Posts

Showing posts from March, 2016

263. மருமல்லியார்

ராகம் : ஷண்முகப்ரியா அங்கதாளம் 1 + 1½ + 1½ + 1 + 3 (8) மருமல்லி யார்குழலின் மடமாதர் மருளுள்ளி நாயடிய னலையாமல் இருநல்ல வாகுமுன தடிபேண இனவல்ல மானமன தருளாயோ கருநெல்லி மேனியரி மருகோனே கனவள்ளி யார்கணவ முருகேசா திருவல்லி தாயமதி லுறைவோனே திகழ்வல்ல மாதவர்கள் பெருமாளே.

262. கலகலெனச் சில

Image
ராகம் : குந்தலவராளி தாளம் : ஆதி கலகலெ னச்சில கலைகள் பிதற்றுவ தொழிவ துனைச்சிறி துரையாதே கருவழிதத்திய மடுவ தனிற்புகு கடுநர குக்கிடை யிடைவீழா உலகு தனிற்பல பிறவி தரித்தற வுழல்வது விட்டினி யடிநாயேன் உனதடி மைத்திரள் அதனினு முட்பட வுபய மலர்ப்பத மருள்வாயே

How The Goat Came to Be Murugan's Vahana

Sage Narada performed a yagna to appease Lord Siva. Suddenly from the fire sprang a fierce and uncontrollable goat with formidable horns, striking terror into all the gods and shaking the mountains.

261. அவசியமுன்

ராகம் : துர்கா தாளம் : சதுச்ர ஜம்பை (7) அவசியமுன் வேண்டிப் பலகாலும் அறிவினுணர்ந் தாண்டுக் கொருநாளில் தவசெபமுந் தீண்டிக் கனிவாகிச் சரணமதும் பூண்டற் கருள்வாயே சவதமொடுந் தாண்டித் தகரூர்வாய் சடுசமயங் காண்டற் கரியானே சிவகுமரன் பீண்டிற் பெயரானே திருமுருகன் பூண்டிப் பெருமாளே.

260. ஆங்குடல் வளைந்து

ராகம் : ஆஹிரி தாளம் : ஆதி ஆங்குடல் வளைந்து நீங்குபல் நெகிழ்ந்து ஆய்ஞ்சுதளர் சிந்தை தடுமாறி ஆர்ந்துள கடன்கள் வாங்கவு மறிந்து ஆண்டுபல சென்று கிடையோடே ஊங்கிருமல் வந்து வீங்குகுடல் நொந்து ஓய்ந்துணர் வழிந்து உயிர்போமுன் ஓங்குமயில் வந்து சேண்பெறஇ சைந்து ஊன்றிய பதங்கள் தருவாயே

259. திரைவார் கடல்

ராகம் : சுபபந்துவராளி தாளம் : கண்டஏகம் (5) திரைவார் கடல்சூழ்புவி தனிலே யுலகோரொடு திரிவே னுனையோதுதல் திகழாமே தினநா ளுமுனேதுதி மனதா ரபினேசிவ சுதனே திரிதேவர்கள் தலைவாமால் வரைமா துமையாள் தரு மணியே குகனேயென அறையா வடியேனுமு னடியாராய் வழிபா டுறுவாரொடு அருளா தரமாயிடு மகநா ளுளதோசொல அருள்வாயே

258. கடிய வேக

ராகம் : கல்யாண வசந்தம் அங்கதாளம் 1½ + 1½ + 2½ (5½) கடிய வேக மாறாத விரத சூத ராபாதர் கலக மேசெய் பாழ்மூடர் வினைவேடர் கபட வீன ராகாத இயல்பு நாடி யேநீடு கனவி கார மேபேசி நெறி பேணாக் கொடிய னேது மோராது விரக சால மேமூடு குடிலின் மேவி யேநாளு மடியாதே குலவு தோகை மீதாறு முகமும் வேலு மீராறு குவளை வாகும் நேர்காண வருவாயே

257. இகல வருதிரை

ராகம்: கீரவாணி அங்க தாளம் (7½) 1½ + 2 + 2 + 2 இகல வருதிரை பெருகிய சலநிதி நிலவு முலகினி லிகமுறு பிறவியி னினிமை பெறவரு மிடருறு மிருவினை யதுதீர இசையு முனதிரு பதமலர் தனைமன மிசைய நினைகிலி யிதமுற வுனதரு ளிவர வுருகிலி அயர்கிலி தொழுகிலி உமைபாகர் மகிழு மகவென அறைகிலி நிறைகிலி மடமை குறைகிலி மதியுணர் வறிகிலி வசன மறவுறு மவுனமொ டுறைகிலி மடமாதர் மயம தடரிட இடருறு மடியனு மினிமை தருமுன தடியவ ருடனுற மருவ அருள்தரு கிருபையின் மலிகுவ தொருநாளே

256. அறமிலா

ராகம் : பூர்விகல்யாணி அங்கதாளம் 1½ + 2 + 2 + 2 + 3 (10½) அறமி லாவதி பாதக வஞ்சத் தொழிலாலே அடிய னேன்மெலி வாகிம னஞ்சற் றிளையாதே திறல்கு லாவிய சேவடி வந்தித் தருள்கூடத் தினமு மேமிக வாழ்வுறு மின்பைத் தருவாயே விறல்நி சாசரர் சேனைக ளஞ்சப் பொரும்வேலா விமல மாதபி ராமித ருஞ்செய்ப் புதல்வோனே மறவர் வாணுதல் வேடைகொ ளும்பொற் புயவீரா மயிலை மாநகர் மேவிய கந்தப் பெருமாளே.

255. அமரும் அமரரினில்

ராகம் : ராமப்பிரியா தாளம் : ஆதி அமரு மமரரினி லதிக னயனுமரி யவரும் வெருவவரு மதிகாளம் அதனை யதகரண விதன பரிபுரண மமைய னவர்கரண அகிலேச நிமிர வருள்சரண நிபிட மதெனவுன நிமிர சமிரமய நியமாய நிமிட மதனிலுண வலசி வசுதவர நினது பதவிதர வருவாயே

254. திமிர மாமன

ராகம் : பந்துவராளி அங்கதாளம் 1½ + 2 + 2 (5½) திமிர மாமன மாமட மடமை யேனிட ராணவ திமிர மேயரி சூரிய திரிலோக தினக ராசிவ காரண பனக பூஷண ஆரண சிவசு தாவரி நாரணன் மருகோனே குமரி சாமளை மாதுமை அமலி யாமளை பூரணி குணக லாநிதி நாரணி தருகோவே குருகு காகும ரேசுர சரவ ணாசக ளேசுர குறவர் மாமக ளாசைகொள் மணியேசம்

253. இரத்தமும் சியும்

ராகம் : முகாரி தாளம் : ஆதி (2 களை) இரத்த முஞ்சியு மூளையெ லும்புட் டசைப்ப சுங்குடல் நாடிபு னைந்திட் டிருக்கு மண்சல வீடுபு குந்திட் டதில்மேவி இதத்து டன்புகல் சூதுமி குந்திட் டகைத்தி டும்பொரு ளாசையெ னும்புட் டெருட்ட வுந்தெளி யாதுப றந்திட் டிடமாயா பிரத்தம் வந்தடு வாதசு ரம்பித் துளைப்பு டன்பல வாயுவு மிஞ்சிப் பெலத்தை யுஞ்சில நாளுளொ டுங்கித் தடிமேலாய்ப் பிடித்தி டும்பல நாள்கொடு மந்திக் குலத்தெ னும்படி கூனிய டங்கிப் பிசக்கு வந்திடு போதுபி னஞ்சிச் சடமாமோ

252. பக்குவ ஆசார

ராகம் : தேஷ் ஸங்கீர்ணசாபு 2 + 2½ (4½) பக்குவ வாசார லட்சண சாகாதி பட்சண மாமோன சிவயோகர் பத்தியி லாறாறு தத்துவ மேல்வீடு பற்றுநி ராதார நிலையாக அக்கண மேமாய துர்க்குணம் வேறாக அப்படை யேஞான வுபதேசம் அக்கற வாய்பேசு சற்குரு நாதாவு னற்புத சீர்பாத மறவேனே

251. இருவினைப் பிறவி

ராகம் : மாண்டு தாளம் : மிஸ்ரசாபு 2 + 1½ இருவினைப் பிறவிக் கடல்மூழ்கி இடர்கள்பட் டலையப் புகுதாதே திருவருட் கருணைப் ப்ரபையாலே திரமெனக் கதியைப் பெறுவேனோ அரியயற் கறிதற் கரியானே அடியவர்க் கெளி யற் புதநேயா குருவெனச் சிவனுக் கருள்போதா கொடுமுடிக் குமரப் பெருமாளே.

250. நிணமொடு குருதி

ராகம் : பைரவி தாளம் : அங்கதாளம் (7½) 2 + 2 + 1½ + 2 நிணமொடு குருதி நரம்பு மாறிய தசைகுடல் மிடையு மெலும்பு தோலிவை நிரைநிரை செறியு முடம்பு நோய்படு முதுகாயம் நிலைநிலை யுருவ மலங்க ளாவது நவதொளை யுடைய குரம்பை யாமிதில் நிகழ்தரு பொழுதில் முயன்று மாதவ முயவோரும் உணர்விலி செபமுத லொன்று தானிலி நிறையிலி முறையிலி யன்பு தானிலி உயர்விலி யெனினுமெ னெஞ்சு தானினை வழியாமுன் ஒருதிரு மரகத துங்க மாமிசை யறுமுக மொளிவிட வந்து நான்மறை யுபநிட மதனை விளங்க நீயருள் புரிவாயே

249. இருவினை அஞ்ச

ராகம் : ஹிந்தோளம் தாளம் : மிஸ்ரசாபு 2 + 1½ (3½) இருவினை யஞ்ச வருவினை கெஞ்ச இருள்பிணி துஞ்ச மலமாய எனதிடர் மங்க வுனதருள் பொங்க இசைகொடு துங்க புகழ்கூறித் திருமுக சந்த்ர முருகக டம்ப சிவசுத கந்த குகவேல சிவசிவ என்று தெளி வுறு நெஞ்சு திகழந டஞ்செய் கழல்தாராய்

248. அறிவிலாதவர் ஈனர்

ராகம் : நாட்டை அங்கதாளம் (8) 1½ + 1 + 1 + 1½ + 1½ + 1½ அறிவி லாதவ ரீனர்பேச் சிரண்டு பகரு நாவினர் லோபர்தீக் குணங்க ளதிக பாதகர் மாதர்மேற் கலன்கள் புனையாதர் அசடர் பூமிசை வீணராய்ப் பிறந்து திரியு மானுடர் பேதைமார்க் கிரங்கி யழியு மாலினர் நீதிநூற் பயன்கள் தெரியாத நெறியி லாதவர் சூதினாற் கவர்ந்து பொருள்செய் பூரியர் மோகமாய்ப் ப்ரபஞ்ச நிலையில் வீழ்தரு மூடர்பாற் சிறந்த தமிழ்கூறி நினைவு பாழ்பட வாடிநோக் கிழந்து வறுமை யாகிய தீயின்மேற் கிடந்து நெளியு நீள்புழு வாயினேற் கிரங்கி யருள்வாயே

247. ஆசார வீன

ராகம் : ரேவதி அங்கதாளம் (8½) 2½ + 2 + 4 ஆசார வீனக் குதர்க்க துட்டர்கள் மாதாபி தாவைப் பழித்த துட்டர்கள் ஆமாவி னூனைச் செகுத்த துட்டர்கள் பரதாரம் ஆகாதெ னாமற் பொசித்த துட்டர்கள் நானாவு பாயச் சரித்ர துட்டர்கள் ஆவேச நீரைக் குடித்த துட்டர்கள் தமியோர்சொங் கூசாது சேரப் பறித்த துட்டர்கள் ஊரார்க ளாசைப் பிதற்று துட்டர்கள் கோலால வாள்விற் செருக்கு துட்டர்கள் குருசேவை கூடாத பாவத் தவத்த துட்டர்கள் ஈயாது தேடிப் புதைத்த துட்டர்கள் கோமாள நாயிற் கடைப்பி றப்பினி லுழல்வாரே

246. பச்சையொண் கிரி

ராகம் : யதுகுலகாம்போதி அங்கதாளம் (7½) 1½ + 2 + 2 + 2 பச்சை யொண்கிரி போலிரு மாதன முற்றி தம்பொறி சேர்குழல் வாளயில் பற்று புண்டரி காமென ஏய்கயல் விழிஞான பத்தி வெண்டர ளாமெனும் வாணகை வித்ரு மஞ்சிலை போல்நுத லாரிதழ் பத்ம செண்பக மாமநு பூதியி னழகாளென் றிச்சை யந்தரி பார்வதி மோகினி தத்தை பொன்கவி னாலிலை போல்வயி றிற்ப சுங்கிளி யானமி னூலிடை யபிராமி எக்கு லங்குடி லோடுல கியாவையு மிற்ப திந்திரு நாழிநெ லாலற மெப்பொ தும்பகிர் வாள்கும ராஎன வுருகேனோ

245. வங்கார மார்பு

ராகம் : சிந்துபைரவி தாளம் : சதுஸ்ரத்ருவம் கண்டநடை (35) வங்கார மார்பிலணி தாரொடுயர் கோடசைய கொந்தார மாலைகுழ லாரமொடு தோள்புரள வண்காதி லோலைகதிர் போலவொளி வீசஇதழ் மலர்போல மஞ்சாடு சாபநுதல் வாளனைய வேல்விழிகள் கொஞ்சார மோககிளி யாகநகை பேசியுற வந்தாரை வாருமிரு நீருறவெ னாசைமய லிடுமாதர் சங்காளர் சூதுகொலை காரர்குடி கேடர்சுழல் சிங்கார தோளர்பண ஆசையுளர் சாதியிலர் சண்டாளர் சீசியவர் மாயவலை யோடடியெ னுழலாமற் சங்கோதை நாதமொடு கூடிவெகு மாயையிருள் வெந்தோட மூலஅழல் வீசவுப தேசமது தண்காதி லோதியிரு பாதமலர் சேரஅருள் புரிவாயே

244. வேதத்திற் கேள்வி

ராகம் : ஸ்ரீரஞ்சனி தாளம் : திஸ்ர த்ரிபுடை வேதத்திற் கேள்வி யிலாதது போதத்திற் காண வொணாதது வீசத்திற் றூர மிலாதது கதியாளர் வீதித்துத் தேடரி தானது ஆதித்தற் காய வொணாதது வேகத்துத் தீயில் வெகாதது சுடர்கானம் வாதத்துக் கேயவி யாதது காதத்திற் பூவிய லானது வாசத்திற் பேரொளி யானது மதமூறு மாயத்திற் காய மதாசல தீதர்க்குத் தூரம தாகிய வாழ்வைச்சற் காரம தாஇனி யருள்வாயே

243. அலங்கார முடிக்கிரண

ராகம் : பாகேஸ்வரி தாளம் : திச்ர ஏகம் அலங்கார முடிக்கிரணத் திரண்டாறு முகத்தழகிற் கசைந்தாடு குழைக்கவசத் திரடோளும் அலந்தாம மணித்திரளை புரண்டாட நிரைத்தகரத் தணிந்தாழி வனைக்கடகச் சுடர்வேலுஞ் சிலம்போடு மணிச்சுருதிச் சலங்கோசை மிகுத்ததிரச் சிவந்தேறி மணத்தமலர்ப் புனைபாதந் திமிந்தோதி திமித்திமிதித் தனந்தான தனத்தனனத் தினந்தோறு நடிப்பதுமற் புகல்வேனோ

242. சுருதியாய் இயலாய்

ராகம் : துர்கா அங்கதாளம் 1½ + 2 + 2 + 2 (7½) சுருதி யாயிய லாயியல் நீடிய தொகுதி யாய்வெகு வாய்வெகு பாஷைகொள் தொடர்பு மாயடி யாய்நடு வாய்மிகு துணையாய்மேல் துறவு மாயற மாய்நெறி யாய்மிகு விரிவு மாய்விளை வாயருள் ஞானிகள் சுகமு மாய்முகி லாய்மழை யாயெழு சுடர்வீசும் பருதி யாய்மதி யாய்நிறை தாரகை பலவு மாய்வெளி யாயொளி யாயெழு பகலி ராவிலை யாய்நிலை யாய்மிகு பரமாகும் பரம மாயையி னேர்மையை யாவரு மறியொ ணாததை நீகுரு வாயிது பகரு மாறுசெய் தாய்முதல் நாளுறு பயனோதான்

241.ஏட்டின் விதிப்படி

ராகம் : பைரவி தாளம் : ஆதி (2 களை) ஏட்டின் விதிப்படி யேகொடு மாபுர வீட்டி லடைத்திசை வேகசை மூணதி லேற்றி யடித்திட வேகட லோடம தெனவேகி ஏற்கு மெனப்பொரு ளாசைபெ ணாசைகொ ளாத்து வெனத்திரி யாபரி யாதவ மேற்றி யிருப்பிட மேயறி யாமலு முடல்பேணிப் பூட்டு சரப்பளி யேமத னாமென ஆட்டி யசைத்திய லேதிரி நாளையில் பூத்த மலக்குகை தோபொதி சோறென கழுகாகம் போற்றி நமக்கிரை யாமென வேகொள நாட்டி லொடுக்கென வேவிழு போதினில் பூட்டு பணிப்பத மாமயி லாவருள் புரிவாயே

240. உரைத்த சம்ப்ரம

ராகம் : சங்கரானந்தப்ரியா தாளம் : ஆதி உரைத்த சம்ப்ரம வடிவு திரங்கிக் கறுத்த குஞ்சியும் வெளிறிய பஞ்சொத் தொலித்தி டுஞ்செவி செவிடுற வொண்கட் குருடாகி உரத்த வெண்பலு நழுவிம தங்கெட் டிரைத்து கிண்கிணெ னிருமலெ ழுந்திட் டுளைப்பு டன்தலை கிறுகிறெ னும்பித் தமுமேல்கொண் டரத்த மின்றிய புழுவினும் விஞ்சிப் பழுத்து ளஞ்செயல் வசனம் வரம்பற் றடுத்த பெண்டிரு மெதிர்வர நிந்தித் தனைவோரும் அசுத்த னென்றிட வுணர்வது குன்றித் துடிப்ப துஞ்சிறி துளதில தென்கைக் கவத்தை வந்துயி ரலமரு மன்றைக் கருள்வாயே

239. உரிய தவநெறி

ராகம் : மாண்டு தாளம் : சதுஸ்ரத்ருவம் கண்ட நடை (35) உரியதவ நெறியில்நம நாராய ணாயவென ஒருமதலை மொழியளவி லோராத கோபமுட னுனதிறைவ னெதனிலுள னோதாய டாவெனுமு னுறுதூணில் உரமுடைய அரிவடிவ தாய்மோதி வீழவிரல் உகிர்புதைய இரணியனை மார்பீறி வாகைபுனை உவணபதி நெடியவனும் வேதாவும் நான்மறையு முயர்வாக வரியளிக ளிசைமுரல வாகான தோகையிள மயிலிடையில் நடனமிட ஆகாச மூடுருவ வளர்கமுகின் விரிகுலைகள் பூணார மாகியிட மதில்சூழும் மருதரசர் படைவிடுதி வீடாக நாடிமிக மழவிடையின் மிசையிவரு சோமீசர் கோயில்தனில் மகிழ்வுபெற வுறைமுருக னேபேணு வானவர்கள் பெருமாளே இரவினிடை துயிலுகினும் யாரோடு பேசுகினும் இளமையுமு னழகுபுனை யீராறு தோள் நிரையும் இருபதமு மறுமுகமும் யானோத ஞானமதை யருள்வாயே

238. ஒருவழிபடாது

ராகம் : செஞ்சுருட்டி அங்கதாளம் 2 + 2 + 1½ (5½) ஒருவழிப டாது மாயை யிருவினைவி டாது நாளு முழலுமநு ராக மோக அநுபோகம் உடலுமுயிர் தானு மாயு னுணர்விலொரு காலி ராத வுளமுநெகிழ் வாகு மாறு அடியேனுக் கிரவுபகல் போன ஞான பரமசிவ யோக தீர மெனமொழியும் வீசு பாச கனகோப எமபடரை மோது மோன வுரையிலுப தேச வாளை யெனதுபகை தீர நீயும் அருள்வாயே

237. பரிவுறு நாரற்று

ராகம் : கானடா தாளம் : ஆதி பரிவுறு நாரற் றழல்மதி வீசச் சிலைபொரு காலுற் றதனாலே பனிபடு சோலைக் குயிலது கூவக் குழல்தனி யோசைத் தரலாலே மருவியல் மாதுக் கிருகயல் சோரத் தனிமிக வாடித் தளராதே மனமுற வாழத் திருமணி மார்பத் தருள்முரு காவுற் றணைவாயே

236. பூமாதுரமே அணி

ராகம் : பந்துவராளி தாளம் : திச்ர த்ருபுடை (7) பூமாதுர மேயணி மான்மறை வாய்நாலுடை யோன்மலி வானவர் கோமான்முநி வோர்முதல் யாருமி யம்புவேதம் பூராயம தாய்மொழி நூல்களும் ஆராய்வதி லாதட லாசுரர் போரால்மறை வாயுறு பீதியின் வந்துகூடி நீமாறரு ளாயென ஈசனை பாமாலைக ளால்தொழு தேதிரு நீறார்தரு மேனிய தேனியல் கொன்றையோடு நீரேர்தரு சானவி மாமதி காகோதர மாதுளை கூவிளை நேரோடம் விளாமுத லார்சடை யெம்பிரானே