Posts

Showing posts from 2015

206. வாட்பட

ராகம் : சாருகேசி தாளம் : கண்டசாபு (2½) வாட்படச் சேனைபட வோட்டியொட் டாரையிறு மாப்புடைத் தாளரசர் பெருவாழ்வும் மாத்திரைப் போதிலிடு காட்டினிற் போமெனஇல் வாழ்க்கைவிட் டேறுமடி யவர்போலக் கோட்படப் பாதமலர் பார்த்திளைப் பாறவினை கோத்தமெய்க் கோலமுடன் வெகுரூபக் கோப்புடைத் தாகியல மாப்பினிற் பாரிவரு கூத்தினிப் பூரையிட அமையாதோ

205. மனத்திரை

ராகம் : முகாரி தாளம் : ஆதி மனத்தி ரைந்தெழு மீளையு மேலிட கறுத்த குஞ்சியு மேநரை யாயிட மலர்க்க ணண்டிரு ளாகியு மேநடை தடுமாறி வருத்த முந்தர தாய்மனை யாள்மக வெறுத்தி டங்கிளை யோருடன் யாவரும் வசைக்கு றுஞ்சொலி னால்மிக வேதின நகையாட எனைக்க டந்திடு பாசமு மேகொடு சினத்து வந்தெதிர் சூலமு மேகையி லெடுத்தெ றிந்தழல் வாய்விட வேபய முறவேதான் இழுக்க வந்திடு தூதர்க ளானவர் பிடிக்கு முன்புன தாள்மல ராகிய இணைப்ப தந்தர வேமயில் மீதினில் வரவேணும்

204. இறவாமற்

ராகம் : காபி தாளம் : கண்டசாபு (2½) இறவாமற் பிறவாமல் எனையாள்சற் குருவாகிப் பிறவாகித் திரமான பெருவாழ்வைத் தருவாயே குறமாதைப் புணர்வோனே குகனேசொற் குமரேசா அறநாலைப் புகல்வோனே அவிநாசிப் பெருமாளே

203. கருகி அறிவு

ராகம் : பூர்விகல்யாணி அங்கதாளம் (9½) 2½ + 2½ + 2 + 1½ + 1 கருகியறி வகலவுயிர் விட்டுக் கிக்கிளைஞர் கதறியழ விரவுபறை முட்டக் கொட்டியிட கனகமணி சிவிகையில மர்த்திக் கட்டையினி லிடைபோடாக் கரமலர்கொ டரிசியினை யிட்டுச் சித்ரமிகு கலையைபுரி செய்துமறைகள் பற்றப் பற்றுகனல் கணகணென எரியவுடல் சுட்டுக் கக்ஷியவர் வழியேபோய் மருவுபுனல் முழுகிமனை புக்குத் துக்கமறு மனிதர்தமை யுறவுநிலை சுட்டுச் சுட்டியுற மகிழ்வுசெய்து அழுதுபட வைத்தத் துட்டன்மதன் மலராலே மயல்விளைய அரிவையர்கள் கைப்பட் டெய்த்துமிக மனமழியு மடிமையைநி னைத்துச் சொர்க்கபதி வழியையிது வழியெனவு ரைத்துப் பொற்கழல்கள் தருவாயே

202. மாலாசை கோப

ராகம் : மாண்டு தாளம் : ஆதி மாலாசை கோப மோயாதெ நாளு மாயா விகார வழியேசெல் மாபாவி காளி தானேனு நாத மாதா பிதாவு மினிநீயே நாலான வேத நூலாக மாதி நானோதி னேனு மிலைவீணே நாள்போய் விடாம லாறாறு மீதில் ஞானோப தேச மருள்வாயே

201. நிராமய

ராகம் : தேஷ் ஆதி கண்ட நடை (20) நிராமய புராதன பராபர வராம்ருத நிராகுல சிராதிகப் ப்ரபையாகி நிராசசி வராஜத வராகர்கள் பராவிய நிராயுத புராரியச் சுதன்வேதா சுராலய தராதல சராசர பிராணிகள் சொரூபமி வராதியைக் குறியாமே துரால்புகழ் பராதின கராவுள பராமுக துரோகரை தராசையுற் றடைவேனோ

200. தூதாளரோடு

ராகம் : சஹானா தாளம் : 7½ 2½ + 1½ + 1½ + 2 தூதாள ரோடு காலன் வெருவிட வேதாமு ராரி யோட அடுபடை சோராவ லாரி சேனை பொடிபட மறைவேள்விச் சோமாசி மார்சி வாய நமவென மாமாய வீர கோர முடனிகல் சூர்மாள வேலை யேவும் வயலியி லிளையோனே கூதாள நீப நாக மலர்மிசை சாதாரி தேசி நாம க்ரியைமுதல் கோலால நாத கீத மதுகர மடர்சோலை கூராரல் தேரு நாரை மருவிய கானாறு பாயு மேரி வயல்பயில் கோனாடு சூழ்வி ராலி மலையுறை பெருமாளே.

199. சீரான கோல

ராகம் : கீரவாணி தாளம் : 2½ + 1½ +1½ + 2 சீரான கோல கால நவமணி மாலாபி ஷேக பார வெகுவித தேவாதி தேவர் சேவை செயுமுக மலராறும் சீராடு வீர மாது மருவிய ஈராறு தோளு நீளும் வரியளி சீராக மோது நீப பரிமள இருதாளும் ஆராத காதல் வேடர் மடமகள் ஜீமூத மூர்வ லாரி மடமகள் ஆதார பூத மாக வலமிட முறைவாழ்வும் ஆராயு நீதி வேலு மயிலு மெய்ஞ் ஞானாபி ராம தாப வடிவமும் ஆபாத னேனு நாளு நினைவது பெறவேணும்

198. கொடாதவனையே புகழ்ந்து

ராகம் : கரஹரப்ரியா சதுஸ்ர ரூபகம் (6) கொடாதவனை யேபு கழ்ந்து குபேரனென வேமொ ழிந்து குலாவியவ மேதி ரிந்து புவிமீதே எடாதசுமை யேசு மந்து எணாதகலி யால்மெ லிந்து எலாவறுமை தீர அன்று னருள்பேணேன் சுடாததன மான கொங்கை களாலிதய மேம யங்கி சுகாதரம தாயொ ழுங்கி லொழுகாமல் கெடாததவ மேம றைந்து கிலேசமது வேமி குந்து கிலாதவுட லாவி நொந்து மடியாமுன்

197. கரிபுராரி

ராகம் : தோடி அங்கதாளம் (5½) 1½ + 1½ + 2½ கரிபு ராரி காமாரி திரிபு ராரி தீயாடி கயிலை யாளி காபாலி கழையோனி கரவு தாச னாசாரி பரசு பாணி பானாளி கணமொ டாடி காயோகி சிவயோகி பரம யோகி மாயோகி பரிய ராஜ டாசூடி பகரொ ணாத மாஞானி பசுவேறி பரத மாடி கானாடி பரவ யோதி காதீத பரம ஞான வூர்பூத அருளாயோ

196. ஐந்து பூதமும்

Image
ராகம்: பைரவி தாளம்: மிஸ்ரசாபு (3½) 1½ + 2 ஐந்து பூதமு மாறு சமயமு மந்த்ர வேதபு ராண கலைகளும் ஐம்ப தோர்வித மான லிபிகளும் வெகுரூப அண்ட ராதிச ராச ரமுமுயர் புண்ட ரீகனு மேக நிறவனும் அந்தி போலுரு வானு நிலவொடு வெயில்காலும் சந்த்ர சூரியர் தாமு மசபையும் விந்து நாதமு மேக வடிவம தன்சொ ரூபம தாக வுறைவது சிவயோகம் தங்க ளாணவ மாயை கருமம லங்கள் போயுப தேச குருபர சம்ப்ர தாயமொ டேயு நெறியது பெறுவேனோ

195. இலாபமில்

Image
ராகம் : மனோலயம் தாளம் : ஆதி கண்ட நடை (20) இலாபமில் பொலாவுரை சொலாமன தபோதன ரியாவரு மிராவுபக லடியேனை இராகமும் விநோதமு முலோபமு டன்மோகமு மிலானிவ னுமாபுருஷ னெனஏய சலாபவ மலாகர சசீதர விதாரண சதாசிவ மயேசுரச கலலோக சராசர வியாபக பராபர மநோலய சமாதிய நுபூதிபெற நினைவாயே

194. சரவண ஜாதா

ராகம் : ஆனந்தபைரவி அங்கதாளம் (6½) 2 + 2 + 1½ + 1 சரவண ஜாதா நமோநம கருணைய தீதா நமோநம சததள பாதா நமோநம அபிராம தருணக தீரா நமோநம நிருபமர் வீரா நமோநம சமதள வூரா நமோநம ஜகதீச பரம சொரூபா நமோநம சுரர்பதி பூபா நமோநம பரிமள நீபா நமோநம உமைகாளி பகவதி பாலா நமோநம இகபர மூலா நமோநம பவுருஷ சீலா நமோநம அருள்தாராய்

193 அல்லில் நேர்

ராகம் : அடாணா அங்க தாளம் 1½ + 2 + 3 (6½) அல்லில் நேருமி னதுதானும் அல்ல தாகிய உடல்மாயை கல்லி னேரஅ வழிதோறுங் கையு நானுமு லையலாமோ சொல்லி நேர்படு முதுசூரர் தொய்ய வூர்கெட விடும்வேலா வல்லி மாரிரு புறமாக வள்ளி யூருறை பெருமாளே.

