைந்தனர் பிறந்தனர் கிடந்தன ரிருந்தனர் தவழ்ந்தனர் நடந்தனர் சிலகாலந் துலங்குந லபெண்களை முயங்கினர் மயங்கினர் தொடுந்தொழி லுடன்தம க்ரகபாரஞ் சுமந்தன ரமைந்தனர் குறைந்தன ரிறந்தனர் சுடும்பினை யெனும்பவ மொழியேனோ

289. உரையுஞ் சென்றது

ராகம் : ரஞ்சனி தாளம் : ஆதி - எடுப்பு - 3/4 இடம் உரையுஞ் சென்றது நாவும் உலர்ந்தது விழியும் பஞ்சுபொ லானது கண்டயல் உழலுஞ் சிந்துறு பால்கடை நின்றது கடைவாயால் ஒழுகுஞ் சஞ்சல மேனிகு ளிர்ந்தது முறிமுன் கண்டுகை கால்கள்நி மிர்ந்தது உடலுந் தொந்தியும் ஓடிவ டிந்தது பரிகாரி வரவொன் றும்பலி யாதினி என்றபின் உறவும் பெண்டிரு மோதிவி ழுந்தழ மறல்வந் திங்கென தாவிகொ ளுந்தினம் இயல்தோகை மயிலுஞ் செங்கைக ளாறிரு திண்புய வரைதுன் றுங்கடி மாலையும் இங்கித வனமின் குஞ்சரி மாருடன் என்றன்முன் வருவாயே

288. ஈளை சுரம்

ராகம் : ஹிந்தோளம் தாளம் : ஆதி 2 களை ஈளை சுரம் குளிர் வாத மெனும்பல நோய்கள் வளைந்தற இளையாதே ஈடு படுஞ்சிறு கூடு புகுந்திடு காடு பயின்றுயி ரிழவாதே மூளை யெலும்புகள் நாடி நரம்புகள் வேறு படுந்தழல் முழுகாதே மூல மெனுஞ்சிவ யோக பதந்தனில் வாழ்வு பெறும்படி மொழிவாயே

287. அஞ்சுவித

Image
ராகம் : சிம்மேந்திர மத்யமம் தாளம் : ஆதி அஞ்சுவித பூத முங்கரண நாலு மந்திபகல் யாது மறியாத அந்தநடு வாதி யொன்றுமில தான அந்தவொரு வீடு பெறுமாறு மஞ்சுதவழ் சார லஞ்சயில வேடர் மங்கைதனை நாடி வனமீது வந்தசர ணார விந்தமது பாட வண்டமிழ்வி நோத மருள்வாயே

286. விழுதாதெனவே

ராகம் : யமுனா கல்யாணி தாளம் : ஆதி விழுதா தெனவே கருதா துடலை வினைசேர் வதுவே புரிதாக விருதா வினிலே யுலகா யதமே லிடவே மடவார் மயலாலே அழுதா கெடவே அவமா கிடநா ளடைவே கழியா துனையோதி அலர்தா ளடியே னுறவாய் மருவோ ரழியா வரமே தருவாயே

285. ஓலமிட்டு

ராகம் : ஜோன்புரி தாளம் : ஆதி திச்ர நடை ஓல மிட்டி ரைத்தெ ழுந்த வேலை வட்ட மிட்ட இந்த ஊர்மு கிற்ற ருக்க ளொன்று மவராரென் றூம ரைப்ர சித்த ரென்று மூட ரைச்ச மர்த்த ரென்றும் ஊன ரைப்ர புக்க ளென்று மறியாமற் கோல முத்த மிழ்ப்ர பந்த மால ருக்கு ரைத்த நந்த கோடி யிச்சை செப்பி வம்பி லுழல்நாயேன் கோப மற்று மற்று மந்த மோக மற்று னைப்ப ணிந்து கூடு தற்கு முத்தி யென்று தருவாயே

284. தாரகாசுரன்

ராகம் : வலசி தாளம் : ஆதி திச்ர நடை (12) தார காசு ரன்ச ரிந்து வீழ வேரு டன்ப றிந்து சாதி பூத ரங்கு லுங்க முதுமீனச் சாக ரோதை யங்கு ழம்பி நீடு தீகொ ளுந்த அன்று தாரை வேல்தொ டுங்க டம்ப மததாரை ஆர வார வும்பர் கும்ப வார ணாச லம்பொ ருந்து மானை யாளு நின்ற குன்ற மறமானும் ஆசை கூரு நண்ப என்று மாம யூர கந்த என்றும் ஆவல் தீர என்று நின்று புகழ்வேனோ

283. காணொணாதது

ராகம் : மாண்டு அங்கதாளம் (7½) 1½ + 2 + 2 + 2 காணொ ணாதது உருவோ டருவது பேசொ ணாதது உரையே தருவது காணு நான்மறை முடிவாய் நிறைவது பஞ்சபூதக் காய பாசம தனிலே யுறைவது மாய மாயுட லறியா வகையது காய மானவ ரெதிரே யவரென வந்துபேசிப் பேணொ ணாதது வெளியே யொளியது மாய னாரய னறியா வகையது பேத பேதமொ டுலகாய் வளர்வது விந்துநாதப் பேரு மாய்கலை யறிவாய் துரியவ தீத மானது வினையேன் முடிதவ பேறு மாயருள் நிறைவாய் விளைவது ஒன்றுநீயே

282. ஆறும் ஆறும்

ராகம் : நாட்டகுறிஞ்சி தாளம் : ஆதி திச்ர நடை (12) ஆறு மாறு மஞ்சு மஞ்சும் ஆறு மாறு மஞ்சு மஞ்சும் ஆறு மாறு மஞ்சு மஞ்சும் அறுநாலும் ஆறு மாய சஞ்ச லங்கள் வேற தாவி ளங்கு கின்ற ஆரணாக மங்க டந்த கலையான ஈறு கூற ரும்பெ ருஞ்சு வாமி யாயி ருந்த நன்றி யேது வேறி யம்ப லின்றி யொருதானாய் யாவு மாய்ம னங்க டந்த மோன வீட டைந்தொ ருங்கி யான வாவ டங்க என்று பெறுவேனோ

281. இறையத்தனை

ராகம் : ஜனரஞ்சனி தாளம் : திச்ர ஏகம் (3) இறையத் தனையோ அதுதானும் இலையிட் டுணலேய் தருகாலம் அறையிற் பெரிதா மலமாயை அலையப் படுமா றினியாமோ மறையத் தனைமா சிறைசாலை வழியுய்த் துயர்வா னுறுதேவர் சிறையைத் தவிரா விடும்வேலா திலதைப் பதிவாழ் பெருமாளே.

280. தவர் வாள்

ராகம் : மோகனம் தாளம் : சதுச்ர ரூபகம் (6) தவர்வாட் டோமர சூலந் தரியாக் காதிய சூருந் தணியாச் சாகர மேழுங் கிரியேழுஞ் சருகாக் காய்கதிர் வேலும் பொருகாற் சேவலு நீலந் தரிகூத் தாடிய மாவுந் தினைகாவல் துவர்வாய்க் கானவர் மானுஞ் சுரநாட் டாளொரு தேனுந் துணையாத் தாழ்வற வாழும் பெரியோனே துணையாய்க் காவல்செய் வாயென் றுணராப் பாவிகள் பாலுந் தொலையாப் பாடலை யானும் புகல்வேனோ

279. சொருபப் பிரகாச

ராகம் : தன்யாசி அங்கதாளம் (5½) 3 + 1½ + 1 சொருபப்பிர காசவிசு வருபப்பிர மாகநிச சுகவிப்பிர தேசரச சுபமாயா துலியப்பிர காசமத சொலியற்றர சாசவித தொகைவிக்ரம மாதர்வயி றிடையூறு கருவிற்பிற வாதபடி யுருவிற்பிர மோதஅடி களையெத்திடி ராகவகை யதின்மீறிக் கருணைப்பிர காசவுன தருளுற்றிட ஆசில்சிவ கதிபெற்றிட ரானவையை யொழிவேனோ

278. கார்ச்சார்

ராகம் : சிம்மேந்திர மத்யமம் திச்ர த்ரிபுடை கார்ச்சார்குழ லார்விழி யாரயி லார்ப்பால்மொழி யாரிடை நூலெழு வார்ச்சாரிள நீர்முலை மாதர்கள் மயலாலே காழ்க்காதல தாமன மேமிக வார்க்காமுக னாயுறு சாதக மாப்பாதக னாமடி யேனைநி னருளாலே பார்ப்பாயலை யோவடி யாரொடு சேர்ப்பாயலை யோவுன தாரருள் கூர்ப்பாயலை யோவுமை யாள்தரு குமரேசா பார்ப்பாவல ரோதுசொ லால்முது நீர்ப்பாரினில் மீறிய கீரரை யார்ப்பாயுன தாமரு ளாலொர்சொ லருள்வாயே

277. மாத்திரையாகிலும்

ராகம் : மனோலயம் தாளம் : ஆதி மாத்திரை யாகிலு நாத்தவ றாளுடன் வாழ்க்கையை நீடென மதியாமல் மாக்களை யாரையு மேற்றிடு சீலிகள் மாப்பரி வேயெய்தி அநுபோக பாத்திர மீதென மூட்டிடு மாசைகள் பாற்படு ஆடக மதுதேடப் பார்க்கள மீதினில் மூர்க்கரை யேகவி பாற்கட லானென வுழல்வேனோ

276. சதுரத்தரை

ராகம் : பெஹாக் தாளம் : திஸ்ரத்ரிபுடை (7) சதுரத்தரை நோக்கிய பூவொடு கதிரொத்திட ஆக்கிய கோளகை தழையச்சிவ பாக்கிய நாடக அநுபூதி சரணக்கழல் காட்டியெ னாணவ மலமற்றிட வாட்டிய ஆறிரு சயிலக்குல மீட்டிய தோளொடு முகமாறுங் கதிர்சுற்றுக நோக்கிய பாதமு மயிலிற்புற நோக்கிய னாமென கருணைக்கடல் காட்டிய கோலமும் அடியேனைக் கனகத்தினு நோக்கினி தாயடி யவர்முத்தமி ழாற்புக வேபர கதிபெற்றிட நோக்கிய பார்வையு மறவேனே

275. வண்டுபோற்

ராகம்: சுத்த தன்யாசி அங்க தாளம் (7½) 1½ + 1 + 2 + 3 வண்டுபோற் சாரத் தருள்தேடி மந்திபோற் காலப் பிணிசாடிச் செண்டுபோற் பாசத் துடனாடிச் சிந்தைமாய்த் தேசித் தருள்வாயே தொண்டராற் காணப் பெறுவோனே துங்கவேற் கானத் துறைவோனே மிண்டராற் காணக் கிடையானே வெஞ்சமாக் கூடற் பெருமாளே.

274. எருவாய்

ராகம் : அமிர்தவர்ஷிணி தாளம் : ஆதி எருவாய் கருவாய் தனிலே யுருவா யிதுவே பயிராய் விளைவாகி இவர்போ யவரா யவர்போ யிவரா யிதுவே தொடர்பாய் வெறிபோல ஒருதா யிருதாய் பலகோ டியதா யுடனே யவமா யழியாதே ஒருகால் முருகா பரமா குமரா உயிர்கா வெனவோ தருள்தாராய்

273. மருக்குலாவிய

ராகம் : காபி தாளம் : சதுச்ர ரூபகம் (9) மருக்கு லாவிய மலரணை கொதியாதே வளர்த்த தாய்தமர் வசையது மொழியாதே கருக்கு லாவிய அயலவர் பழியாதே கடப்ப மாலையை யினிவர விடவேணும் தருக்கு லாவிய கொடியிடை மணவாளா சமர்த்த நேமணி மரகத மயில்வீரா திருக்கு ராவடி நிழல்தனி லுறைவோனே திருக்கை வேல்வடி வழகிய பெருமாளே

272. பழியுறு சட்டகமான

ராகம் : கல்யாணி தாளம் : கண்டசாபு (2½) பழியுறுசட் டகமான குடிலையெடுத் திழிவான பகரும்வினைச் செயல்மாதர் தருமாயப் படுகுழிபுக் கினிதேறும் வழிதடவித் தெரியாது பழமைபிதற் றிடுலோக முழுமூடர் உழலும்விருப் புடனோது பலசவலைக் கலைதேடி யொருபயனைத் தெளியாது விளியாமுன் உனகமலப் பதநாடி யுருகியுளத் தமுதூற உனதுதிருப் புகழோத அருள்வாயே

271. படி புனல் நெருப்பு

ராகம் : ரேவதி அங்கதாளம் 1 + 1½ + 1½ + 1 (5) படிபுனல்நெ ருப்படற் பவனம்வெளி பொய்க்கருப் பவமுறைய வத்தைமுக் குணநீடு பயில்பிணிகள் மச்சைசுக் கிலமுதிர மத்திமெய்ப் பசிபடுநி ணச்சடக் குடில்பேணும் உடலது பொ றுத்தறக் கடைபெறுபி றப்பினுக் குணர்வுடைய சித்தமற் றடிநாயேன் உழலுமது கற்பலக் கழலிணையெ னக்களித் துனதுதம ரொக்கவைத் தருள்வாயே

270. பகரு முத்தமிழ்

Image
ராகம் : சௌராஷ்டிரம் தாளம் : மிஸ்ரசாபு 1½ + 2 (3½) பகரு முத்தமிழ்ப் பொருளு மெய்த்தவப் பயனு மெப்படிப் பலவாழ்வும் பழைய முத்தியிற் பதமு நட்புறப் பரவு கற்பகத் தருவாழ்வும் புகரில் புத்தியுற் றரசு பெற்றுறப் பொலியும் அற்புதப் பெருவாழ்வும் புலன கற்றிடப் பலவி தத்தினைப் புகழ்ப லத்தினைத் தரவேணும்

269. குசமாகி

ராகம் : தர்மவதி அங்கதாளம் (5) 1 + 1½ + 1½ + 1 குசமாகி யாருமலை மரைமாநு ணூலினிடை குடிலான ஆல்வயிறு குழையூடே குறிபோகு மீனவிழி மதிமாமு காருமலர் குழல்கார தானகுண மிலிமாதர் புசவாசை யால்மனது உனைநாடி டாதபடி புலையேனு லாவிமிகு புணர்வாகிப் புகழான பூமிமிசை மடிவாயி றாதவகை பொலிவான பாதமல ரருள்வாயே

268. பாலோ தேனோ பாகோ

ராகம் : நீலாம்பரி    தாளம் : ஆதி 2 களை பாலோ தேனோ பாகோ வானோர் பாரா வாரத் தமுதேயோ பாரோர் சீரோ வேளேர் வாழ்வோ பானோ வான்முத் தெனநீளத் தாலோ தாலே லோபா டாதே தாய்மார் நேசத் துனுசாரந் தாரா தேபே ரீயா தேபே சாதே யேசத் தகுமோதான்

267. பாலோ தேனோ

ராகம் : குந்தலவராளி தாளம் : ஆதி 2 களை பாலோ தேனோ பலவுறு சுளையது தானோ வானோர் அமுதுகொல் கழைரச பாகோ வூனோ டுருகிய மகனுண வருண்ஞானப் பாலோ வேறோ மொழியென அடுகொடு வேலோ கோலோ விழியென முகமது பானோ வானூர் நிலவுகொ லெனமகண் மகிழ்வேனை நாலாம் ரூபா கமலஷண் முகவொளி யேதோ மாதோம் எனதகம் வளரொளி நானோ நீயோ படிகமொ டொளிரிட மதுசோதி நாடோ வீடோ நடுமொழி யெனநடு தூணேர் தோளா சுரமுக கனசபை நாதா தாதா எனவுரு கிடஅருள் புரிவாயே

How Sambanthar Drank Goddess Parvati's milk

In the old city of Seerkazhi in Tamilnadu, lived a brahmin by name Sivapadahrudaya. He and his wife Bhagavathi Ammal were ardent devotees of Shiva, the presiding deity Thoniyappar of Seerkazhi. In course of time Bhagavathi Ammal gave birth to a boy baby who was named Sambandan. One day when his father was going to the temple as usual, little Sambandan joined him. When they reached the temple, Sivapadahrudaya wanted to take a dip in the holy pond of the temple Brahma Teertham. He left Sambandan on the banks and told him to be there until he returned after his holy dip. When Sivapadahrudaya took long to come back, he cried out in anguish. Parvati descended to where Sambandan was and fed him milk from a golden cup. By that time the father had finished his dip and came up. He saw milk drooling from the mouth of Sambandan and got very angry that his little son had taken milk from somebody. He angrily asked his son who gave him milk. Just then Lord Shiva and Parvati appeared in front o...

266. நீதான் எத்தனையாலும்

ராகம் : ஸ்ரீரஞ்சனி தாளம் : திச்ர ஏகம் நீதானெத் தனையாலும் நீடூழிக் க்ருபையாகி மாதானத் தனமாக மாஞானக் கழல்தாராய் வேதாமைத் துனவேளே வீராசற் குணசீலா ஆதாரத் தொளியானே ஆரூரிற் பெருமாளே.

265. ஊனாரும் உட்பிணியும்

ராகம் : ராகமாலிகை தாளம் : கண்டசாபு (2½) ராகம்: செஞ்சுருட்டி ஊனாரு முட்பிணியு மானாக வித்தவுட லூதாரி பட்டொழிய வுயிர்போனால் ஊரார் குவித்துவர ஆவா வெனக்குறுகி ஓயா முழக்கமெழ அழுதோய ராகம்: புன்னாகவராளி நானா விதச்சிவிகை மேலே கிடத்தியது நாறா தெடுத்தடவி யெரியூடே நாணாமல் வைத்துவிட நீறாமெ னிப்பிறவி நாடா தெனக்குனருள் புரிவாயே

264. இபமாந்தர்

ராகம் : காம்போதி அங்கதாளம் (6) 2½ + 3½ இபமாந்தர் சக்ர பதிசெறி படையாண்டு சக்ர வரிசைக ளிடவாழ்ந்து திக்கு விசயம ணரசாகி இறுமாந்து வட்ட வணைமிசை விரிசார்ந்து வெற்றி மலர்தொடை யெழிலார்ந்த பட்டி வகைபரி மளலேபந் தபனாங்க ரத்ந வணிகல னிவைசேர்ந்த விச்சு வடிவது தமர்சூழ்ந்து மிக்க வுயிர்நழு வியபோது தழல்தாங்கொ ளுத்தி யிடவொரு பிடிசாம்பல் பட்ட தறிகிலர் தனவாஞ்சை மிக்கு னடிதொழ நினையாரே

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே