441. அனித்தமான
ராகம் : பூபாளம் சதுச்ர ஏகம் திஸ்ர நடை அனித்த மான வூனாளு மிருப்ப தாக வேநாசி யடைத்து வாயு வோடாத வகைசாதித் தவத்தி லேகு வால்மூலி புசித்து வாடு மாயாச அசட்டு யோகி யாகாமல் மலமாயை செனித்த காரி யோபாதி யொழித்து ஞான ஆசார சிரத்தை யாகி யான் வேறெ னுடல்வேறு செகத்தி யாவும் வேறாக நிகழ்ச்சி யாம நோதீத சிவச்சொ ரூபமாயோகி யெனஆள்வாய்