192. சிரமங்க மங்கை

ராகம் : ராமப்பிரியா தாளம் : 2½ + 2½ சிரமங்க மங்கைகண் செவிவஞ்ச நெஞ்சுசெஞ் சலமென்பு திண்பொருந் திடுமாயம் சிலதுன்ப மின்பமொன் றிறவந்து பின்புசெந் தழலிண்கண் வெந்துசிந் திடஆவி விரைவின்க ணந்தகன் பொரவந்த தென்றுவெந் துயர்கொண்ட லைந்துலைந் தழியாமுன் வினையொன்று மின்றிநன் றியலொன்றி நின்பதம் வினவென்று அன்புதந் தருள்வாயே

191. குடிவாழ்க்கை

> ராகம் : அமிர்தவர்ஷிணி தாளம் : ஆதி குடிவாழ்க்கை யன்னை மனையாட்டி பிள்ளை குயில்போற்ப்ர சன்ன மொழியார்கள் குலம்வாய்த்த நல்ல தனம்வாய்த்த தென்ன குருவார்த்தை தன்னை யுணராதே இடநாட்கள் வெய்ய நமனீட்டி தொய்ய இடர்கூட்ட இன்னல் கொடுபோகி இடுகாட்டி லென்னை எரியூட்டு முன்னு னிருதாட்கள் தம்மை யுணர்வேனோ

190. ககனமும் அநிலமும்

ராகம் : ஆனந்தபைரவி தாளம் : ஆதி 2 களை ககனமு மநிலமு மனல்புனல் நிலமமை கள்ளப் புலாற்கி ருமிவீடு கனலெழ மொழிதரு சினமென மதமிகு கள்வைத்த தோற்பை சுமவாதே யுகஇறு திகளிலு மிறுதியி லொருபொருள் உள்ளக்க ணோக்கு மறிவூறி ஒளிதிக ழருவுரு வெனுமறை யிறுதியி லுள்ளத்தை நோக்க அருள்வாயே

189. ஐயுமுறு நோயும்

ராகம் : மோகனம் தாளம் : ஆதி ஐயுமுறு நோயு மையலும வாவி னைவருமு பாயப் பலநூலின் அள்ளல்கட வாது துள்ளியதில் மாயு முள்ளமுமில் வாழ்வைக் கருதாசைப் பொய்யுமக லாத மெய்யைவள ராவி உய்யும்வகை யோகத் தணுகாதே புல்லறிவு பேசி யல்லல் படு வேனை நல்லஇரு தாளிற் புணர்வாயே

188. அல்லி விழியாலும்

ராகம் : தர்பாரி கானடா தாளம் : ஆதி அல்லிவிழி யாலு முல்லைநகை யாலு மல்லல்பட ஆசைக் கடலீயும் அள்ளவினி தாகி நள்ளிரவு போலு முள்ளவினை யாரத் தனமாரும் இல்லுமிளை யோரு மெல்ல அயலாக வல்லெருமை மாயச் சமனாரும் எள்ளியென தாவி கொள்ளைகொளு நாளில் உய்யவொரு நீபொற் கழல்தாராய்

187. பாட்டிலுருகிலை

ராகம் : சங்கரானந்தப்ரியா தாளம் : மிஸ்ரசாபு (2 + 1½) பாட்டி லுருகிலை கேட்டு முருகிலை கூற்று வருவழி பார்த்து முருகிலை பாட்டை யநுதின மேற்று மறிகிலை தினமானம் பாப்ப ணியனருள் வீட்டை விழைகிலை நாக்கி னுனிகொடு ஏத்த அறிகிலை பாழ்த்த பிறவியி லேற்ற மனதுநல் வழிபோக மாட்ட மெனுகிறை கூட்டை விடுகிலை யேட்டின் விதிவழி யோட்ட மறிகிலை பார்த்து மினியொரு வார்த்தை அறைகுவ னிதுகேளாய் வாக்கு முனதுள நோக்கு மருளுவ னேத்த புகழடி யார்க்கு மெளியனை வாழ்த்த இருவினை நீக்கு முருகனை மருவாயோ

186. சாந்தமில்

Image
ராகம் : ஷண்முகப்ரியா தாளம் : சங்கீர்ண சாபு (4½) 2 + 1½ + 1 சாந்தமில் மோகவெரி காந்திய வாவனில மூண்டவி யாதசம யவிரோத சாங்கலை வாரிதியை நீந்தவொ ணாதுலகர் தாந்துணை யாவரென மடவார்மேல் ஏந்திள வார்முளரி சாந்தணி மார்பினொடு தோய்ந்துரு காவறிவு தடுமாறி ஏங்கிட ஆருயிரை வாங்கிய காலன்வசம் யான்தனி போய்விடுவ தியல்போதான்

185. சரவண பவநிதி

ராகம் : பிருந்தாவன சாரங்கா தாளம் : ஆதி சரவண பவநிதி யறுமுக குருபர சரவண பவநிதி யறுமுக குருபர சரவண பவநிதி யறுமுக குருபர எனவோதித் தமிழினி லுருகிய வடியவ ரிடமுறு சனனம ரணமதை யொழிவுற சிவமுற தருபிணி துளவர மெமதுயிர் சுகமுற வருள்வாயே கருணைய விழிபொழி யொருதனி முதலென வருகரி திருமுகர் துணைகொளு மிளையவ கவிதைய முதமொழி தருபவ ருயிர்பெற வருள்நேயா கடலுல கினில்வரு முயிர்படு மவதிகள் கலகமி னையதுள கழியவும் நிலைபெற கதியுமு னதுதிரு வடிநிழல் தருவது மொருநாளே

184. கறுத்ததலை

Image
ராகம் : முகாரி அங்க தாளம் (6½) 3 + 2 + 1½ கறுத்ததலை வெளிறு மிகுந்து மதர்த்த இணை விழிகள் குழிந்து கதுப்பிலுறு தசைகள் வறண்டு செவிதோலாய்க் கழுத்தடியு மடைய வளைந்து கனத்தநெடு முதுகு குனிந்து கதுப்புறுப லடைய விழுந்து தடுநீர்சோர உறக்கம்வரு மளவி லெலும்பு குலுக்கிவிடு மிருமல் தொடங்கி உரத்தகன குரலு நெரிந்து தடிகாலாய் உரத்தநடை தளரு முடம்பு பழுத்திடுமுன் மிகவும் விரும்பி உனக்கடிமை படுமவர் தொண்டு புரிவேனோ

183. கரிவாம்பரி (வரிசேர்ந்திடு)

ராகம் : சக்ரவாஹம் திஸ்ர த்ரிபுட கரிவாம்பரி தேர்திரள் சேனையு முடனாந்துரி யோதன னாதிகள் களமாண்டிட வேயொரு பாரத மதிலேகிக் கனபாண்டவர் தேர்தனி லேயெழு பரிதூண்டிய சாரதி யாகிய கதிரோங்கிய நேமிய னாமரி ரகுராமன் திரைநீண்டிரை வாரியும் வாலியும் நெடிதோங்கும ராமர மேழொடு தெசமாஞ்சிர ராவண னார்முடி பொடியாகச் சிலைவாங்கிய நாரண னார்மரு மகனாங்குக னேபொழில் சூழ்தரு திருவேங்கட மாமலை மேவிய பெருமாளே. எனதாந்தன தானவை போயற மலமாங்கடு மோகவி காரமு மிவைநீங்கிட வேயிரு தாளினை யருள்வாயே

182. ஒருபதும் இருபதும்

ராகம் : பிலஹரி தாளம் : ஆதி ஒருபது மிருபது மறுபது முடனறு முணர்வுற இருபத முளநாடி உருகிட முழுமதி தழலென வொளிதிகழ் வெளியொடு வொளிபெற விரவாதே தெருவினில் மரமென எவரொடு முரைசெய்து திரிதொழி லவமது புரியாதே திருமகள் மருவிய திரள்புய அறுமுக தெரிசனை பெறஅருள் புரிவாயே

181. புற்புதம்

ராகம் : நவரச கானடா தாளம் : ஆதி புற்புதமெ னாம அற்பநிலை யாத பொய்க்குடில்கு லாவு மனையாளும் புத்திரரும் வீடு மித்திரரு மான புத்திசலி யாத பெருவாழ்வு நிற்பதொரு கோடி கற்பமென மாய நிட்டையுடன் வாழு மடியேன்யான் நித்தநின தாளில் வைத்ததொரு காதல் நிற்கும்வகை யோத நினைவாயே

180. பத்தர் கணப்ரிய

ராகம் : பீம்ப்ளாஸ் தாளம் : ஆதி பத்தர்க ணப்ரிய நிர்த்தந டித்திடு பட்சிந டத்திய குகபூர்வ பச்சிம தட்சிண வுத்தர திக்குள பத்தர்க ளற்புத மெனவோதுஞ் சித்ரக வித்துவ சத்தமி குத்ததி ருப்புக ழைச்சிறி தடியேனுஞ் செப்பென வைத்துல கிற்பர வத்தெரி சித்தவ நுக்ரக மறவேனே கத்திய தத்தைக ளைத்துவி ழத்திரி கற்கவ ணிட்டெறி தினைகாவல் கற்றகு றத்திநி றத்தக ழுத்தடி கட்டிய ணைத்தப னிருதோளா சத்தியை யொக்கஇ டத்தினில் வைத்தத கப்பனு மெச்சிட மறைநூலின் தத்துவ தற்பர முற்றுமு ணர்த்திய சர்ப்பகி ரிச்சுரர் பெருமாளே.

179. கொடிய மறலியும்

ராகம் : சந்த்ரகௌன்ஸ் அங்கதாளம் (7½) 1½ + 2 + 2 + 2 கொடிய மறலியு மவனது கடகமு மடிய வொருதின மிருபதம் வழிபடு குதலை யடியவ னினதருள் கொடுபொரு மமர்காண குறவர் மகள்புணர் புயகிரி சமுகமு மறுமு கமும்வெகு நயனமும் ரவியுமிழ் கொடியு மகிலமும் வெளிபட இருதிசை யிருநாலும் படியு நெடியன எழுபுண ரியுமுது திகிரி திகிரியும் வருகென வருதகு பவுரி வருமொரு மரகத துரகத மிசையேறிப் பழய அடியவ ருடனிமை யவர்கண மிருபு டையுமிகு தமிழ்கொடு மறைகொடு பரவ வருமதி லருணையி லொருவிசை வரவேணும்

178. காலனிடத்து

ராகம் : சங்கராபரணம் தாளம் : திச்ர ஏகம் (3) காலனிடத் தணுகாதே காசினியிற் பிறவாதே சீலஅகத் தியஞான தேனமுதைத் தருவாயே மாலயனுக் கரியானே மாதவரைப் பிரியானே நாலுமறைப் பொருளானே நாககிரிப் பெருமாளே.

177. அன்பாக வந்து

ராகம் : ஆஹிரி தாளம் : ஆதி அன்பாக வந்து உன்றாள் பணிந்து ஐம்பூத மொன்ற நினையாமல் அன்பால் மிகுந்து நஞ்சாரு கண்க ளம்போரு கங்கள் முலைதானும் கொந்தே மிகுந்து வண்டாடி நின்று கொண்டாடு கின்ற குழலாரைக் கொண்டே நினைந்து மன்பேது மண்டி குன்றா மலைந்து அலைவேனோ

176. வாசித்துக் காணொணாதது

ராகம் : பூர்வி கல்யாணி தாளம் : அங்க தாளம் (3+ 1½ +2) வாசித்துக் காணொ ணாதது பூசித்துக் கூடொ ணாதது வாய்விட்டுப் பேசொ ணாதது நெஞ்சினாலே மாசர்க்குத் தோணொ ணாதது நேசர்க்குப் பேரொ ணாதது மாயைக்குச் சூழொ ணாதது விந்துநாத ஓசைக்குத் தூர மானது மாகத்துக் கீற தானது லோகத்துக் காதி யானது கண்டுநாயேன் யோகத்தைச் சேரு மாறுமெய்ஞ் ஞானத்தைப் போதி யாயினி யூனத்தைப் போடி டாதும யங்கலாமோ

175. புவனத்தொரு

ராகம் : பெஹாக் தாளம் : ஆதி புவனத் தொருபொற் றொடிசிற் றுதரக் கருவிற் பவமுற் றுவிதிப் படியிற் புணர்துக் கசுகப் பயில்வுற் றுமரித் திடிலாவி புரியட் டகமிட் டதுகட் டியிறுக் கடிகுத் தெனஅச் சம்விளைத் தலறப் புரள்வித் துவருத் திமணற் சொரிவித் தனலூடே தவனப் படவிட் டுயிர்செக் கிலரைத் தணிபற் களுதிர்த் தெரிசெப் புருவைத் தழுவப் பணிமுட் களில்கட் டியிசித் திடவாய்கண் சலனப் படஎற் றியிறைச் சியறுத் தயில்வித் துமுரித் துநெரித் துளையத் தளையிட் டுவருத் தும்யமப் ரகரத் துயர்தீராய்

174. பகலிரவினில் தடுமாறா

ராகம் : மோகனம் தாளம் : திச்ர ஏகம் (3) பகலிரவினிற் றடுமாறா பதிகுருவெனத் தெளிபோத ரகசியமுரைத் தநுபூதி ரதநிலைதனைத் தருவாயே இகபரமதற் கிறையோனே இயலிசையின்முத் தமிழோனே சகசிரகிரிப் பதிவேளே சரவணபவப் பெருமாளே.

கந்தர் அநுபூதி 46-51

Image
Learn The Song ராகம் : சுருட்டி எந்தாயும் எனக்கு அருள் தந்தையும் நீ சிந்தாகுலமானவை தீர்த்து எனை ஆள் கந்தா! கதிர்வேலவனே! உமையாள் மைந்தா! குமரா! மறைநாயகனே! 46 enthAyum enakku aruL thandhaiyum nee! sindhAkulamAnavai theerththu enai AL kandhA! kadhirvElavanE! umaiyAL maindhA! kumarA! maRainAyaganE! 46 You are my mother and my merciful father. Wipe out all my turmoils and take possession of me. O Lord Skanda! O Lord with the luminous Vel! O Son of Uma Devi! O Kumara! O Lord of the Vedas!

கந்தர் அநுபூதி 41-45

Image
Learn The Song ராகம் : மோகனம் சாகாது, எனையே சரணங் களிலே கா கா, நமனார் கலகம் செயும் நாள் வாகா, முருகா, மயில் வாகனனே யோகா, சிவ ஞான உபதேசிகனே. 41 sAgAdhu enaiyE saraNangkaLilE kAgA namanAr kalagam seyum nAL vAgA murugA mayil vAganaNE yOgA siva njAna ubadhEsiganE! 41

கந்தர் அநுபூதி 36-40

Image
Learn The Song ராகம் : காபி நாதா குமரா நம என்று அரனார் ஓதாய் என ஓதியதெப் பொருள்தான் வேதா முதல் விண்ணவர் சூடும் மலர்ப் பாதா குறமின் பதசே கரனே! 36 nAdhA kumarA nama endRu aranAr OdhAi ena Odhiyadhu epporUl thAn? vEdhA mudhal viNNavar sUdumalarp pAdhA kuRamin pAdhasEgaranE! 36

கந்தர் அநுபூதி 31-35

Image
Learn The Song ராகம் : சிந்துபைரவி பாழ்வாழ்வு எனும் இப் படுமாயையிலே வீழ்வாய் என என்னை விதித்தனையே தாழ்வானவை செய்தன தாம் உளவோ? வாழ்வாய் இனி நீ மயில் வாகனனே. 31 pAzhvAzhvu enum ippadumAyaiyilE veezhvAi ena ennai vidhiththanaiyE thAzhvAnavai seidhavaithAm uLavO vAzhvAi ini nee mayilvAgananE! 31

கந்தர் அநுபூதி 26-30

Image
Learn The Song ராகம் : ஹம்சானந்தி ஆதாரம் இலேன் அருளைப் பெறவே நீதான் ஒரு சற்று நினைந்திலையே வேதாகம ஞான விநோதமநோ தீதா சுரலோக சிகாமணியே! 26 AdhAram ilEn aruLaip peRavE needhAn oru satRu ninaindhilaiyE vEdhAgama njAna vinOdha manO theedhA suralOga sigAmaNiyE! 26 I have no basis to receive Your grace (I have no support other than You) and You haven't thought favorably about me for a moment! Oh Crest Jewel of the celestial world! You are the personification of spiritual wisdom that is the essence of vedas and agamas. You are beyond the comprehension of the mind.

கந்தர் அநுபூதி 21-25

Image
Learn The Song ராகம் : பாகேஸ்வரி கருதா மறவா நெறிகாண, எனக்கு இருதாள் வனசம் தர என்று இசைவாய் வரதா, முருகா, மயில் வாகனனே விரதா, சுர சூர விபாடணனே. 21 arudhA maRavA neRikANa enakku iruthAL vanasam thara endRu isaivAi varadhA murugA mayilvAgananE viradhA sura vibAdaNanE! 21 When will you graciously grant Your twin feet so that I can attain the nirvikalpa state that transcends memory and forgetfulness? You liberally grant all the boons Your devotees seek; Your vehicle is the peacock; You slayed the obnoxious demon Soorapanman! (Nirvikalpa refers to a state in which there is no differnce between one's own spirit and the divine essence. It means being totally absorbed in the self without a distinct and separate consciousness of the knower, the known, and the knowing).

கந்தர் அநுபூதி 16-20

Image
Learn From Guruji ராகம் : கேதாரம் பேராசை எனும் பிணியில் பிணிபட்டு ஓரா வினையேன் உழலத் தகுமோ? வீரா, முது சூர் பட வேல் எறியும் சூரா, சுர லோக துரந்தரனே. 16 pEraasai enum piNiyil piNipattu Oraa vinaiyEn uzhala thagumO veeraa muthusoor padavEl eRiyum sooraa sura lOka thutanDaranE 16 Should I get muddled in inappropriate acts because of greed, which makes me unable to discriminate between what is good and what is bad? You are gallant; You are the protector of the celestial world who hurled the lance at the ancient demon Soorapanman! ஓரா வினையேன் ( Oraa vinaiyEn ) : incapable of discerning between right and wrong acts;

கந்தர் அநுபூதி 11-15

Image
Learn From Guruji ராகம் : ஆரபி கூகா என என் கிளை கூடி அழப் போகா வகை, மெய்ப்பொருள் பேசியவா நாகாசல வேலவ நாலு கவித் தியாகா சுரலோக சிகாமணியே. 11 kookaa ena en kiLai koodi azha, pOgaa vagai mey poruL pEsiyavaa naagaasala vElava naalu kavith thyaaga a suralOka sikhaamaNiyE 11 Oh, the vel-wielding lord of Tiruchengodu (Nagaachala Velava), You are the Supreme and Eternal Substance who preached me Real Knowledge to help me escape the misery of dying, with wailing kinsmen gathered around me. You taught me how to compose and sing Your Sacred praise in four kinds of Tamil verses (known as aasu, mathuram, chiththiram and viththaaram). (Or, You are the great Lord who graciously grants the devotees the ability to sing of Your Sacred praise by composing four kinds of [Tamil] verses [known as aacu, mathuram, ciththiram and viththaaram]. You are the Foremost Gem of the celestial world!) You are the Foremost Gem of the celestial world (suraloka sikhamaNi)!

கந்தர் அநுபூதி 6-10

Image
Learn From Guruji ராகம் : கௌளை திணியான மனோ சிலை மீது, உனதாள் அணியார், அரவிந்தம் அரும்பு மதோ? பணியா? ..என, வள்ளி பதம் பணியும் தணியா அதிமோக தயா பரனே. 6 thiNiyaana manO chilai meeth- una thaaL, aNiyaar aravinDa- marumbu mathO paNiyaa ena vaLLi paDam paNiyum, thaNiyaa athi mOha Dayaa paranE 6 Would thy beautiful lotus-like feet bloom in my heart that is hard as a stone? You have so much unquenchable love for Valli that you show reverence to her feet and ask her, "What service can I do for you?". (meaning, with so much compassion that You display, is it any wonder that that Your lotus feet has gracefully bloomed on my hard heart.) கல் போன்று இறுகிய என்னுடைய நெஞ்சத்தில், உனது அழகிய தாமரை போன்ற தாள் மலருமோ! (மலர்வதற்கு அருள் புரிவாயாக) ‘நான் என்ன பணி செய்ய வேண்டும்’ என்று கேட்டு, வள்ளியின் பாதங்களைப் பணியும், மற்றும் வள்ளி மீது தணியாத அன்பு கொண்ட எல்லையற்ற பரிவின் உறைவிடமுமான பெருமானே! கெடுவாய் மனனே, கதி கேள், கரவாது இடுவாய், வடிவேல் இறைதாள் நினைவாய் ...

கந்தர் அநுபூதி 1-5

Image
கந்தர் அநுபூதி பத்தாம் திருமுறை திருமந்திரம் நூலுக்கு ஒப்பாக கருதப்படுகிறது. இடையன் உடலுக்குள் திருமூலர் புகுந்து திருமந்திரம் சொன்னது போல அருணகிரிநாதர் கிளி உடலுக்குள் இருந்துகொண்டு இந்த நூலைச் சொன்னார் எனக் கூறுவர். “அநுபூதி” என்றால் நேரடியான ஜீவாத்மா பரமாத்மாவுடன் ஐக்கியத்தை அடையும் சுய-அநுபவம். இதுவே இரண்டற்ற அல்லது அத்வைத ஐக்கியநிலையான ஆத்ம-சாக்ஷாத்காரம். மனமும், அஹமும் ஓடுங்கும் பொழுது ஆத்ம ஞானம் ஒளி விட ஆரம்பிக்கின்றது. விளக்கத்திற்கு அப்பாற்பட்ட, எதோடும் ஒப்பிட இயலாத, ஒரு அனுபவம் தான் ஆத்ம சாக்‌ஷாத்காரம். இந்த நிலையில் இறைவனையே எல்லாவற்றிலும் காண்பதோடல்லாமல், அவனை எல்லாமுமாகப் பக்தன் காண்கிறான். அவனுக்கு, இறைவன் அனைத்திலும் இருக்கிறான்; இறைவனே அனைத்துமாக இருக்கிறான்; உள்ளேயும் இறைவனே, வெளியிலும் இறைவனே, அனைத்தும் இறைவனே, எங்கும் இறைவனே. இறைவனே வழியும் (மார்க்கமும்), இலக்கும் (முடிவும்). இது ஒரு ஜீவன்முக்தர்களால் அநுபவிக்கப்படும் சகஜ அவஸ்தை என்று குறிப்பதான தெய்வீகமயமான அனுபவம். இது விவரிக்கக்கூடிய ஒன்று அல்ல, அநுபவிக்கப்பட வேண்டிய ஒன்று. Learn From Guruji ராகம்: ஹம்...

மயில் விருத்தம் – 11 : எந்நாளும் ஒருசுனையில்

ராகம் : மத்யமாவதி எந்நாளும் ஒருசுனையில் இந்த்ரநீ லப்போ திலங்கிய திருத்த ணிகைவாழ் எம்பிரான் இமையவர்கள் தம்பிரான் ஏறும்ஒரு நம்பிரா னான மயிலைப் பன்னாளும் அடிபரவும் அருணகிரி நாதன் பகர்ந்தஅதி மதுர சித்ரப் பாடல்தரு மாசறு வேல்விருத்தம் ஒருபத்தும் படிப்பவர்கள் ஆதி மறைநூல் மன்னான் முகம்பெறுவர் அன்னம் ஏறப்பெறுவர் வாணிதழு வப்பெ றுவரால் மகரால யம்பெறுவர் உவணம் ஏறப்பெறுவர் வாரிச மடந்தை யுடன்வாழ் அந்நாயகம் பெறுவர் அயிராவ தம்பெறுவர் அமுதா சனம்பெ றுவர்மேல் ஆயிரம் பிறைதொழுவர் சீர்பெறுவர் பேர்பெறுவர் அழியா வரம்பெ றுவரே.

மயில் விருத்தம் – 10 : நிராசத விராசத

ராகம் : மத்யமாவதி தாளம் : கண்டசாபு நிராசத விராசத வரோதய பராபர னிராகுல னிராமய பிரா னிலாதெழு தலாலற மிலானெறி யிலானெறி நிலாவிய உலாசஇ தயன் குராமலி விராவுமிழ் பராரை யமராநிழல் குராநிழல் பராவு தணிகைக் குலாசல சராசரம் எலாமினி துலாவிய குலாவிய கலாப மயிலாம் புராரிகும ராகுரு பராஎனும் வரோதய புராதன முராரி மருகன் புலோமசை சலாமிடு பலாசன வலாரிபுக லாகும் அயி லாயுதனெடுந் தராதல கிராதர்கள் குலாதவபி ராமவல சாதனன் விநோத சமரன் தடாரி விகடாசுரன் குடாரித படாதிகழ் ஷடாநநன் நடாவு மயிலே.

வேல் விருத்தம் 10 : வலாரி அலலாகுலம்

ராகம் : மத்தியமாவதி தாளம் : கண்டசாபு வலாரியல லாகுலமி லாதகல வேகரிய மாலறியு நாலு மறைநூல் வலானலை விலானசி விலான்மலை விலானிவர் மநோலய உலாசம் உறவே உலாவரு கலோலம கராலய சலங்களும் உலோகநிலை நீர்நிலையிலா வொலாவொலி நிசாசரர் உலோகம தெலாமழல் உலாவிய நிலாவு கொலைவேல் சிலாவட கலாவிநொ தவாசிலி முகாவிலொச னாசின சிலாத ணிவிலா சிலாமலர் எலாமதிய மோதமதி சேலொழிய சேவக சராப முகிலாம் விலாசகலி யாணகலை சேரபசு மேலைமுலை மேவிய விலாச அகலன் விலாழியி னிலாழியகல் வானில்அனல் ஆரவிடு வேழம்இளை ஞன்கை வேலே.

மயில் விருத்தம் – 9 : சிகர தமனிய

ராகம் : துர்கா தாளம் : கண்டசாபு சிகரதம னியமேரு கிரிரசத கிரிநீல கிரியெனவும் ஆயிரமுகத் தெய்வநதி காளிந்தி யெனநீழல் இட்டுவெண் திங்கள்சங் கெனவும்ப்ரபா நிகரெனவும் எழுதரிய நேமியென உலகடைய நின்றமா முகில் என்னவே நெடியமுது ககனமுக டுறவீசி நிமிருமொரு நீலக் கலாப மயிலாம் அகருமரு மணம்வீசு தணிகைஅபி ராமவேள் அடியவர்கள் மிடிய கலவே அடல்வேல் கரத்தசைய ஆறிரு புயங்களில் அலங்கற் குழாம் அசையவே மகரகன கோமளக் குண்டலம் பலஅசைய வல்லவுணர் மனம்அசைய மால் வரை அசைய உரகபிலம் அசையஎண் டிசைஅசைய வையாளி யேறு மயிலே.

வேல் விருத்தம் – 9 : தேடுதற்கு அரிது

ராகம் : துர்கா தாளம் : கண்டசாபு தேடுதற் கரிதான நவமணி அழுத்தியிடு செங்கரனை யமுதம் வாய்கொள் செயமளித் தருளெனக் கெனஉவப் பொடுவந்து சேவடி பிடித்ததெனவும் நீடுமைக் கடல்சுட்ட திற்கடைந் தெழுகடலும் நீயெமைக் காக்க எனவும் நிபிடமுடி நெடியகிரி எந்தமைக் காவெனவும் நிகழ்கின்ற துங்கநெடுவேல் ஆடுமைக் கணபணக் கதிர்முடிப் புடையெயிற் றடலெரிக் கொடிய உக்ர அழல்விழிப் படுகொலைக் கடையகட் செவியினுக் கரசினைத் தனியெடுத்தே சாடுமைப் புயலெனப் பசுநிறச் சிகரியிற் றாய்திமித் துடனடிக்குஞ் சமரமயில் வாகனன் அமரர்தொழு நாயகன் சண்முகன் தன்கை வேலே.

மயில் விருத்தம் – 8 : செக்கர் அளகேச

ராகம் : மாண்டு தாளம் : கண்டசாபு செக்கரள கேசசிக ரத்நபுரி ராசிநிரை சிந்தப் புராரி யமிர்தந் திரும்பப் பிறந்ததென ஆயிரம் பகுவாய்கள் தீவிஷங் கொப்புளிப்பச் சக்ரகிரி சூழவரு மண்டலங் கள்சகல சங்கார கோர நயனத் தறுகண்வா சுகிபணா முடியெடுத் துதறுமொரு சண்டப்பர சண்டமயிலாம் விக்ரம கிராதகுலி புனமீ துலாவிய விருத்தன் திருத்த ணிகைவாழ் வேலாயு தன்பழ வினைத்துயர் அறுத்தெனை வெளிப்பட வுணர்த்தி யருளித் துக்கசுக பேதமற வாழ்வித்த கந்தச் சுவாமிவா கனமா னதோர் துரககஜ ரதகடக விகடதட நிருதர்குல துஷ்டர் நிஷ்டூ ரமயிலே.

வேல் விருத்தம் – 8 : மாமுதல் தடிந்து

ராகம் : மாண்டு தாளம் : கண்டசாபு மாமுதல் தடிந்துதண் மல்குகிரி யூடுபோய் வலியதா னவர்மார்பிடம் வழிகண்டு கமலபவ னத்தனைச் சிறையிட்டு மகவான் தனைச்சி றைவிடுத் தோமவிரு டித்தலைவர் ஆசிபெற் றுயர்வானில் உம்பர்சொற் றுதிபெற்றுநா உடையகீ ரன்தனது பாடல்பெற் றுலகுதனில் ஒப்பில்புகழ் பெற்ற வைவேல் சோமகல சப்ரபா லங்கார தரஜடா சூடிகா லாந்தகாலர் துங்கரக்ஷ கத்ரோண கட்ககுலி சஞ்சூல துரககே சரமாம்பரச் சேமவட வாம்புயப் பரணசங் காபரண திகம்பர த்ரியம்பகமகா தேவ நந்தனகஜா நநசகோ தரகுகன் செம்பொற் றிருக்கை வேலே.

மயில் விருத்தம் – 7: தீரப் பயோததி

ராகம் : பீம்பளாஸ் தாளம் : கண்டசாபு தீரப் பயோததி (க) திக்குமா காயமுஞ் செகதலமு நின்று சுழலத் திகழ்கின்ற முடிமவுலி சிதறிவிழ வெஞ்சிகைத் தீக்கொப் புளிக்க வெருளும் பாரப் பணாமுடி அநந்தன்முதல் அரவெலாம் பதைபதைத் தேநடுங்கப் படர்சக்ர வாளகிரி துகள்பட வையாளிவரு பச்சைப்ர வாள மயிலாம் ஆரப்ர தாபபுள கிதமதன பாடீர அமிர்தகல சக்கொங் கையாள் ஆடுமயில் நிகர்வல்லி அபிராம வல்லிபர மாநந்த வல்லி சிறுவன் கோரத்ரி சூலத்ரி யம்பக ஜடாதார குருதரு திருத்தணி கைவேள் கொடியநிசி சரர்உதரம் எரிபுகுத விபுதர்பதி குடிபுகுத நடவு மயிலே.

வேல் விருத்தம் – 7 : அண்டங்கள் ஒருகோடி

ராகம் : பீம்பளாஸ் தாளம் : கண்டசாபு அண்டங்கள் ஒருகோடி ஆயினுங் குலகிரி அநந்தமா யினுமேவினால் அடையவுரு விப்புறம் போவதல் லதுதங்கல் அறியாது சூரனுடலைக் கண்டம் படப்பொருது காலனுங் குலைவுறுங் கடியகொலை புரியு மதுசெங் கநகா சலத்தைக் கடைந்துமுனை யிட்டுக் கடுக்கின்ற துங்க நெடுவேல் தண்டந் தநுத்திகிரி சங்குகட் கங்கொண்ட தானவாந் தகன்மாயவன் தழல்விழிக் கொடுவரிப் பருவுடற் பஃறலைத் தமனியச் சுடிகையின் மேல் வண்டொன்று கமலத்து மங்கையுங் கடல்ஆடை மங்கையும் பதம்வருடவே மதுமலர்க் கண்துயில் முகுந்தன்மரு கன்குகன் வாகைத் திருக்கை வேலே.

மயில் விருத்தம் – 6 : சங்கார காலம்

ராகம் : சிந்துபைரவி தாளம் : கண்டசாபு சங்கார காலமென அரிபிரமர் வெருவுறச் சகல லோகமு நடுங்கச் சந்த்ரசூ ரியரொளித் திந்த்ராதி அமரருஞ் சஞ்சலப் பட உமையுடன் கங்காளர் தனிநாட கஞ்செய்த போதந்த காரம் பிறந்திட நெடுங் ககனகூட முமேலை முகடுமூ டியபசுங் கற்றைக் கலாப மயிலாஞ் சிங்கார குங்கும படீரம்ருக மதயுகள சித்ரப் பயோ தரகிரித் தெய்வவா ரணவநிதை புனிதன் குமாரன் திருத்தணிமகீரதன் இருங் கெங்கா தரன்கீதம் ஆகிய சுராலய க்ருபாகரன் கார்த்தி கேயன் கீர்த்திமா அசுரர்கள் மடியக்ர வுஞ்சகிரி கிழிபட நடாவு மயிலே.

வேல் விருத்தம் – 6 : பந்தாடலில்

ராகம் : சிந்துபைரவி தாளம் : கண்டசாபு பந்தாட லிற்கழங் காடலிற் சுடர்ஊசல் பாடலினொ டாடலின்எலாம் பழந்தெவ்வர் கட்கம் துணித்திந்தி ரற்கரசு பாலித்த திறல் புகழ்ந்தே சந்தாரு நாண்மலர்க் குழல்அரம் பையர்களும் சசிமங்கை அனையர்தாமுந் தன்னைஅன் பொடுபாடி ஆடும்ப்ர தாபமும் தலைமையும் பெற்ற வைவேல் மந்தாகிநித்தரங் கச்சடில ருக்கரிய மந்த்ரஉப தேச நல்கும் வரதேசி கன்கிஞ்சு கச்சிகா லங்கார வாரணக் கொடி உயர்த்தோன் கொந்தார் மலர்க்கடம் புஞ்செச்சை மாலையுங் குவளையுஞ் செங்காந்தளுங் கூதாள மலருந் தொடுத்தணியு மார்பினன் கோலத் திருக்கை வேலே.

மயில் விருத்தம் – 5 : சோதியிம வேதண்ட

ராகம் : பாகேஸ்வரி தாளம் : கண்டசாபு சோதியிம வேதண்ட கன்னிகையர் தந்தஅபி நயதுல்ய சோம வதன துங்கத்ரி சூலதரி கங்காளி சிவகாம சுந்தரி பயந்த நிரைசேர் ஆதிநெடு மூதண்ட அண்டபகி ரண்டங்கள் யாவுங் கொடுஞ்சி றகினால் அணையுந்த னதுபேடை அண்டங்கள் என்னவே அணைக்குங் கலாப மயிலாம் நீதிமறை ஓதண்ட முப்பத்து முக்கோடி நித்தரும் பரவு கிரியாம் நீலகிரி வேலவன் நிராலம்பன் நிர்ப்பயன் நிர்வியா குலன்சங் குவாள் மாதிகிரி கோதண்ட தண்டந் தரித்தபுயன் மாதவன் முராரி திருமால் மதுகைட வாரிதிரு மருகன்முரு கன்குமரன் வரமுதவு வாகை மயிலே.

வேல் விருத்தம் – 5 : ஆலமாய் அவுணருக்கு

ராகம் : பாகேஸ்வரி தாளம் : கண்டசாபு ஆலமாய் அவுணருக் கமரருக் கமுதமாய் ஆதவனின் வெம்மைஒளிமீ தரியதவ முநிவருக் கிந்துவிற் றண்ணென் றமைந்தன்ப ருக்கு முற்றா மூலமாம் வினையறுத் தவர்கள்வெம் பகையினை முடித்திந்தி ரர்க்கு மெட்டா முடிவிலா நந்தநல் கும்பத மளித்தெந்த மூதண்ட மும்புகழும் வேல் ஏலமா யானையின் கோடதிற் சொரிமுத்து மின்பணைக ளுமிழு முத்தும் இனிவாடை மான்மதம் அகிலோடு சந்தனம் இலவங்க நறவமாருந் தாலமா மரமுதற் பொருள்படைத் திடும்எயினர் தருவநிதை மகிழ்நன் ஐயன் தனிநடம் புரிசமர முருகன்அறு முகன்குகன் சரவணக் குமரன் வேலே.

மயில் விருத்தம் – 4 : யுக கோடி

ராகம் : மனோலயம் தாளம் : ஆதி யுககோடி முடிவின் மண் டியசண்ட மாருதம் உதித்ததென் றயன் அஞ்சவே ஒருகோடி அண்டர்அண் டங்களும் பாதாள லோகமும் பொற்குவடுறும் வெகுகோடி மலைகளும் அடியினில் தகர்ந்திரு விசும்பிற் பறக்க விரிநீர் வேலைசுவ றச்சுரர் நடுக்கங் கொளச்சிறகை வீசிப் பறக்கு மயிலாம் நககோடி கொண்டவுணர் நெஞ்சம் பிளந்தநர கேசரி முராரி திருமால் நாரணன் கேசவன் சீதரன் தேவகீ நந்தனன் முகுந்தன் மருகன் முககோடி நதிகரன் குருகோடி அநவரதம் முகிலுலவு நீலகிரிவாழ் முருகன்உமை குமரன் அறு முகன்நடவு விகடதட மூரிக் கலாப மயிலே.

வேல் விருத்தம் – 4: அண்டர் உலகும்

ராகம் : மனோலயம் தாளம் : ஆதி அண்டர்உல குஞ்சுழல எண்திசைக ளுஞ்சுழல அங்கியும் உடன்சுழலவே அலைகடல்க ளுஞ்சுழல அவுணருயி ருஞ்சுழல அகிலதல முஞ்சுழலவே மண்டல நிறைந்தரவி சதகோடி மதியுதிர மாணப் பிறங்கியணியும் மணிஒலியி னிற்சகல தலமுமரு ளச்சிரம வகைவகையி னிற்சுழலும் வேல் தண்டமுட னுங்கொடிய பாசமுட னுங்கரிய சந்தமுட னும்பிறைகள்போல் தந்தமுட னுந்தழலும் வெங்கணுட னும்பகடு தன்புறம் வருஞ்சமனையான் கண்டுகுலை யும்பொழுதில் அஞ்சலென மென்சரண கஞ்சம்உத வுங்கருணைவேள் கந்தன்முரு கன்குமரன் வண்குறவர் தம்புதல்வி கணவன் அடல் கொண்ட வேலே.

மயில் விருத்தம் – 3 : ஆதார பாதாளம்

ராகம் : சாரங்கா தாளம் : கண்டசாபு ஆதார பாதாளம் பெயரஅடி பெயரமூ தண்டமுக டதுபெயரவே ஆடரவ முடிபெயர எண்டிசைகள் பெயரஎறி கவுட்கிரி சரம்பெயரவே வேதாள தாளங்க ளுக்கிசைய ஆடுவார் மிக்கப் ரியப்படவிடா விழிபவுரி கவுரிகண் டுளமகிழ விளையாடும் விஸ்தார நிர்த்த மயிலாம் மாதாநு பங்கியெனு மாலது சகோதரி மகீதரி கிராத குலிமா மறைமுநி குமாரிசா ரங்கநந் தனிவந்த வள்ளிமணி நூபுர மலர்ப் பாதார விந்தசே கரனேய மலரும்உற் பலகிரி அமர்ந்த பெருமாள் படைநிருதர் கடகமுடை படநடவு பச்சைப் பசுந்தோகை வாகை மயிலே.

வேல் விருத்தம் – 3 : வேதாள பூதமொடு

ராகம் : சாரங்கா தாளம் : கண்டசாபு வேதாள பூதமொடு காளிகா ளாத்ரிகளும் வெகுளுறு பசாசகணமும் வெங்கழு குடன்கொடி பருந்துசெம் புவனத்தில் வெம்பசி ஒழிக்கவந்தே ஆதார கமடமுங் கணபண வியாளமும் அடக்கிய தடக்கிரியெலாம் அலையநட மிடுநெடுந் தானவர் நிணத்தசை அருந்திப் புரந்தவைவேல் தாதார் மலர்ச்சுனைப் பழநிமலை சோலைமலை தனிப்பரங் குன்றேரகம் தணிகைசெந் தூரிடைக் கழிஆவி னன்குடி தடங்கடல் இலங்கைஅதனிற் போதார் பொழிற்கதிர் காமத் தலத்தினைப் புகழும்அவ ரவர்நாவினிற் புந்தியில் அமர்ந்தவன் கந்தன்முரு கன்குகன் புங்கவன் செங்கை வேலே.

மயில் விருத்தம் – 2 : சக்ர ப்ரசண்டகிரி

ராகம் : மோகனம் தாளம் : கண்ட சாபு சக்ரப் ரசண்டகிரி முட்டக் கிழிந்துவெளி பட்டுக் ரவுஞ்ச சயிலந் தகரப் பெருங்கனக சிகரச் சிலம்பும்எழு தனிவெற்பும் அம்புவியும் எண் திக்குத் தடங்குவடும் ஒக்கக் குலுங்கவரு சித்ரப் பதம்பெயரவே சேடன்முடி திண்டாட ஆடல்புரி வெஞ்சூரர் திடுக்கிட நடிக்கு மயிலாம் பக்கத்தில் ஒன்றுபடு பச்சைப் பசுங்கவுரி பத்மப் பதங் கமழ்தரும் பாகீ ரதிச்சடில யோகீ சுரர்க்குரிய பரம உபதேசம் அறிவிக் கைக்குச் செழுஞ்சரவ ணத்திற் பிறந்தஒரு கந்தச்சுவாமி தணிகைக் கல்லார கிரியுருக வருகிரண மரகத கலாபத்தில் இலகு மயிலே. Learn The Song

வேல் விருத்தம் – 2 : வெங்காள கண்டர்

ராகம் : மோகனம் தாளம் : கண்ட சாபு வெங்காள கண்டர்கைச் சூலமுந் திருமாயன் வெற்றிபெறு சுடர் ஆழியும் விபுதர்பதி குலிசமுஞ் சூரன் குலங் கல்லி வெல்லா எனக்கருதியே சங்க்ராம நீசயித் தருளெனத் தேவருஞ் சதுர்முகனும் நின்றிரப்பச் சயிலமொடு சூரனுடல் ஒருநொடியில் உருவியே தனிஆண்மை கொண்ட நெடுவேல் கங்காளி சாமுண்டி வாராகி இந்த்ராணி கெளமாரி கமலாசனக் கன்னிநா ரணிகுமரி த்ரிபுரைபயி ரவிஅமலை கெளரிகா மாக்ஷிசைவ சிங்காரி யாமளை பவாநிகார்த் திகைகொற்றி த்ரியம்பகி அளித்த செல்வச் சிறுவன்அறு முகன்முருகன் நிருதர்கள் குலாந்தகன் செம்பொற் றிருக்கை வேலே. Learn The Song

மயில் விருத்தம் – 1: சந்தான புஷ்ப

ராகம் : ஹம்சத்வனி தாளம் : கண்டசாபு சந்தான புஷ்பபரி மளகிண் கிணீ முகச் சரணயுக ளமிர்தப்ரபா சந்த்ரசே கரமூஷி காரூட வெகுமோக சத்யப்ரி யாலிங்கனச் சிந்தா மணிக்கலச கரகட கபோலத்ரி யம்பக விநாயகன்முதற் சிவனைவலம் வருமளவில் உலகடைய நொடியில்வரு சித்ரக் கலாபமயிலாம் மந்தா கிநிப்பிரப வதரங்க விதரங்க வனசரோ தயகிர்த்திகா வரபுத்ர ராஜீவ பரியங்க தந்திய வராசலன் குலிசாயுதத் திந்த்ராணி மங்கில்ய தந்து ரக்ஷாபரண இகல்வேல் விநோதன் அருள்கூர் இமையகிரி குமரிமகன் ஏறுநீ லக்ரீவ ரத்னக் கலாப மயிலே.

வேல் விருத்தம் – 1: மகரம் அளறிடை

ராகம் : ஹம்சத்வனி தாளம் : கண்டசாபு மகரம்அள றிடைபுரள உரககண பணமவுலி மதியும்இர வியுமலையவே வளரெழிலி குடருழல இமையவர்கள் துயரகல மகிழ்வுபெறு மறுசிறையவாஞ் சிகரவரை மனைமறுகு தொறுநுளைய மகளிர்செழு செநெல்களொடு தரளம் இடவே செகசிரப கிரதிமுதல் நதிகள்கதி பெற உததி திடர்அடைய நுகரும் வடிவேல் தகரமிரு கமதமென மணமருவு கடகலுழி தருகவுளும் உறுவள் எயிறுந் தழைசெவியும் நுதல்விழியும் உடையஒரு கடவுள்மகிழ் தருதுணைவன் அமரர்குயிலுங் குகரமலை எயினர்குல மடமயிலும் எனஇருவர் குயமொடமர் புரியுமுருகன் குமரன்அறு முகன்எதிரும் விருதுநிசி சரர்அணிகள் குலையவிடு கொடியவேலே.

மயில் விருத்தம் காப்பு (சந்தன பாளித)

ராகம் : நாட்டை தாளம் : ஆதி சந்தன பாளித குங்கும புளகித சண்பக கடகபுயச் சமர சிகாவல குமர ஷடாநந சரவண குரவணியுங் கொந்தள பாரகி ராதபு ராதநி கொண்க எனப்பரவுங் கூதள சீதள பாதம் எனக்கருள் குஞ்சரி மஞ்சரிதோய் கந்தக்ரு பாகர கோமள கும்ப கராதிப மோகரத கரமுக சாமர கர்ண விசால கபோல விதானமதத் தெந்த மகோதர மூஷிக வாகன சிந்துர பத்மமுகச் சிவசுத கணபதி விக்ந விநாயக தெய்வ சகோதரனே.

11. வீரவாள் வகுப்பு

Image
ராகம் : பீம்பளாஸ் தாளம் : கண்டசாபு (2½) பூவுளோ னுக்குமுயர் தேவர்கோ னுக்கும்எழு பூவில்யா வர்க்கும்வரு துன்புதீர்த் திடுமே பூதசே னைக்குள் ஒரு கோடிசூர் யப்பிரபை போலமா யக்கரிய கங்குல்நீக் கிடுமே பூதிபூ சிப்பரமர் தோலைமேல் இட்டதொரு போர்வைபோல் நெட்டுறைம ருங்குசேர்த் திடுமே போரிலே நிர்த்தம்இடு வீரமா லக்ஷ்மிமகிழ் பூசைநே சித்துமலர் தும்பைசாத் திடுமே பாவரு பக்கொடிய சூரனார் பெற்றபல பாலர்மா ளத்தசைகள் உண்டுதேக் கிடுமே பாநுகோ பப்பகைஞன் மேனிசோ ரக்குருதி பாயவே வெட்டியிரு துண்டமாக் கிடுமே பாடுசேர் யுத்தகள மீதிலே சுற்றுநரி பாறுபேய் துய்த்திடநி ணங்களூட் டிடுமே பாடிஆ டிப்பொருத போரிலே பத்திரக பாலிசூ லப்படையை வென்றுதாக் கிடுமே ஆவலா கத்துதிசெய் பாவலோர் மெய்க்கலிக ளாமகோ ரக்களைக ளைந்துநீக் கிடுமே யாருமே அற்றவன்என் மீதொர்ஆ பத்துறவ ராமலே சுற்றிலும்இ ருந்துகாத் திடுமே ஆடல்வேள் நற்படைகள் ஆணையா வுக்குமுதல் ஆணையா வைத்துவலம் வந்துபோற் றிடுமே ஆலகா லத்தைநிகர் காலசூ லத்தையும றாதபா சத்தையும்அ ரிந்துபோட் டிடுமே மேவலார் முப்புரமும் நீறவே சுட்டஒரு மேருவாம் விற்பரமர் தந்தபாக் ...

12. பழனி வகுப்பு

ராகம் : மத்யமாவதி தாளம் : சதுச்ர துருவம் கண்ட நடை (35) எந்தவினை யும்பவமும் எந்தவிட மும்படரும் எந்தஇக லும்பழியும் எந்தவழு வும்பிணியும் எந்தஇகழ் வுங்கொடிய எந்தவசி யுஞ்சிறிதும் அணுகாமலே எந்தஇர வுந்தனிமை எந்தவழி யும்புகுத எந்தஇட முஞ்சபையில் எந்தமுக மும்புகலும் எந்தமொழி யுந்தமிழும் எந்தவிசை யும்பெருமை சிதறாமலே வந்தனைசெய் துன்சரண நம்புதல்பு ரிந்தஅருள் வந்தநுதி னந்தனிலும் நெஞ்சில்நினை வின்படிவ ரந்தரஉ வந்தருள்இ தம்பெறுவ தன்றிநெடு வலைவீசியே வஞ்சவிழி சண்டன்உறு கின்றபொழு துங்குமர கந்தஎன நன்கறைய வுந்தெளிவு தந்துயிர்வ ருந்துபய முந்தனிமை யுந்தவிர அஞ்சலென வரவேணுமே தந்தனன தந்தனன டிண்டிகுடி டிண்டிகுடி குண்டமட குண்டமட மண்டமென நின்றுமுர சந்திமிலை பம்பைதுடி திண்டிமமு ழங்கும்ஒலி திசைவீறவே தண்டஅமர் மண்டசுரர் மண்டைநிண மென்றலகை யுண்டுமிழ்தல் கண்டமரர் இந்திரன்வ ணங்குபத தண்டைசிறு கிங்கிணிபு லம்பிடவ ரும்பவனி மயில்வாகனா செந்தளிரை முந்துபடம் என்றுளம ருண்டுநிறை சந்தனவ னங்குலவு மந்திகுதி கொண்டயல்செ றிந்தகமு கின்புடைப துங்கிடவ ளைந்துநிமிர் மடல்சாடவே சிந்தியஅ ரம்பைபல வின்கனியில் ...

6. வேடிச்சி காவலன் வகுப்பு

ராகம் : நீலாம்பரி கண்டசாபு (2½) உதரகம லத்தினிடை முதியபுவ னத்ரயமும் உகமுடிவில் வைக்கும்உமை யாள் பெற்ற பாலகனும் உமிழ்திரை பரப்பிவரு வெகுமுக குலப்பழைய உதகமகள் பக்கல்வரு சோதிச் சடானனும் உவகையொடு கிர்த்திகையர் அறுவரும் எடுக்கஅவர் ஒருவரொரு வர்க்கவணொர் ஓர்புத்ரன் ஆனவனும் உதயரவி வர்க்கநிகர் வனகிரண விர்த்தவிதம் உடையசத பத்ரநவ பீடத்து வாழ்பவனும் உறைசரவ ணக்கடவுள் மடுவிலடர் வஜ்ரதர னுடையமத வெற்புலைய வேதித்த வீரியனும் உறைபெற வகுத்தருணை நகரின்ஒரு பத்தனிடும் ஒளிவளர் திருப்புகழ்ம தாணிக்ரு பாகரனும் உரககண சித்தகண கருடகண யக்ஷகணம் உபநிடம் உரைத்தபடி பூசிக்கும் வானவனும் ஒருவனும் மகிழ்ச்சிதரு குருபரனும் உத்தமனும் உபயமுறும் அக்நிகர மீதிற்ப்ர பாகரனும் அதிமதுர சித்ரகவி நிருபனும் அகத்தியனும் அடிதொழு தமிழ்த்ரயவி நோதக் கலாதரனும் அவரைபொரி யெட்பயறு துவரைஅவல் சர்க்கரையொ டமுதுசெயும் விக்நபதி யானைச் சகோதரனும் அவுணர்படை கெட்டுமுது மகரசல வட்டமுடன் அபயமிட விற்படைகொ டாயத்த மானவனும் அருணையில் இடைக்கழியில் உரககிரி யிற்புவியில் அழகிய செருத்தணியில் வாழ்கற்ப காடவியில் அறிவும்அறி தத்துவமும...

9. கடைக்கணியல் வகுப்பு

ராகம் : ஹிந்தோளம் தாளம்: ஆதி திச்ர நடை (12) அலைகடல் வளைந்து டுத்த எழுபுவி புரந்தி ருக்கும் அரசென நிரந்த ரிக்க வாழலாம் அளகைஅர சன்த னக்கும் அமரரர சன்த னக்கும் அரசென அறஞ்செ லுத்தி யாளலாம் அடைபெறுவ தென்று முத்தி யதிமதுர செந்த மிழ்க்கும் அருள்பெற நினைந்து சித்தி யாகலாம் அதிரவரும் என்று முட்ட அலகில்வினை சண்டை நிற்க அடல்எதிர் புரிந்து வெற்றி யாகலாம் இலகிய நலஞ்செய் புட்ப கமுமுடல் நிறம் வெளுத்த இபஅர செனும்பொ ருப்பும் ஏறலாம் இருவரவர் நின்றி டத்தும் எவர்எவர் இருந்தி டத்தும் ஒருவன்இவன் என்று ணர்ச்சி கூடலாம் எமபடர் தொடர்ந்த ழைக்கில் அவருடன் எதிர்ந்துள் உட்க இடிஎன முழங்கி வெற்றி பேசலாம் இவையொழிய வும்ப லிப்ப தகலவிடும் உங்கள் வித்தை யினையினி விடும்பெ ருத்த பாருளீர் முலையிடை கிடந்தி ளைப்ப மொகுமொகென வண்டி ரைப்ப முகையவிழ் கடம்ப டுத்த தாரினான் முதலிபெரி யம்ப லத்துள் வரையசல மண்ட பத்துள் முநிவர்தொழ அன்று நிர்த்தம் ஆடினான் முனைதொறு முழங்கி யொற்றி முகிலென இரங்க வெற்றி முறைநெறி பறந்து விட்ட கோழியான் முதியவுணர் அன்றுபட்ட முதியகுடர் நன்று சுற்று முதுகழுகு பந்தர் இட்ட வேலினான...

8. புய வகுப்பு

ராகமாலிகை அங்கதாளம் (26) 2 + 1½ + 2 + 4 + 1½ + 1½ + 2 + 2 + 1½ + 1½ + 1½ + 2½ + 2½ ராகம் : யமுனா கல்யாணி வசைதவிர் ககன சரசிவ கரண மகாவ்ருத சீல சால வரமுநி சித்தரை அஞ்சல் அஞ்சல் என்று வாழ்வித் துநின்றன மணிவட மழலை உடைமணி தபனிய நாணழ காக நாடி வகைவகை கட்டும ருங்கு டன்பொ ருந்து ரீதிக் கிசைந்தன வருணித கிரண வருணித வெகுதரு ணாதப சோதி யாடை வடிவுபெ றப்புனை திண்செ ழுங்கு றங்கின் மேல்வைத் தசைந்தன வளைகடல் உலகை வலம்வரு பவுரி வினோதக லாப கோப மயில்வத னத்துவி ளங்கும் அங்கு சங்க டாவிச் சிறந்தன வரைபக நிருதர் முடிபக மகர மகோததி தீயின் வாயின் மறுகவி திர்த்தயில் வென்றி தங்கு துங்க வேலைப் புனைந்தன மதியென உதய ரவியென வளைபடு தோல்வி சால நீல மலிபரி சைப்படை கொண்டு நின்று ழன்று சாதிக்க முந்தின மனகுண சலன மலினமில் தூியஅ தீதசு காநு பூதி மவுனநி ரக்ஷர மந்தி ரம்பொ ருந்தி மார்பிற் றிகழ்ந்தன வகைவகை குழுமி மொகுமொகு மொகென அநேகச மூக ராக மதுபம்வி ழச்சிறு சண்ப கஞ்செ றிந்த தாரிற் பொலிந்தன

10. மயில் வகுப்பு

Image
ராகம் : ராகமாலிகை             தாளம் : சதுச்ர ஏகம் ராகம் : பைரவி ஆதவனும் அம்புலியும் மாசுறவி ழுங்கியுமிழ் ஆலமரு வும்பணியி ரண்டும் அழுதே ஆறுமுகன் ஐந்துமுகன் ஆனைமுகன் எங்கடவு ளாமெனமொ ழிந்தகல வென்று விடுமே ஆர்கலிக டைந்தமுது வானவர்அ ருந்தஅருள் ஆதிபக வன்துயில்அ நந்தன் மணிசேர் ஆயிரம் இருந்தலைக ளாய்விரிப ணங்குருதி யாகமுழு துங்குலைய வந்த றையுமே ராகம் : நடபைரவி

7. சேவகன் வகுப்பு

ராகம் : மாண்ட் அங்கதாளம் (14½) 2 + 1½ 2 + 1½ + 2 + 1½ + 2 +2 இருபிறை எயிறு நிலவெழ உடலம் இருள்படு சொருபம் உடைக்கோ விடவே இறுகிய கயிறு படவினை முடுகி எமபடர் பிடரி பிடித்தே கொடுபோய் அருமறை முறையின் முறை முறை கருதி அதரிடை வெருவ ஒறுத்தால் வகையால் அறிவொடு மதுர மொழியது குழறி அலமரு பொழுதில் அழைத்தால் வருவாய்

5. பெருத்த வசன வகுப்பு

ராகம் : காபி தாளம் : ஆதி அருக்கன் உலவிய சகத்ர யமுமிசை யதிற்கொள் சுவையென அனைத்து நிறைவதும் அவஸ்தை பலவையு மடக்கி யகிலமும் அவிழ்ச்சி பெறஇனி திருக்கு மவுனமும் அசட்டு வெறுவழி வழக்கர் அறுவரும் அரற்று வனபொருள் விகற்ப மொழிவதும் அழுக்கு மலவிருள் முழுக்கின் உழல்வதை யடக்கி யவநெறி கடக்க விடுவதும் ராகம் : சந்திரகௌன்ஸ் எருக்கும் இதழியு முடிக்கும் இறைகுரு எமக்கும் இறையவன் எனத்தி கழுவதும் இரட்டை வினைகொடு திரட்டு மலவுடல் இணக்கம் அறவொரு கணக்கை யருள்வதும் இருக்கு முதலிய சமஸ்த கலைகளும் இதற்கி தெதிரென இணைக்க அரியதும் இறக்க எனதெதிர் நடக்கும் யமபடர் கடக்க விடுவதொர் இயற்கை யருள்வதும் ராகம் : ரஞ்சனி நெருக்கு வனவுப நிடத்தின் இறுதிகள் நிரப்பு கடையினில் இருப்பை யுடையதும் நெருப்பு நிலம்வெளி மருத்து வனமென நிறைத்த நெறிமுறை கரக்கும் உருவமும் நினைப்பு நினைவது நினைப்ப வனும்அறு நிலத்தில் நிலைபெற நிறுத்த வுரியதும் நிலைத்த அடியவர் மலைத்தல் அதுகெட நிவிர்த்தி யுறஅநு பவிக்கு நிதியமும் ராகம் : வசந்தா உருக்கு திருவருள் திளைத்து மகிழ்தர உளத்தொ டுரைசெயல் ஒளித்து விடுவதும் ஒளிக்கும...

3. வேல் வகுப்பு

Image
ராகம் : மோகனம் தாளம் : ஆதி திச்ர நடை (12) பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை கறுத்தகுழல் சிவத்தவிதழ் மறச்சிறுமி விழிக்குநிக ராகும் பனைக்கைமுக படக்கரட மதத்தவள கசக்கடவுள் பதத்திடுநி களத்துமுளை தெறிக்கவர மாகும் பழுத்தமுது தமிழப்பலகை யிருக்குமொரு கவிப்புலவன் இசைக்குருகி வரைக்குகையை யிடித்துவழி காணும் பசித்தலகை முசித்தழுது முறைப்படுதல் ஒழித்தவுணர் உரத்துதிர நிணத்தசைகள் புசிக்கவருள் நேரும் சுரர்க்குமுநி வரர்க்குமக பதிக்கும்விதி தனக்கும்அரி தனக்குநரர் தமக்குமுறும் இடுக்கண்வினை சாடும் சுடர்ப்பரிதி ஒளிப்பநில வொழுக்குமதி ஒளிப்பஅலை யடக்குதழல் ஒளிப்பவொளிர் ஒளிப்பிரபை வீசும் துதிக்குமடி யவர்க்கொருவர் கெடுக்கஇடர் நினைக்கினவர் குலத்தைமுத லறக்களையும் எனக்கொர்துணை யாகும் சொலற்கரிய திருப்புகழை யுரைத்தவரை யடுத்தபகை யறுத்தெறிய வுறுக்கியெழு மறத்தைநிலை காணும் தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி தரிக்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை கழற்குநிக ராகும் தலத்திலுள கணத்தொகுதி களிப்பினுண வழைப்பதென மலர்க்கமல கரத்தின்முனை ...

4. திருவேளைக்காரன் வகுப்பு

ராகம் : நாதநாமக்கிரியை தாளம் : கண்டசாபு (3½) ஆனபய பத்திவழி பாடுபெறு முத்தியது வாகநிகழ் பத்தசன வாரக் காரனும் ஆரமது ரித்தகனி காரணமு தற்றமைய னாருடனு ணக்கைபரி தீமைக் காரனும் ஆகமம்வி ளைத்தகில லோகமு நொடிப்பளவில் ஆசையொடு சுற்றுமதி வேகக் காரனும் ஆணவஅ ழுக்கடையும் ஆவியை விளக்கியநு பூதியடை வித்ததொரு பார்வைக் காரனும் ஆடலைவு பட்டமரர் நாடதுபி ழைக்கஅம ராவதிபு ரக்குமடல் ஆண்மைக் காரனும் ஆடகவி சித்ரகன கோபுரமு கப்பில்அரு ணாபுரியில் நிற்கும்அடை யாளக் காரனும் ஆயிரமு கத்துநதி பாலனும கத்தடிமை யானவர் தொடுத்தகவி மாலைக் காரனும் ஆறுமுக வித்தகனும் ஆறிருபு யத்தரசும் ஆதிமுடி வற்றதிரு நாமக் காரனும் யானெனதெ னச்சருவும் ஈனசம யத்தெவரும் யாரும்உணர் தற்கரிய நேர்மைக் காரனும் யாதுநிலை யற்றலையும் ஏழுபிற விக்கடலை யேறவிடு நற்கருணை யோடக் காரனும் ஏரகம் இடைக்கழிசி ராமலைதி ருப்பழநி யேரணிசெ ருத்தணியில் வாசக் காரனும்

173. சத்தி பாணீ

ராகம் : சிந்து பைரவி அங்கதாளம் (6) 1½ + 2 + 1½ + 1 சத்தி பாணீ நமோநம முத்தி ஞானீ நமோநம தத்வ வாதீ நமோநம விந்துநாத சத்து ரூபா நமோநம ரத்ந தீபா நமோநம தற்ப்ர தாபா நமோநம என்றுபாடும் பத்தி பூணா மலேயுல கத்தின் மானார் சவாதகில் பச்சை பாடீர பூஷித கொங்கைமேல்வீழ் பட்டி மாடான நானுனை விட்டிரா மேயு லோகித பத்ம சீர்பாத நீயினி வந்துதாராய்

172. தவள ரூப (குவளை பூசல்)

ராகம் : ஆனந்த பைரவி அங்கதாளம் (7½) 1½ + 2 + 2 + 2 தவள ரூபச ரச்சுதி யிந்திரை ரதிபுலோமசை க்ருத்திகை ரம்பையர் சமுக சேவித துர்க்கை பயங்கரி புவநேசை சகல காரணி சத்தி பரம்பரி யிமய பார்வதி ருத்ரி நிரஞ்சனி சமய நாயகி நிஷ்களி குண்டலி யெமதாயி சிவைம நோமணி சிற்சுக சுந்தரி கவுரி வேதவி தக்ஷணி யம்பிகை த்ரிபுரை யாமளை யற்பொடு தந்தருள் முருகோனே சிகர கோபுர சித்திர மண்டப மகர தோரண ரத்ந அலங்க்ருத திரிசிராமலை அப்பர் வணங்கிய பெருமாளே

171. அந்தோ மனமே

ராகம் : கல்யாணி தாளம் : திஸ்ர திரிபுடை (7) அந்தோமன மேநம தாக்கையை நம்பாதெயி தாகித சூத்திர மம்போருக னாடிய பூட்டிது இனிமேல்நாம் அஞ்சாதமை யாகிரி யாக்கையை பஞ்சாடிய வேலவ னார்க்கிய லங்காகுவம் வாஇனி தாக்கையை ஒழியாமல் வந்தோமிது வேகதி யாட்சியு மிந்தாமயில் வாகனர் சீட்டிது வந்தாளுவம் நாமென வீக்கிய சிவநீறும் வந்தேவெகு வாநமை யாட்கொளு வந்தார்மத மேதினி மேற்கொள மைந்தாகும ராவெனு மார்ப்புய மறவாதே

170. மலைக்கு நாயக (விலைக்கு)

ராகம் : ஹம்சவினோதினி அங்கதாளம் (9) 2 + 2 + 1½ +1½ + 2 மலைக்கு நாயக சிவக்காமி நாயகர் திருக்கு மாரனெ முகத்தாறு தேசிக வடிப்ப மாதொரு குறப்பாவை யாள்மகிழ் தருவேளே வசிட்டர் காசிபர் தவத்தான யோகியர் அகத்ய மாமுநி யிடைக்காடர் கீரனும் வகுத்த பாவினில் பொருட்கோல மாய்வரு முருகோனே நிலைக்கு நான்மறை மகத்தான பூசுரர் திருக்கொ ணாமலை தலத்தாரு கோபுர நிலைக்குள் வாயினில் கிளிப்பாடு பூதியில் வருவோனே நிகழ்த்து மேழ்பவ கடற்சூறை யாகவெ யெடுத்த வேல்கொடு பொடித்தூள தாஎறி நினைத்த காரிய மநுக்கூல மேபுரி பெருமாளே. கலக்க மாகவெ மலக்கூடி லேமிகு பிணிக்கு ளாகியெ தவிக்காம லேயுனை கவிக்கு ளாய்சொலி கடைத்தேற வேசெயு மொருவாழ்வே கதிக்கு நாதனி யுனைத்தேடி யேபுக ழுரைக்கு நாயெனை யருட்பார்வை யாகவெ கழற்கு ளாகவெ சிறப்பான தாயருள் தரவேணும்

169. வேத வெற்பிலே

ராகம் : பீம்ப்ளாஸ் ஆதி திஸ்ர நடை (12) வேத வெற்பி லேபு னத்தில் மேவி நிற்கு மபிராம வேடு வச்சி பாத பத்ம மீது செச்சை முடிதோய ஆத ரித்து வேளை புக்க ஆறி ரட்டி புயநேய ஆத ரத்தோ டாத ரிக்க ஆன புத்தி புகல்வாயே காது முக்ர வீர பத்ர காளி வெட்க மகுடாமா காச முட்ட வீசி விட்ட காலர் பத்தி யிமையோரை ஓது வித்த நாதர் கற்க வோது வித்த முநிநாண ஓரெ ழுத்தி லாறெ ழுத்தை யோது வித்த பெருமாளே.

168. எழுகு நிறை நாபி

ராகம் : ஹிந்தோளம் தாளம் : ஆதி எழுகுநிறை நாபி அரிபிரமர் சோதி யிலகுமரன் மூவர் முதலானோர் இறைவியெனு மாதி பரைமுலையி னூறி யெழுமமிர்த நாறு கனிவாயா புழுகொழுகு காழி கவுணியரில் ஞான புநிதனென ஏடு தமிழாலே புனலிலெதி ரேற சமணர்கழு வேற பொருதகவி வீர குருநாதா

167. மனையவள் நகைக்க

ராகம் : ரீதிகௌளை அங்க தாளம் 5½ (2 + 2+ 1½) மனையவள் நகைக்க வூரி னனைவரு நகைக்க லோக மகளிரு நகைக்க தாதை தமரோடும் மனமது சலிப்ப நாய னுளமது சலிப்ப யாரும் வசைமொழி பிதற்றி நாளு மடியேனை அனைவரு மிழிப்ப நாடு மனவிருள் மிகுத்து நாடி னகமதை யெடுத்த சேம மிதுவோவென் றடியனு நினைத்து நாளு முடலுயிர் விடுத்த போது மணுகிமு னளித்த பாத மருள்வாயே

166. தொல்லை முதல்

Image
ராகம் : பிருந்தாவன சாரங்கா கண்டசாபு (2 ½) தொல்லைமுதல் தானொன்று மெல்லியிரு பேதங்கள் சொல்லுகுண மூவந்த மெனவாகி துய்யசதுர் வேதங்கள் வெய்யபுல னோரைந்து தொய்யுபொரு ளாறங்க மெனமேவும் பல்லபல நாதங்கள் அல்கபசு பாசங்கள் பல்குதமிழ் தானொன்றி யிசையாகிப் பல்லுயிரு மாயந்த மில்லசொரு பாநந்த பெளவமுற வேநின்ற தருள்வாயே

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே